இதழ்-30

கால்ப்பந்து ரசிகர்களுக்கு கொடையாகிப்போன கோடை…….!!!

சர்வதேச கால்பந்து ரசிகர்களுக்கு இந்த வருட கோடை கால விடுமுறை விருந்தாக Euro கிண்ணம் மற்றும் Copa America தொடர் என இரண்டு முன்னணி சர்வதேச கால்பந்து தொடர்கள் ஒன்றாக அரங்கேறியுள்ளது.

Covid-19 தொற்று காரணமாக சென்ற வருடம் நடைபெற இருந்த Euro கிண்ணம் பிற்போடப்பட்டு இவ் வருடம் Copa America தொடருடன் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

Euro கிண்ணம் 2020

ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த தொடரில் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் Group of Death என்ற பேரில் குழு F இல் முன்னாள் சாம்பியன்களான போர்த்துக்கல் ஜெர்மனி பிரான்ஸ் என முன்னணி அணிகள். பாவம் Hungary Group of Death இல் போய் சிக்கிட்டுது என்று நாமெல்லாம் Hungary ஐ நினைச்சு கவலை கொள்ள, Hungary மற்றைய 3 அணிகளுக்கும் சாவு பயம் காட்டி Group of Death இல் தன் பங்கிற்கு சுவாரஸ்யம் ஊட்ட குழு நிலையிலேயே தட்டு தடுமாறி போர்த்துக்கல் ஜெர்மனி பிரான்ஸ் அணிகள் Knock out சுற்றுக்கு தகுதி பெற்றன.

மறுபுறம் இத்தாலி நெதர்லாந்து பெல்ஜியம் இங்கிலாந்து என சத்தமில்லாமல் knock out சுற்றுக்கு நுழைந்தன. ஆனால் ஸ்பெயின் மற்றும் போலந்து குழு E இல் மாட்டி கொண்டு தடுமாற ஸ்பெயின் மட்டும் வெற்றிகரமாக அடுத்த சுற்றுக்கு செல்ல போலந்து குழு நிலையுடன் வீட்டுக்கு திரும்பியது. இவற்றை தவிர குழு நிலை போட்டிகளில் குறிப்பிட வேண்டிய அணிகள் டென்மார்க் மற்றும் செக் குடியரசு. முதல் போட்டியில் டென்மார்க் அணிக்கு மட்டுமில்லாமல் கால்பந்து உலகிற்கே அதிர்ச்சி அளித்த Christian Eriksen இன் மாரடைப்பு. எனினும் மீண்டு(ம்) வந்து knock out சுற்றுகளை எட்டி பாத்தது Denmark.

Round of 16 இல் முன்னாள் சாம்பியன் Portugal அணியின் பயணத்திற்கு பெல்ஜியம் அணி முற்று புள்ளி வகித்தது. ஜெர்மனி இன் கதையை England முடித்து வைத்தது. பிரான்ஸ் Switzerland இடம் தோல்வி கண்டு தாமாகவே வெளியேறியது. Group of Death இன் 3 அணிகளும் வெளியேற Netherlands கு அதிர்ச்சி அளித்து செக் குடியரசு காலிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதியில் முக்கிய போட்டியில் இத்தாலி பெல்ஜியம் அணிகள் மோத இத்தாலி வெற்றி பெற்று தனது இருப்பை உலகுக்கு அறிவிக்க England, ‘It’s coming Home’ என்று அரை இறுதியில் வந்து அறை கூவல் இட்டது. ஸ்பெயின் போராடி அரை இறுதிக்கு வந்து சேர்ந்தது. யாரும் எதிர் பாராத காலிறுதி போட்டியில் Denmark மற்றும் செக் குடியரசு அணிகள் மோத ரசிகர்களின் ஆதரவில் அரை இறுதிக்கு சென்றது Denmark.

அரை இறுதியில் இத்தாலி ஸ்பெயின் அணியை வென்று பழி தீர்க்க England Denmark அணியின் பயணத்தை அரை இறுதி உடன் முடித்து வசிக்க Euro கிண்ணம் 2020 இறுதி போட்டியில் இத்தாலி மற்றும் England அணிகள் மோத தயாராகின. It’s Coming Home என England கூவ No No It’s Coming to Rome என England ஐ இழுத்து விழித்தி Euro கிண்ணத்தை Rome இற்கு எடுத்து சென்றது இத்தாலி.

2018 உலக கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி தொடர்ச்சியாக 34 போட்டிகள் வெற்றி பெற்று Euro கிண்ணத்தை கைப்பற்றியதை இத்தாலி ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களும் இணைந்து கொண்டாட இங்கிலாந்து ரசிகர்கள் இதற்கு முன் யாரும் Penalty வாய்ப்பை தவற விட்டதில்லை என்ற நினைப்பில் இறுதி போட்டியில் Penalty வாய்ப்பை தவறவிட்ட Sancho, Rashford மற்றும் Sakho வை வறுத்தெடுக்க Euro கிண்ணம் Rome இல் காட்சி படுத்தப்பட்டது.

