இதழ்-32

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டு!

இலங்கையில் கொரோனா பேரிடர் மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறது. உலகளவில் கொரோனாவால் பெரும் ஆபத்தான நாடுகளாக அடையாளப்பட்டுள்ள ஆறு நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது மக்களுக்கு மரண பீதியை அதிகரித்துள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள மரண அச்சத்தையும் தாண்டி விலைவாசி உயர்வு என்பது உயிர் வாழ்வதற்கான நெருக்கடியை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுகை அதுசார்ந்த முடக்கங்களால் மக்கள் வருமானம் குறைவு, வருமான இழப்பு என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், விலைவாசி உயர்வும் இப்படி தாங்க முடியாத அளவில் சென்று கொண்டிருந்தால், எப்படி வீட்டு செலவை சமாளிப்பது?, இதில் எதை குறைப்பது? என்று தெரியாமல், ஏழை – எளிய, நடுத்தர குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன. தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

ஊரடங்கினால் பொருட்கள் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தடைகளும் இந்த விலைவாசி உயர்வுக்கு கூடுதல் காரணங்களாகும். காரணங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால், விலைவாசி உயர்வு என்பது இந்த கொரோனா நேரத்தில், அதன் பாதிப்புகளால் வாடிக் கொண்டிருக்கும் மக்களால் நிச்சயமாக தாங்கவே முடியாது. எனவே, அரசாங்கம் உடனடியாக விலைவாசியை மக்கள் தாங்கக் கூடிய அளவில் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கருத்து பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள் நியாயமானவையாகும். எனினும் நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்தின் கைகளை மீறிச்சென்று விட்டது என்பதும் நிதர்சனமானதே ஆகும். எனவே அரசாங்கத்தை விமர்சிப்பதால் மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற போவதில்லை. மக்கள் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.

நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வில் இலங்கை அதிகம் இறக்குமதிகளில் தங்கியிருக்கின்றமையும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. இவ்விலைவாசி உயர்வு நெருக்கடியின் பாதிப்புக்களை கடக்க சில தியாகங்களுடன் உள்ளூர் உற்பத்திகளையும் அதன் பயன்பாடுகளையும் இலங்கை மக்கள் அதிகரிப்பார்களாயின், இது எதிர்காலத்திலும் இலங்கையை தன்னிறைவு பொருளாதார வலிமையுடைய தேசமாக மிளிர வழி ஏற்படுத்தும்.

எவ்அபத்தத்திலும் ஏதொவொரு சிறு நன்மையும் புதைந்தே காணப்படும். இதுவே உலக சமநிலைக்கும் இதுவரையான உலக இருப்புக்கும் காரணமாயுள்ளது.

குறைகளை கடந்து சில தியாகங்களுடன் பெரும் நன்மையை நோக்கி பயணிக்கக தடங்களை தேடுவோம்.

Related posts

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

Thumi2021

சித்திராங்கதா – 32

Thumi2021

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள் – 01

Thumi2021

Leave a Comment