Poly Cystic Ovarian Syndrome என்பது
- சூலகங்களில் உருவாகும் நீர்க்கட்டிகள்(Ovarian cysts) மற்றும்
- பெண்களில் மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படும் அசாதாரண நிலைமை மற்றும்
- பெண்களில் ஏற்படும் ஓமோன் சமனிலையின்மை என்பவற்றின் கூட்டாகும்.
இது மூன்று பெண்களில் ஒருவரைப் பாதிக்கிறது. பொதுவாக
பெண்களைப் பருவமடைவதில் இருந்து மாதவிலக்கு நிற்கும்
காலம் வரை எந்த நேரத்திலும் இது பாதிக்கலாம்.
இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் எவை ???
- பரம்பரை (குடும்ப மரபணுக்கள்)
- ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள்
- நிறை அதிகரிப்பு
PCOS -ன் அறிகுறிகள்
• ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு
இல்லாமலிருத்தல்
• குழந்தைப்பேறு இன்மை
• தலைமுடி மெலிதல் அல்லது உதிர்தல்
• முகம் அல்லது உடலில் அதிகப்படியாக முடி
வளர்தல்
• முகப்பருக்கள்
• எடை அதிகரித்தல்
• பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள்
• நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான உயர் அபாயம்
ஸ்கான் மற்றும் இரத்த பரிசோதனைகள்
- மீயொலி (அல்ட்ரா சவுண்டு) பரிசோதனை – இங்கு நீர்குமிழிகள் போன்ற பல நீர்க்கட்டிகள் சூலகங்களில் காணப்படும்.
- இரத்தத்தில் சீனியின் அளவு
- இரத்தத்தில் உள்ள கொலஸ்திரோல் அளவுகள்
எவ்வாறு இந்நோயின் பாதிப்புக்களை குறைக்கலாம் ???
- ஆரோக்கியமான உணவுகள்
- உடற்பயிற்சி
- உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையை பேணுதல்
- ஒழுங்கற்ற மாதவிலக்குகளை ஹார்மோன்கள், கருத்தடை
மாத்திரை மற்றும் பிற மருந்துகள் மூலம் நிர்வகிக்கலாம் - அதிகப்படியான முடியை மெழுகு தடவுதல், லேசர்
பயன்படுத்தி முடி அகற்றல், பிற முடி அகற்றும் உத்திகள்,
கருத்தடை மாத்திரை மற்றும் பிற மருந்துகள் போன்ற மூலம் நிர்வகிக்கலாம். - முகப்பருவை கருத்தடை மாத்திரை மற்றும் பிற மருந்துகள் மூலம் நிர்வகிக்கலாம்
சூலக நீர்க்கட்டிகள் உள்ள பெண்கள் கருத்தரித்தலை மேம்படுத்த வழிகள்
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை
- எடை குறைப்பு
- Metformin எனும் மருந்து நிறையைக் குறைக்க உதவும்
- கருவளர்ச்சி மாத்திரைகள்
- சூலகங்களில் துளையிடுதல் (Ovarian drilling)