இதழ்-30

தொழிலாகி விட்டதா பணி…?

எழுத்தறிவித்தவர்களை இறைவனாக பார்க்கச் சொன்னது எங்கள் பண்பாடு. மாணவர்களை ஏற்றி விட்டு அழகு பார்த்ததால்த்தான் ஏணிப்படிகளுக்கு ஒப்பிடப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் இன்று ஆசிரியப்பணிக்கு அப்பாற் பட்டவர்களாக மாறிவிட்டார்கள்.

அள்ள அள்ள குறையாத கல்விச் செல்வத்தை பெற வேண்டுமென்றால் அள்ளி அள்ளி பணச் செல்வத்தை தரவேண்டும் என்கிற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம். பல்கலைக் கழகங்களில் இலவசக் கல்வி கேள்விக் குறியாவதாக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தமே இல்லாமல் பாடசாலைக் கல்வியில் இலவசம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

பாடசாலைகளை நம்பிய கல்வி என்பது கேள்விக்குறியாக்கப்பட்ட நேரத்தில் பாடசாலைகள் கொரோனாவால் மூடப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்ப டுத்தி விஸ்வரூபமெடுத்து நிற்கின் றன தனியார் கல்வி வியாபாரங்கள். இணைய வசதியை பெறவே பொருளாதார ரீதியில் பல மாணவர் களுக்கு இயலாமலுள்ள போது இணைய கட்டணம், பரீட்சை கட்டணம், வகுப்பு கட்டணம், அச்சுப் பிரதிகளுக்கான கட்டணம் என வசூலிக்கப்படுகிறது பணம்! பாதுகாப்பற்ற சமூக வலைத்தள குழுக்களில் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பல விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரபல ஆசான்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களிடம் கற்றால்த் தான் சித்தியடைய முடியுமென்கிற எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்து விட்டார்கள். இதனால் பெருமளவான பிள்ளைகளும் பெற் றோரும் குறித்த ஆசிரியரிடமே எவ்வளவு கட்டணம் என்றாலும், எவ்வளவு ஏச்சு என்றாலும் செல்கின்றார்கள்.

ஆணிவேரான பாடசாலைக் கல்வி தனியார் மயப்படுத்தப்படுவதனால் வருகின்ற பாதிப்புக்கள் ஏராளம். ஒரு சில ஆசிரியர்களின் பேராசை காரணமாக இலவசக்கல்வி என்கிற வரப்பிரசாதம் இல்லாமல் போய்விடுமோ என்கிற அபாய சங்கை எழுப்ப வேண்டிய நேரம் இது.

இருப்பவர்களிடம் வாங்குங்கள். இல்லாதவர்களிடம் இலவசமாய் வழங்குங்கள். கல்விதான் எங்கள் மூலதனம். அதை பெற மூலதனம் தேவை என்கிற நிலையை உருவாக்கி விடாதீர்கள்!

Related posts

ஆஹா! கல்யாணம்…!

Thumi2021

சொந்தச் சிறைக்குள் சுதந்திரம்

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

Leave a Comment