இதழ்-29

வெள்ளைக் காதல் – 04

தனது மனைவிக்கு துணையாக இருக்கும் தனது பொறுப்பை கிரகித்து கொள்ள இளவரசர் ஃபிலிப்பிற்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

1956ஆம் ஆண்டில் தொலைதூர காமன்வெல்த் நாடுகளுக்கு இளவரசர் ஃபிலிப் பயணம் மேற்கொண்டார். இது அவர் தனது மனைவிக்கு துணையாக இருக்கும் கடமை குறித்த கேள்விகளை எழுப்பியது. இருப்பினும் இந்த தம்பதி தங்களின் பொறுப்புகளுக்கேற்ப, ஒரு முறையை வகுத்துக் கொண்டு அதை அடுத்த பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்து கடைப்பிடித்தனர்.

அரசின் தலைவராக அரசி தனது கடமையை ஆற்ற, குடும்பத் தலைவராக இளவரசர் ஃபிலிப் தனது கடமையை ஆற்றினார். வெளி உலகத்திற்கு அரசிதான் முதன்மையானவர். ஆனால் தனிப்பட்ட முறையில் இளவரசர்தான் முதன்மையானவர். 1960களின் அரச குடும்பம் குறித்த ஆவணப்படத்தில் விருந்தின் பொறுப்பை இளவரசர் ஃபிலிப் ஏற்றுக் கொண்டிருப்பார். ராணி சுத்தம் செய்வதற்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பார்.

பெரிய தேசிய நிகழ்வுகள், வெளிநாட்டு பயணங்கள், நாடாளுமன்ற தொடங்கங்கள், ஆண்டுவிழா, நன்றி உரை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ராணியுடன் செல்வார் இளவரசர் ஃபிலிப். இது குறித்த வீடியோக்களை நீங்கள் பார்த்தால், இருவரும் சிறிய தருணத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை காணலாம். ஒரு சின்ன சிரிப்பை பகிர்ந்து கொள்வார்கள். ஒரு பொதுவெளி நிகழ்ச்சியில் தனிப்பட்ட ஒரு நிகழ்வாக அது இருக்கும்.

பெரும்பாலும் இளவரசர் ஃபிலிப் கூட்டத்தினரிடையே அல்லது விருந்தினர்களிடையே உற்சாகமாக பேசி அரசியின் வருகைக்கு வழி செய்வார்.

இந்த தம்பதிக்கு வெவ்வேறு துறையில் ஆர்வங்கள் இருந்தன. ஒருமுறை இளவரசர், “மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் இருவருக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வங்கள் இருப்பது” என தெரிவித்திருந்தார்.

அரசிக்கு நாய்கள் மற்றும் குதிரைகள் என்றால் விருப்பம் அதிகம். எனவே அது தொடர்பான விஷயங்களில் தனது ஓய்வு நேரத்தை செலவழிப்பார். இளவரசர் ஃபிலிப் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுக்களில் ஆர்வமுடையவராக காணப்பட்டார். பின்நாட்களில் அவர் சாரட் பூட்டிய குதிரைகளை ஓட்டும் விளையாட்டில் ஈடுபட்டதை நாம் காணலாம்.

‘நதியில் நீந்தும் மீனை போன்று எனது தாத்தா அவர் விரும்பியதை செய்து கொண்டிருந்தாலும், அவர் இல்லாமல் அரசியால் ஒன்றும் செய்ய இயலாது” என 2012ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி தெரிவித்திருந்தார்.

இறுதியாக ‘தன்னால் இயன்றதை செய்த பிறகு” 2017ஆம் ஆண்டு தனது சேவையிலிருந்து ஓய்வுப் பெற்றார் இளவரசர் ஃபிலிப். இதன் பொருள் அரசி தனது அதிகாரபூர்வ கடமைகளை செய்யும்போது அவரை தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களில் வேறு யாருடனோ காணலாம் என்பதுதான். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நார்ஃபோக்கில் உள்ள சண்ட்ரிங்க்ஹாம் எஸ்டேட்டில் இந்த தம்பதியை அதிகமாக பார்த்திருக்கலாம்.

இருப்பினும் கோவிட் தொற்று காலத்தில், வின்சர் கோட்டையில் சிறிய பணியாளர்கள் குழுவுடன் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதை ஹெச்எம்எஸ் பபள் என்று அழைத்தனர்.

பெருந்தொற்று காலத்தில் இருவரும் ஒன்றாக அதிக நேரத்தை செலவிட்டனர். கோட்டைச்சுவர்களுக்குள் அவர்கள் தங்களது வாழ்க்கை பயணத்தில் பார்த்த, அனுபவித்த அசாதாரண விஷயங்களை மீண்டும் கண்முன் கொண்டு வந்திருக்கலாம்.

70 வருடங்களுக்கு மேல், ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்த இந்த தம்பதி தங்களது காதலை பெரிதும் வெளியில் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் காதல் கதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய நீடித்த ஒரு அரச குடும்ப காதல் கதை என்றால் மிகையில்லை.
அந்தக்காதல் கதையின் வாழும் சாட்சியாக கண்களில் நீர் நிறைய எலிசபெத் அந்த கதிரையில் இறுக்கத்துடன் இருக்கிறார். அவர் கண்ணெதிரே கண்ணுக்கு கண்ணாக இருந்த அவர் கணவர் உடல் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!
அந்தக் கல்லறையில் எழுதிவிடுங்கள்!

”கற்பு நிறை காதலன் ஒருவன் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறான்… “

இப்படிக்கு,
சாவித்துணை

Related posts

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 03

Thumi2021

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 03

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 08 – யார் மாப்பிள்ளை?

Thumi2021

Leave a Comment