இதழ்-31

டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரம் ஜான்னிக் சின்னர்

கடந்த ஆண்டு (2020), பிரெஞ்சு பகிரங்க (French Open) கிராண்ட்ஸ்லாம் தொடரில் காலிறுதிக்கு முன்னேறி அனைவரையும் வியக்க வைத்த ஜான்னிக் சின்னர் (Jannik Sinner); 2021, ஆகஸ்ட் மாதம் 9ம் திகதியன்று வாசிங்டனில் நடைபெற்ற சிட்டி பகிரங்க (Citi Open) தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி, இத்தாலியின் இன்னிசெனில் (Innichen, Italy) பிறந்த சின்னர், பதின்ம வயதில் (19 வயது) ஏரிபி (ATP) 500 மட்ட பட்டத்தை வென்ற முதல் வீரர் ஆனார்.

வடக்கு இத்தாலியில் வளர்ந்த சின்னர்க்கு, சிறுவயதிலே டென்னிஸ் மற்றும் காற்பந்து மீது ஈடுபாடு இருந்தது. பின்னர் 13 வயதில் தன் முழு கவனத்தையும் டென்னிஸ் மீது செலுத்தி, பயிற்சியாளர்கள் Riccardo Piatti மற்றும் Massimo Sartori உடன் பயிற்சியில் ஈடுபட்டார். தன் 17வயதில் 2019ம் ஆண்டு இளையோர் போட்டிகளில் விளையாடுவதை விட்டுவிட்டு ITF Futures இல் நுழைத்த சின்னர்; சனவரி, 2020 இல் 553வது இடத்திலிருந்து 78வது இடத்திற்கு அசுரவேகத்தில் முன்னேறி Top 100 க்குள் இடம் பிடித்தார். அத்துடன் ATP Newcomer of the Year 2019 எனவும் அறிவிக்கப்பட்டார்.

2020 இல் தன் கன்னி பிரெஞ்சு பகிரங்க தொடரில் காலிறுதி (QF) வரை முன்னேறி முன்னணி வீரரான ரஃபேல் நடாலிடம் தோல்வியுற்றார் சின்னர்: 2005இல் நடால் க்கு பின் தன் கன்னி பிரெஞ்சு ஓபன் ல் காலிறுதிக்கு முன்னேறிய சாதனையும் 2006 இல் நோவாக் ஜோகோவிச் க்கு (19வயது) பிறகு பிரஞ்சு ஓபன் ல் காலிறுதிக்கு முன்னேறிய இளைய வீரர் என்ற பெருமையும் கிடைத்தது.

ஏற்கனவே 2019இல் அடுத்த தலைமுறை ஏரிபி (Next Gen ATP Finals) பட்டம் பெற்ற இவர், 2020 இறுதியில் Sofia Open தொடரையும் 2021 ஆரம்பத்தில் Melbourne – Great Ocean Road Open தொடரையும் வென்று இரு ஏரிபி 250 பட்டங்களை தொடர்ச்சியாக பெற்றார். இதன் 2005 இல் ரஃபேல் நடால் க்கு பின் தொடர்ச்சியாக இரு பட்டங்களை பெற்ற ATP இளம் (19 வயது) வீரர் மற்றும் 2006 இல் நோவாக் ஜோகோவிச் க்கு பிறகு இரு முறை சாம்பியனான இளம் வீரர் என்ற சாதனைகளை படைத்தார்.

இதற்கிடையில், 2001 அவுஸ்திரேலியா பகிரங்க தொடரிற்கு தயாரான ரஃபேல் நடால் உடன் இரு வாரங்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு சின்னர் க்கு மெல்பேர்ண் நகரில் கிடைத்தது. சின்னர் குறித்து நடால் மெல்போர்னில் “I am sure he’s going to finish this year in a high position. I don’t have a doubt.” என்று கூறியதையும் கவனிக்க வேண்டும். முன்னாள் முதல் நிலை வீரரான Andy Roddick க்கும் சின்னரை வரவேற்று புகழாரம் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்கள் கழித்து தன் 19 வயதில் ஏரிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிக்கு முன்னேறிய பெருமையை 2021 மியாமி ஓபன் (Miami Open) தொடரின் இறுதியில் பங்கெடுத்து பெற்றுக் கொண்டார் சின்னர். 36 வருட கால மியாமி ஓபன் வரலாற்றில் முதல் இத்தாலியின் finalist மற்றும் 2வது youngest finalist என்ற சாதனைகளையும் தன் வசம் எடுத்துக் கொண்டார்.

தற்போது 19வயதில் ஏரிபி 500 பட்டத்தை வாசிங்டன் ஓபன் வென்றதோடு தரவரிசையில் பதினைந்தாவது (15) இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

டென்னிஸ் உலகினை கலக்கும் இந்த இளம் நட்சத்திரத்திற்கு மனமார்ந்த வாழ்த்து. ஜான்னிக் சின்னரின் எதிர்கால சாதனைகளுக்கு காத்திருப்போம்.

Related posts

வாயைத் திறவடா!

Thumi2021

தோற்றுவிட்டேன்

Thumi2021

குழந்தைகளில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு ( Iron deficiency in Children)

Thumi2021

Leave a Comment