இரும்பு என்கின்ற கனிப்பொருளானது எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(Hemoglobin) மற்றும் தசையில் உள்ள மயோகுளோபினில் (Myoglobin) உள்ள பிரதான கூறாகும்.
மேலும் இரும்பு எமது உடலில் உள்ள பல நொதியங்களின் தொழிற்பாட்டுக்கும், DNA தொகுப்பிற்கும் மற்றும் சக்தி உற்பத்திக்கும் அவசியமானதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகமான சிறுவர்களில் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகின்றது.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான பிரதான காரணங்கள்
- இரும்புச் சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்ளுதல்
- சில நோய்கள் காரணமாக இரும்புச் சத்துள்ள உணவுகளின் அகத்துறிஞ்சல் பாதிப்படைதல்
- சில பூச்சி நோய்களால் மலத்துடன் குருதி வெளியேறுதல்
இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
- மூளை வளர்ச்சி பாதிக்கப்படல்
- கவனக்குறைவு
- கணித்திறன் குறைதல்
- சமூக-உள ரீதியான பாதிப்புக்கள்
- உடற்பயிற்சி திறன் குறைதல்
- கரி, கற்கள், மண் போன்ற உண்ணத்தகாத பொருள்களை உண்ணுதல்
- நுண்ணுயிர்களை கொல்லும் திறன் குறைதல் (Immune system functional defects)
- மூளையில் உள்ள நாளங்களில் இரத்தம் கட்டிபடும் தன்மை
- குருதிச்சோகை – களைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், மயக்கம் போன்ற அறிகுறிகள்
இரத்த பரிசோதனைகள் (Full blood Count)
- Full blood Count மூலம் ஈமோகுளோபினின் அளவு, செங்குருதிச் சிறுதுணிக்கையின் பருமன், செங்குருதிச் சிறு துணிக்கையில் உள்ள ஈமோகுளோபினின் செறிவு என்பவற்றை பார்க்கலாம்.
- Serum Ferritin – இரத்தத்தில் உள்ள இரும்புத் துணிக்கைகளின் அளவு.
சிகிச்சை முறைகள்
• சரியான இரும்புச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்
முக்கியமாக கீரை வகைகள், கோழிஇறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் போன்ற உணவுகளை உட்கொள்ளுதல். அவ்வாறு உண்ணும் போது தேசிப்புளி சேர்த்து உண்ணுதல்.
• உணவுடன் சேர்த்து தேனீர் அருந்துவதைத் தவிர்த்தல்
• சிறார்களுக்கு கிரமமாக பூச்சி மருந்தளித்தல்
• இரும்புச்சத்து மருந்து syrub ஆக கொடுக்கலாம். Orofer மற்றும் Mumfer என இருவகையான திரவ இரும்பு பாவிக்கப்படுகின்றது.
• கடுமையான இரத்தச்சோகையுடன் கூடிய இருதயப் பாதிப்பு ஏற்படுமிடத்து இரத்தம் ஏற்றப்பட வேண்டி ஏற்படும்.