இதழ்-32

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல்

இந்தியா வில் நடைபெற இருந்த ஐ.சி.சி ஆண்கள் ரி20 உலக கிண்ணம் 2021, வருகிற ஒக்டோபர் மாதம் 17ம் திகதி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான்-ல் ஆரம்பமாகிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 14 திகதி டுபாய்-ல் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணியினை முதலாவதாக நியூசிலாந்து அறிவிக்க அதை தொடர்ந்து அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

நியூசிலாந்து
கடந்த இரு உலகக் கிண்ணங்களின் (2015,2019) போது இறுதி வரை முன்னேறிய அணி, கடந்த 2016 உலக ரி20 கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வென்று அசத்தியுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, காலம் காலமாக கறுப்பு குதிரைகளாக இருந்து இம்முறை கிண்ண வெல்வ வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலிடம் மற்றும் ரி20 சர்வதேச தரவரிசையில் மூன்றாம் இடம் என அனைத்திலும் பிரகாசித்து வருகிறது.

அணி விபரம்: Kane Williamson (c) – Todd Astle – Trent Boult – Mark Chapman – Devon Conway – Lockie Ferguson – Martin Guptill – Kyle Jamieson – Daryl Mitchell – Jimmy Neesham – Glenn Phillips – Mitchell Santner – Tim Seifert (wk) – Ish Sodhi – Tim Southee. மாற்று வீரராக Adam Milne 16வதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேகப் பந்து வீச்சில் ரிம் சௌவ்தி, ரென்ட் போல்ட், கேல் ஜமிசன், லுக்கி பெர்குசன் என்று ஒரு பட்டாளமும் சோதி, மிட்செல் சான்ட்னர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களுடன் கேன் வில்லியம்சன், மார்டின் குப்ரில், டேவன் கென்வே என்று தரமான துடுப்பாட்ட வீரர்களும் உள்ளனர். அத்துடன் விக்கெட் கீப்பராக ரிம் செய்வேட், கிளென் பிலிப்ஸ் மற்றும் சகலதுறை வீரர்களாக ஜிம்மி நீசம்ஸ், மார்க் சாம்மன் உம் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக அதிரடியாகவும் சூழல் நிலைக்கேற்பவும் ஆடக்கூடிய வலுவான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

முன்னணி வீரர்களான ரோஸ் டெய்லர் மற்றும் கொலின் மன்ரோ போன்றோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.மார்க் சாம்மன், 2014 மற்றும் 2016 ரி20 உலக கிண்ணத்தில் கொங் கொங் அணி சார்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கடந்த 2016ம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்திற்கு பின் மொத்தமாக 52 ரி20 சர்வதேச ஆட்டங்களில் 25 வெற்றி மற்றும் 22 தோல்வி உடன் 3 சமநிலை மற்றும் 2 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது.

இதுவரை ரி20 உலக கிண்ணத்தில் மொத்தமாக 30 ஆட்டங்களில் விளையாடி 15 வெற்றி, 13 தோல்வி மற்றும் 2 சமநிலை கிடைத்துள்ளது; அத்துடன் இருதடவை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலியா
இதுவரை ரி20 உலக கிண்ணத்தில் மொத்தமாக 29 ஆட்டங்களில் விளையாடிய அவுஸ்திரேலியாவுக்கு 16 வெற்றி மற்றும் 13 தோல்வி கிடைத்துள்ளது.
ஐந்து உலகக் கிண்ணங்கள் மற்றும் இரண்டு சாம்பியன் கோப்பைகளை வென்ற அணி , கடந்த காலத்தில் ரி20 உலக கிண்ண தொடரில் 2007 மற்றும் 2012 இல் அரையிறுதிக்கும் 2010 இல் இறுதிக்கும் முன்னேறியது; இதை விடுத்து கடந்த இரு தொடர்களில் அரையிறுதியை கூட எட்டிப்பார்க்க வில்லை. தற்போது ரி20 சர்வதேச தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளது அவுஸ்திரேலியா.

அணி விபரம்: Aaron Finch (c), Ashton Agar, Pat Cummins (vc), Josh Hazlewood, Josh Inglis, Mitchell Marsh, Glenn Maxwell, Kane Richardson, Steve Smith, Mitchell Starc, Marcus Stoinis, Mitchell Swepson, Matthew Wade, David Warner, Adam Zampa. மாற்று வீரர்களாக Dan Christian, Nathan Ellis, Daniel Sams அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களுடன் ஸ்டீவன் ஸ்மித் துடுப்பாட்ட வீரர்களாக அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹசல்வூட், கேன் ரிச்சார்ட்சன் இடம் பிடிக்க ரி20 சர்வதேச தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள அடம் சம்பா, அன்ரன் ஆகார் சூழற் பந்து வீச்சாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சகல துறை வீரர்களாக மார்க்ஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஸ் உடன் மேத்யூ வேட் மற்றும் புதுமுக வீரனான ஜோஸ் இங்லிஸ் விக்கெட் கீப்பர்களாக உள்ளன. அதிக ஆரம்ப வீரர்களில் தங்கியுள்ள அணிக்கு சரியான மத்திய வரிசை வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்ஸ் கடந்த இரு தொடர்களில் பெற்ற ஓட்டங்களினால், ஸ்டீவன் ஸ்மித் 5ம் அல்லது 6ம் இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது. பேப்பரில் வலுவான பந்து வீச்சு கூட்டணியாக இருக்கிற பந்து வீச்சாளர்கள் திறம் பட விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.

SOUTHAMPTON, ENGLAND – MAY 25: Australia captain Aaron Finch watches the replay during the ICC Cricket World Cup 2019 Warm Up match between England and Australia at Ageas Bowl on May 25, 2019 in Southampton, England. (Photo by Shaun Botterill/Getty Images)

அவுஸ்திரேலியா, கடந்த 2016ம் ஆண்டு ரி20 உலக கிண்ணத்திற்கு பின் மொத்தமாக 58 ரி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 29 வெற்றி, 27 தோல்வி மற்றும் 2 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது .

ஆட்டம் தொடரும்…,

Related posts

நத்தை மனிதர்கள் எச்சரிக்கை!

Thumi2021

ஈழச்சூழலியல் 19

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 28

Thumi2021

Leave a Comment