இதழ்-29

ஏகாதிபத்தியம் Imperialism – 05

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம்

ஒரு முன்னாள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடாக ஏகாதிபத்திய எதிர்ப்பி்னை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா காலப்போக்கில் தனது கொள்கைகளிலிருந்து விலகி இன்று முக்கிய ஏகாதிபத்திய சக்தியாக விளங்கி வருகிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், தியோடோர் ரூஸ்வெல்ட் மத்திய அமெரிக்காவில் செயல்படுத்திய தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் வுட்ரோ வில்சன் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டத்தில் “ஜனநாயகத்திற்காக உலகத்தை பாதுகாப்போம்” என்று முழங்கியது அமெரிக்காவின் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

அமெரிக்கா பெரும்பாலும் இராணுவப் படைகளால் ஆதரவளிக்கப்பட்டு அவை திரைக்குப் பின்னால் இருந்து பெரும்பாலும் இயக்கப்பட்டன. வரலாற்று பேரரசுகளின் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்கத்தின் பொதுவான கருத்துடன் இது ஒத்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவ தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது.

இலங்கையில் ஐரோப்பிய ஏகாதிபத்தியம்

போர்த்துக்கீசர்கள் (Portuguese)

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்த்துக்கீசர்கள்.

போர்த்துக்கீசிய மன்னரான ஹென்றி தனது கப்பல் மாலுமிகளை புதிய கடல்வழி பயணத்தை ஊக்குவித்ததன் காரணமாக வாஸ்கோடகாமா என்ற மாலுமி நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.

இலங்கைக்கு போர்த்துக்கீச தளபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில்
1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு 
கரையை அடைந்தது.

அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல்உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர்.  பின்னர்  இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீச வசப்பட்டது.

ஒல்லாந்தர்கள் (Dutch)

ஒல்லாந்தர்கள் என்பவர்கள் ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர்கள். 1638 
செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக 
போர்த்துக்கீச வசமிருந்த கரையோரப்
பகுதிகள் ஒல்லாந்தரால்
கைப்பற்றப்பட்டது.

ஆங்கிலேயர்கள் (British)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள். 1796 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

முதலில் கரையோர பிரதேசங்களில் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்ட ஆங்கிலேயர் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்தும் அயராது முயன்றார்கள்.

பின்னர் 1815 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கண்டி ஒப்பந்தத்தின் மூலம் முழு இலங்கையையும் தம்முடைய கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தார்கள்.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த ஏகாதிபத்தியம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

குட்டிச் சிவப்புப் பிரசங்கி இவள்!!!

Thumi2021

விபிள்டன் 2021

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 26

Thumi2021

Leave a Comment