இதழ் 33

பாரதிகளை உருவாக்குவோம்!!!

“பல வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”

வரிகளில் மாத்திரமின்றி செயலாயும் வாழ்ந்த உன்னதமான கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வரிகளின் உண்மையை சமூகத்திற்கு உணரவைத்து நூறாண்டுகளாகிறது. ஆம், 2021 செப்ரெம்பர்-11ஆம் திகதி உலகத்தமிழர்கள் யாவரும் தாம் செறிந்து வாழும் நாடுகளிலெல்லாம் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள்.

நூற்றாண்டில், பாரதி எனும் கவிஞன் தனக்கென தனித்துவமான பாதையை அமைத்த வரலாறை இன்றைய தலைமுறைகள் அறிதலும், அவ்அனுபவத்தினை கொண்டு பாரதிகள் உருவாகுவதும் உருவாக்காப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

“கத்தி முனையை விட பேனா முனைக்கு வலிமை அதிகம்” என்பதை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய ஒரு மாபெரும் கவிஞர் பாரதி. சமூகம், பண்பாடு ஆகியவற்றின் இயக்கவியல் தன்மையை பாரதி நன்கு புரிந்து கொண்டார். இப்புரிதலின் அடிப்படையிலேயே, பழமைக்கும் புதுமைக்குமான முரண்பாட்டில், புதுமையின் வழி நின்று புதிய சமூகம், புதிய பண்பாடு ஆகியவற்றை உருவாக்குவதற்கான முற்போக்கான நவீன சிந்தனைப் போக்கு எது என்பதை இனங்கண்டு தன் கவிகளால் அடையாளப்படுத்தினார். வெகுசனங்களில் நம்பிக்கை கொண்டு, பரந்துபட்ட வெகுஜன எழுச்சிக்காகத் தன்னை இதய சுத்தியாக அர்ப்பணித்தார்.

இன்றைய களச்சூழல்களும் பேனா முனைகளால் புது சிந்தனைகளை வளரும் சமூகங்களுக்கு அறிவூட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இயற்கையை மனிதன் விஞ்சினான் என கற்பனையில் மார்தட்டுகையில் இயற்கை தன் பேராற்றலை காட்டி உலக இயக்கத்தையே குழப்பியுள்ளது. இக்குழப்பம் தீர புதுஉலகம் காண இன்று சிந்தனை புரட்சியே அதிகமாய் தேவைப்படுகிறது. இதனை வெகுசன கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதனை இணைக்கக்கூடிய வகையிலான பாரதிகள் உருவாக, உருவாக்க உழைத்திடுவோம்.

Related posts

இந்த பூமி என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 29

Thumi2021

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ!

Thumi2021

Leave a Comment