இதழ்-37

என் பெண்மையின் பரிபூரணமே

‘ஏனோ தெய்வம் சதி செய்தது..? பேதை போல விதி செய்தது?”

வானொலியில் கனத்த ரீங்காரமாய் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வானொலியின் ஒலி அவள்; வாழ்வொலியாகவும் அவள் மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எப்படி யாவது மூடிப்புதைத்து விட போராடிக்கொண்டிருக்கும் அவள் உள்ளக் கிடைக்கைகளை அந்தப் பாடல் மேலெழுப்பி விட்டது. இன்றைய அவளுடைய இரவுப்பொழுதினை ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. தினமும் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோடு சிரிப்புஜாலம் காட்டியபடியே உரையாடி விட்டு தன் ஒவ்வொரு அந்தரங்க இரவுகளில் அந்த அழியாத சோகங்களோடு போராடுவது தான் அவளுக்கு வழக்கமாகி போய்விட்டது.

ஆனால் இன்றைய இரவு கொஞ்சம் அசாதாரணமானது. என்றும் அவளை அரவணைக்கும் அந்தக் கண்ணீர்த்தோழி இன்று ஏனோ இவளோடு இல்லை. ஆறுதல் தேடி அருகிலே உறங்கிக்கொண்டிருந்த துவாரகனை ஆரத் தழுவிக்கொள்கிறாள்;. துவாரகன் அவளுடைய மூத்த மகன். அந்த ஊர் மக்களைக் கேட்டால் ‘மன வளர்ச்சியற்றவன்..” ‘மூளை வளர்ச்சி குறைந்தவன்..” ‘கைகால் அசைக்க மாட்டான்..” என்று ஆளுக்கொரு கதையாய் ஆயிரம் கதைகள் அவனைப்பற்றிச் சொல்வார்கள். ஆனால் அவளைப் பொறுத்தமட்டில் ‘தன் மகன் துவாரகன்”. அது மட்டும் தான் அவளுக்கு தெரிந்த ஒற்றை உண்மை. துவாரகனிற்கு ஊர்மக்கள் கொடுத்த அடைமொழிகளை எல்லாம் அவள் கண்டுகொள்வதே இல்லை. ஏன் கண்டு கொள்ள வேண்டும்? கண்டு கொள்வதால் மட்டும் என்ன மாறிவிடப்போகிறது?

வுpழித்திருக்கும் பொழுதுகளில் யாருடைய தொடுகையையும் துவாரகன் அனுமதிப்பது கிடையாது. அவன் தாயின் ஸ்பரிசத்தை தவிர. அது மட்டும் அவனுக்கு ஏனோ தேவை என்று தோன்றுகிறது. சிமிட்டும் கண்கள் மட்டுமே அவன் உடம்பில் அவன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஏனைய உறுப்புக்கள் அனைத்தும் அவன் அன்னையின் அரவணைப்பிற்கே கட்டுப்பட்டது. ஆவன் பாதங்கள் இரண்டும் பயனற்றுப்போனதால் இரண்டு சக்கரப்பாதங்களோடு ஒரு வண்டிதான் அவன் பாதி உடலாய் அமைந்திருந்தது. தொண்டைக்குள் செல்லும் பலகாரங்களுக்கு பற்கள் செய்யம் உபகாரம் எதுவும் அவன் பற்களுக்கு தெரியாது. பற்களின் பணிவிடையும் சேர்த்து அவன் தாயின் பணி ஆனது. ஆரைத்த உணவுகளையே அவன் தொண்டைக்குள் அனுப்பினாள். ‘அ….உ……’ என்ற எழுத்துக்கள் மட்டும் தான் அவன் மொழியில் விசாலமாய் அமைந்திருந்தன. தாய் இருக்கும் தைரியத்தில் வேண்டியதை கேட்கும் வழி தெரியாமலே ஒன்பது வருடங்கள் வளர்ந்து விட்டான்.

ஊர்மக்கள் பேச்சையெல்லாம் கண்டுகொள்ளாத அவள் மனோதிடம் கூட துவாரகனின் அன்னையாய் அவள் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றிதான். துவாரகன் காதுபடவே அந்த ஊர்மக்கள் பேசும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாதவனாய் அவன் பதிலளிப்பது மாறாத அந்தப் புன்னகையை மட்டுமே. அந்த கேவலமான மனிதர்களின் நடத்தைகளையம் அவர்களின் மொழிகளையும் புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் குழந்தை போலவே சிரித்தபடி வாழும் தன் மகனின் பாக்கியத்தை எண்ணி அவள் பெருமிதப்படுவதுமுண்டு.

