சூழலின் வளங்கள் எனக் குறிப்பிடப்படும் நீர், காற்று, நிலம், தாவரம் போன்றவற்றின் இயல்பு நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற சிதைவு சூழல் தரமிழத்தல் எனப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து எப்போது மனிதன் சூழலை மாற்றியமைக்க விரும்பினானோ அன்றிலிருந்தே சூழலின் பல்வேறு மாற்றங்களுக்கு முகங்கொடுக்கத் தொடங்கியது. அந்தவகையில் சூழல் தரமிழத்தலில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் பாதிப்பதன் மூலம் சூழல் தரமிழத்தல் ஏற்படுகின்றது.
வளிமாசடைதல், ஓசோன்படை தேய்வடைதல், காலநிலை மாற்றம், திண்மக்கழிவுப் பிரச்சினைகள், நீர்மாசடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் சூழல் தரமிழப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. சூழல் தரமிழத்தலில் செல்வாக்குச் செலுத்துகின்ற சமூக பொருளாதாரக் காரணிகளாக சனத்தொகை அதிகரிப்பு, நகராக்கமஇ வறுமை, சமயச்சடங்குகள், விழாக்கள், நவீன வாழ்க்கை முறை, விழாக்கள், கண்காட்சிகள் போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.
சூழல் தரமிழப்பில் செல்வாக்குச் செலுத்துவதில் சனத்தொகைக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது. சனத்தொகை என்பது உண்மையிலே அபிவிருத்தி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதொரு வளமாக இருக்கின்ற அதேவேளை, மற்றொரு பக்கத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கின்றபோது, அது சூழல் தரமிழப்பில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரும் மூலமாகவும் காணப்படுகின்றது. சூழலின் வளங்கள் வரையறைக் குட்பட்டவையாகக் காணப்படுகின்றன. ஆனால் சனத்தொகை அபரிதமான வளாச்சியை அடைகின்றபோது குறிப்பிட்ட சூழல் தொகுதியினால் தாங்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. தாங்க முடியாத நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சூழல் தரமிழத்தலிற்கு உள்ளாக்கப்படுகின்றது.
சனத்தொகை அதிகரிப்பானது இயற்கை வளங்களின் பாவனை, அடிப்படைத் தேவை உற்பத்தி ஆகியவற்றினால் உயிரினப் பலவகைமை இழப்பு, காற்று மற்றும் நீர் தரமிழத்தல் மற்றும் வரட்சியான நிலங்களின் மீதான அழுத்தம் போன்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது.
சூழல் சமநிலையானது சனத்தொகை வளர்ச்சி அல்லது அதிகரிப்புடன் தொடர்புபட்டுள்ளது. ஏனெனில் சனத்தொகை வளர்ச்சியானது பல்வேறு தேவைகளை வேண்டி நிற்கின்றது. சனத்தொகை வளர்ச்சியானது முக்கியமானதொரு வியடமாக இருக்கின்றது. குறிப்பாக ஒரு பிரதேசத்திலுள்ள வளங்களின் உற்பத்தி, பரம்பல், மற்றும் பயன்பெறுதல் ஆகியவற்றுடன் தங்கியுள்ளது.
ஒரு பிரதேசத்தில் காணப்படும் சராசரியான சனத்தொகையினால் அதிகளவில் சூழல் தரமிழப்பதில்லை. மாறாக அதிகரித்த சனத்தொகை காணப்படுகின்றபோது அங்குள்ள ஒவ்வொரு நபருக்கும் வசிப்பதற்கான இடம், உணவுத் தேவை, வைத்தியசாலை, கல்வியகங்கள் என்பவற்றை வேண்டி நிற்கின்றது. இத்தகைய நிலைமைகள் சூழலிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
நவீனவாழ்க்கை முறை காரணமாகவும் சூழல் தரமிழத்தலுக்கு உள்ளாகின்றது. பல இளைஞர்கள் இன்று நவீனத்துவமான வாழ்க்கை முறையினையே பெரிதும் விரும்புகின்றனர். பாhதியளவிலான ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தல், பொருத்தமான நவீன ஆடைகள், வேகமான தனிநபர் வாகனங்கள் போன்றவற்றின் பாவனையினை விரும்புகின்ற போக்கு காணப்படுகின்றது. அத்துடன் இன்று தமது வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விடுத்து துரித உணவிற்காக உணவு விடுதிகளை நாடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. இதனால் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
உணவகங்களை அதிகளவில் அமைப்பதற்காக இயற்கையான இடங்கள் மாற்றியமைக்கப்படுவதுடன், அதிகளவில் மரங்கள் அழிக்கப்படுவதுடன், இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. அத்துடன் உணவகங்கள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் மாசடைவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
அறிவோம்…