இதழ்-30

குறுக்கெழுத்துப்போட்டி – 27

இடமிருந்து வலம் →

1- காலங் கடந்து ஒரு பெருங் கவிஞனுக்கு வழங்கப்பட்ட அடைமொழி.
4- சோகமயமான ஓர் இராகம்
6- பூக்களை நாடி வருவது (குழம்பி)
7- உறக்கத்தில் வருவது (குழம்பி)
8- போக்குவரத்திற்கான அடிப்படைக் கண்டுபிடிப்பு (குழம்பி)
9- இடையில் நின்று காரியத்தை முடித்துக் கொடுத்தலை இப்படிச் சொல்வர்.
10- தகாத சொற்கள பேசுவது இது இருக்கக் காய் பறிப்பது போலாகும் என்கிறது குறள்.(திரும்பி)
12- கற்றவர்களே இது உடையவர்கள் என்கிறது இன்னொரு குறள்.(திரும்பி)
13- இடம் என்பதன் எதிர்ப்பதம்.
15- அறு சுவைகளில் ஒன்று
16- சொண்டினைக் குறிக்கும் சொல் (குழம்பி)
17- நோய் நிவாரணத்திற்காய் குடிப்பது (குழம்பி)
18- பசுமையான என்பதை குறிக்கும் அடைமொழி

மேலிருந்து கீழ் 

1- இராவணின் மனைவி
2- இராமன் புகுந்த இடம்
3- கர்ணனுடனே பிறந்தது
4- இப்போது அனைவரும் அணியவேண்டியது
5- பாடல் என்றும் சொல்லலாம்
7- இனிமையான குணம் (குழம்பி)
11- தாமரை மலரைக் குறிக்கும் ஒருசொல்
14- விவசாயிகளின் ஆயுதம் (குழம்பி)
15- ஓர் இராகம் (குழம்பி)
16- ஆபரணம் என்றும் சொல்லலாம்.

Related posts

கால்ப்பந்து ரசிகர்களுக்கு கொடையாகிப்போன கோடை…….!!!

Thumi2021

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021

சித்திராங்கதா – 30

Thumi2021

Leave a Comment