ஆனால் இன்றைய இரவு அவள் துணிந்து எடுத்து விட்ட இந்த முடிவுதான் அடங்காத தீயாய் மனம் முழுவதும் கனன்று எரிந்து கொண்டிருந்தது. தலைபடா இடமெல்லாம் தலையணை குளிரும் அந்த மார்கழி இரவில் அவள் மனம் மட்டும் அந்த தீயின் உஷ்ணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

‘க்கும்..க்கும்…’ எங்கிருந்தோ அந்த இருமல் சத்தம் நிசப்த இரவில் அவள் செவிகளுக்குள் எளிதாகவே நுழைந்து கொள்கிறது. இவளுள் எரிந்து கொண்டிருக்கின்ற தீயிற்கு தன் தந்தையின் அந்த சத்தம் தான் எண்ணெயட ஊற்றிக் கொண்டிருக்கிறது.

பருவப்பொழுதினை அவள் எட்டியிருந்த சமயம் ஊர் கூடித்தேர் இழுக்கும் அம்பிகையின் சிலை போல் அவள் வதனம் ஜொலிக்கும்;. ஆந்த ஊரே அவளை மிக உன்னிப்பாக அவதானித்து வந்தது. தடக்கி விழுந்தால் தூக்கி விட அல்ல. வேடிக்கை சேதியை நான்கு பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு.

எதிர்பார்த்த குழியில் அவளும் விழுந்தாள். இரண்டு மாதக்கருவோடு வந்து தந்தை குமாரசாமி முன் நிற்க எதிர்ப்பேச்சு பேசாமல் மறுநாளே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் குமாரசாமி. படிப்பறிவில்லாதவன் தொழில் எங்கு தேடுவது என்று எப்படியோ பணந்திரட்டி விமானத்தில் அவனை அனுப்பி வைத்தார்.

ஐந்து வருடங்களில் திரும்பி வர கூட பணம் இல்லாமல் நின்றவனின் சேதி அறிந்து மீண்டும் பணம் அனுப்பி வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டோடு மாப்பிள்ளையாய் நகர்ந்த மூன்றாம் நாளே முக்கலும் முனகலுமாய் தொடங்கியது. தாய் தந்தை கூடவிருக்கும் தைரியத்தில் இவள் வார்த்தைகளில் வலு ஏற்றினாள். வீட்டுச்சண்டை தெரு வரைக்கும் நகர்ந்தது. சீதனம் என்னும் பெயரில் குமாரசாமியிடம் கொஞ்சம் பணம் பிடுங்கிக் கொண்டு இந்தியாவிற்கு போறன் என்று போனவன் போனவன்தான்.

‘இண்ட வரைக்கும் ஒருரூவா கூட கண்ணில காட்டியிருப்பானா அந்தப் படுபாவி. அப்பாவும் எல்லாத்தையும் பொறுத்து பொறுத்து போன மனுசன். அவன் வந்த நாள்ல இருந்து அவருக்கு சந்தோசம் எண்டதே இல்லாம போவுட்டு. ஏதோ ரண்டே ரண்டு பேரப்புள்ளையல மட்டுந்;தானே தரமுடிஞ்சுது அந்த ஆண்மையில்லாத கோழையால…”

படுத்திருந்த படியே உள்மொழியாய் வார்த்;தைகளை முனகிக் கொண்டிந்தாள்.

புற்று நோயோடி போராடி களைத்துப் போய் காலனிடம் தோற்றுப்போன தன் மனைவியின் இழப்போடு தனிமையும் பிணியும் சேர்ந்து வாட்ட தற்போது ஒரு மூலையில் முடங்கிப்போன தன் தந்தைக்கு தான் எடுத்த முடிவு மூலம் மறுபடியும் ஏமாற்றத்தை பரிசளிக்க அவளால் முடியவில்லை.
ஆனால் அவள் எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற எல்லையை அவள் தாண்டி விட்டாள்.

ஏதோ தீர்மானம் எடுத்தவளாய் தீடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து யாருடைய நித்திரைக்கும் இடையூறு இல்லாமல் மெழுகுதிரி ஒன்றை பற்ற வைத்துக் கொண்டாள். அந்த ஒற்றை மெழுகுதிரியின் ஒளி அங்கே அதுவரை சூழ்;ந்து கிடந்த இருள் எல்லாவற்றுடனும் போராடி அவற்றை அசுர வேகத்தில் துரத்தியடித்துக்கொண்டிருந்தது.

இந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு தான் எடு;த்து விட்ட முடிவிற்கு ஏதோ ஒரு படைபலம் கிடைத்து விட்;டது போல் தோன்றியது. ஒரு காகிதமும் பேனையும் கையில் எடுத்துக் கொண்டாள்.

‘அன்புள்ள அப்பாவுக்கு…”

என தொடங்கிய மறு கணமே எழுத்துக்களை மறைத்துக் கொண்டு கண்கள் குளமாகின. இமைகளை இறுக்கி மூடி விழிகளின் வான் கதவுகளை திறந்து விட்டாள். காகிதத்தின் மேல் பேனையின் பயணம் தொடர்ந்தது.