Copa America 2021

10 அணிகள் பங்கேற்ற Copa America தொடரில் உலகத்தின் எதிர்பார்ப்பு Messi Copa America வை வெல்வாரா இல்லையா என்பது ம‌ட்டுமே.

இரண்டே குழுக்கள். ஒரு பக்கம் Argentina மறு பக்கம் Brazil என எதிர் பார்த்தது போலவே இவ் இரு அணிகளின் ஆதிக்கமே இருந்ததது.
குழு நிலை போட்டிகள் வெறும் கண் துடைப்பென காலிறுதிக்கு தகுதி பெற்றன முன்னணி அணிகள். காலிறுதியில் Argentina தான் விளையாடிய போட்டியை விட Brazil Chile அணிகள் மோதிய போட்டியை ஆவலாக எதிர் பார்த்திருக்கும். காரணம் Chile அணி முந்திய தொடர்களில் Argentina கு ஏற்படுத்திய வடுக்கள். ஒழிந்தது சனி என Argentina ஆனந்தம் அடையும் வகையில் காலிறுதியில் Chile வெளியேறியது. Chile உடன் Uruguay அணியும் வெளியேற அரை இறுதியில் Argentina Colombia அணியையும் Brazil Peru அணியையும் எதிர் கொண்டன. IPL ல Mumbai Chennai Final விளையாடுற மாரி அரை இறுதி போட்டிகளில் வென்று இறுதி போட்டியில் மோதின Argentina மற்றும் Brazil.

ஒரு புறம் மெஸ்ஸிகாக Argentina கிண்ணம் வெல்லனும் என நடுநிலை ரசிகர்களும் Ronaldo இன் 2016 Euro கிண்ண வெற்றியை சமப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் மெஸ்ஸி ரசிகர்களும் Argentina பக்கம் சாய Brazil பக்கம் Ronaldo ரசிகர்கள் மெல்ல சாய அந்த பக்கம் Neymar ஐ கண்டு சற்று பின்வாங்கி மெஸ்ஸிகு Neymar பரவால்ல என Brazil பக்கமே நின்று கொண்டார்கள்.

ஒட்டு மொத்த உலக எதிர் பார்ப்பு ஒன்று தடையின்றி நிறைவேறியது. ஜூலை 10 2021 கால்பந்து உலகில் மறக்க முடியாத நாளானது. Argentina என்ற பேரில் Copa America 2021 இன் சாம்பியன் ஆனார் Messi. கடந்த முறைகளில் தனியே போராடிய Messi இம்முறை சக வீரர்களின் ஒத்துழைப்பில் கிண்ணம் வென்றார்.

2014 உலக கிண்ண இறுதி போட்டி தோல்வி.
2015 Copa America இறுதி போட்டி தோல்வி.
2016 Copa America இறுதி போட்டி தோல்வி.
வரிசையா இறுதி போட்டியில் தோல்வியுற்று ஓய்வின் விளிம்பில் நின்று திரும்பிய Messi “கையிலே ஆகாசம்…” என்று பாடல் ஒலிக்க Copa America கிண்ணத்தை தூக்கினார்.

Messi Copa América வென்றது மட்டுமல்லாமல் ஏறத்தாழ அனைத்து தனி நபர் விருதுகளையும் வென்றார். மெஸ்ஸி தவற விட்ட சாதனை சிறந்த கோல் காப்பாளர் விருதாக மட்டுமே என்னும் அளவிற்கு மற்றைய எல்லாத்தையும் வென்று மெஸ்ஸி Ronaldo விவாதங்களில் Ronaldo இன் Euro கிண்ண வெற்றியை முன்நிறுத்துவுபவர்கள் முன் கெத்தாக நின்றார்.

Messi Ronaldo விவாதம் முடிந்தது. மெஸ்ஸி வெற்றியாளர் என்று முடிவாகும் தருணத்தில் Euro கிண்ணம் 2020 இல் Round of 16 இல் வெளியேறிய Ronaldo வெறும் 4 போட்டிகளில் விளையாடி Euro Golden Boot வென்று தனது இருப்பை உறுதி படுத்த பட்டிமன்ற தீர்ப்பு போல் மெஸ்ஸி Ronaldo விவாதம் மெஸ்ஸி யும் Ronaldo வும் ஒண்ணு இருவரும் நமக்கு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறது இந்த உலக மண்ணு என முடிவாகியது.

-வைகரன்-

Related posts

தொழிலாகி விட்டதா பணி…?

Thumi2021

ஈழச்சூழலியல் 17

Thumi2021

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 04

Thumi2021

Leave a Comment