‘என்னை முதலில் மன்னித்து விடுங்கள். அன்று உங்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டேன். இன்றுவரை அந்தப்பாவிபற்றி எந்தத்தகவலும் இல்லை. அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் எனக்கு பெரிதாய் எந்த குறையும் தெரியவில்லை. அம்மா போன பிறகு நீங்களும் இப்பிடிப் போய்விட்டீர்கள். என் இரண்டு பிள்ளைகளோடு அந்தக் கடையை நடத்திக்கொண்டு ஒரு தனி ஆளாய் போராடி நான் களைத்தே போய்விட்டேன். இதற்கு பிறகும் என்னால் இதனை தொடரமுடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.
கடந்த என் வாழ்க்கையில் பக்குவம் இல்லாமல் நான் எடுத்த பல முடிவுகளால் உங்களுக்கு பல இக்கட்டுகளைக் கொடுத்துவிட்டேன். ஆனால் இன்று நான் எடுத்த முடிவு தெளிந்த சிந்தனையோடும் நிறைந்த பக்குவததோடும் எடுத்த முடிவு.

நாளை காலை நாவலடியைச்சேர்ந்த ரவிராமன் என்பவரை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். கடந்த ஆறு மாத காலமாய் கடையில் தனிமையில் நின்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு அவர் பல உதவிகளைச் செய்துள்ளார். அவரின் இவ்விருப்பத்தை எனக்கு எப்போதோ கூறிவிட்டார். என் நிலமை அவருக்கு நன்றாகவே தெரியும். நானும் கடந்த மூன்று மாத காலமாய் என் உணர்ச்சிகளோடும் சம்பிரதாயத்திற்கு இது ஒவ்வாதே. ஊரவர் வாய்கள் என்னென்னமோ எல்லாம் பேசுமே என்ற அர்த்தமற்ற எண்ணங்களோடும் போராடிக்கொண்டிருந்தேன். திருமணம் என்கிற பெயரால் அன்று செய்த தவறிற்காக இனியும் என் தண்டனைக்காலத்தை நீட்டிக்கொள்ள நான் தயாரில்லை. அந்தப்பாவியின் மனைவியாக என் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தியாகம் செய்ய நான் விரும்பவில்லை.

முப்பது வயதைத்தொடமுன்னே வாழ்க்கையில் காணக்கூடாத சோகத்தை எல்லாம் கண்டுவிட்டேன். என் திருமணத்திற்கு சட்டம் என்ன சொல்லுமோ எனக்கு தெரியாது. உங்கள் சம்பிரதாயம் ஊரவர்கள் என்னென்ன இழிமொழிகள் உரைப்பார்களோ எனக்கு அதைப்பற்றி கவலை கிடையாது. இன்று வரை அந்த அர்த்தமற்றவைகளால் எனக்கு எந்த பிரயோசனமும் இருந்ததில்லை.

தொடர்ந்து என் விரதத்தை காத்து அவரோடு பழகி வந்தாலும் இந்த ஊர்வாய் இன்னும் கேவலமாக பேசிக்கொண்டுதான் இருக்கும். அது என் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடும். எனக்கென்று இப்போது இருப்பது நீங்களும் அந்தக்கடையும் தான். ஆனால் எதிர்காலத்தில் என் பிள்ளைகளுக்கு என்ன இருக்கப்போகிறது? இன்று வசைபாடும் இந்த உலகம் நாளை துவாரகனிற்கு ஏதும் வழி காட்டுமா?
ஒருவேளை இதே உலகில் தனிமையோடே போராடி இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து இதே முடிவை எடுக்க நேரிட்டால் என்ன செய்வது?

என் முடிவு என் வரைக்கும் மிகச்சரியானதே. இந்த முடிவு உங்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கி விடுமோ என்ற கவலை மட்டும் தான் இப்போது எனக்கு உள்ளது. இதன் பிறகு உங்களோடு என் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போகலாம். யாருக்கு தெரியும்? யார் மனதும் எப்படி வேணுமென்றாலும் மாறலாம். உங்களுக்கு என்முடிவு ஏற்புடையது என்றால் நாளை கோயிலில் திருமணத்தை முடித்து உங்களை சந்திக்க வரும் என்னை ஆசீர்வதியுங்கள். இல்லையென்றால் உங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு
உங்கள் ஆசைமகள்……”

கையெழுத்து வைக்குமிடம் கண்ணீரால் ஈரமாகி இருந்தது. கடிதத்தை மடித்து காலையில் தந்தை பார்க்கும்படி மேசையில் வைத்து அவரின் சுடுதண்ணீர்ப் போத்தலையும் ஆதாரத்திற்கு மேலே வைத்துக் கொண்டாள்.

தயாரானாள்…

Related posts

சித்திரக்குள்ளனின் சாபம்

Thumi202122

துமியார் பதில்கள் – 03

Thumi202122

வினோத உலகம் – 03

Thumi202122

Leave a Comment