இதழ்-37

துமியார் பதில்கள் – 03

எனது எதிர் காலம் தொடர்பாக மிகப்பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதைச் சொன்னால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் நக்கலடிக்கிறார்கள். என்ன செய்வது?
(பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து மற்றவர்கள் சிரிக்கவில்லை என்றால் அது சர்வசாதாரணமானது என்று அர்த்தம். உங்கள் கனவுகள் கனதியானது என்று நினைக்கிறேன். அவற்றைப் பற்றி எல்லோரிடமும் பகிராதீர்கள். பலர் இங்கு பொறாமை நிறைந்தவர்கள். முடிந்தால் இவர்களை உங்களைச்சுற்றி வைத்திருங்கள்.

  1. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள்
  2. உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்
  3. உங்கள் மதிப்பு தெரிந்தவர்கள்
  4. உங்களை கவர்ந்தவர்கள்
  5. உங்கள் வெற்றியில் அக்கறை கொண்டவர்கள்

இப்படிப்பட்ட ஒருவரையாவது கண்டுபிடித்துவிட்டாலே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நீங்கள். அப்படி ஒருவரையும் கண்டுபிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள்! அந்த நபராக நீங்களே உங்களுக்கு மாறுங்கள்.

சிந்திக்க வைக்கிற மாதிரி ஒரு கதை சொல்லுங்கோ..
சௌமியா, கோண்டாவில்

நண்பன்.1 : வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

நண்பன்.2: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

நண்பன்.1 : நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

நண்பன்.2: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

நண்பன்.1 : இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

நண்பன்.2 : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

நண்பன்.1: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

நண்பன்.2: எப்படிச் சொல்றீங்க?

நண்பன்.1 ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

நண்பன்.2 : நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

நண்பன்.1 : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

நண்பன்.2 : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!😜😜😜

வடக்குக் கிழக்கில் மழை தரும் பாதிப்புக்களுக்கு அபிவிருத்தித் அபிவிருத்தித் திட்டங்கள் தான் காரணமா?

ஒரு திட்டத்தை செயற்படுத்தத் தொடங்குவதற்கு முன் திட்டமிடுவது மிக மிக முக்கியம். திட்டமிடல் பிரிவு என்றே ஒரு பிரிவு சில பல மாதங்களாக கள நிலவரங்களை ஆராய்ந்து அதற்கேற்ப செயற்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் எமது மண்ணில் எதுவுமே ஒழுங்காக நடப்பதாக தெரியவில்லை.

அண்மையில் நீங்கள் கண்டு வியந்த ஒரு அசாத்திய கண்டுபிடிப்பு என்ன?
சாருஜன், உடுவில்.

கமலஹாசனின் பிறந்தநாளுக்காக விக்ரம் படத்தின் ஒரு புகைப்படம் வெளியிட்டார்கள். அதில் அவர் துவக்கு வைத்திருக்கும் கோணத்தை கணித்த கணித மேதை ஒருவன் அது 67 என்றும் கமலின் வயதும் 67 என்றும் அதற்காக 67 பாதையில் துவக்கைப்பிடித்து நடித்த தலைவன் வாழ்க என்றும் பதிவிட்டிருக்கிறான். இதைவிட ஒரு அசாத்திய கண்டுபிடிப்பு இருக்குமா என்ன?

பால் ரீ குடிச்சிட்டு இருந்தன். பால் மாவில் கைய வைச்சாங்க. சரி போனாப் போகட்டும் என்று பிளேன் ரீ குடிச்சன். சீனியில் கை வச்சாங்க. என்ன கொடுமைன்னு சுடு தண்ணி குடிச்சிட்டு இருக்கன். இப்ப காஸிலும் கையை வைச்சிட்டாங்க. என்ன செய்யுற இப்ப?
ரிஷி, தெல்லிப்பழை

பச்சத் தண்ணிய குடிங்க ரிஷி.. அதாவது கிடைக்குதேன்னு சந்தோசப்படுங்க!

அண்மையில் முகநூல்ல ஒரு கவிதை வாசிச்சன். நீங்களும் வாசியுங்க.

பிளேன் ரீ வேண்டாம் #அங்கர் கேட்டேன்
தேத்தண்ணி குடிக்க #சீனி கேட்டேன்
சமைச்சு சாப்பிட #ஹாஸ்ஸை கேட்டேன்
சம்பல் போட #ரின்_மீன் கேட்டேன்
வாகனம் ஓட #பெற்றோல் கேட்டேன்
போதை ஏத்த #சாராயம் கேட்டேன்
சுற்றுலா போக #பாஸ் கேட்டேன்
கல்யாணம் கட்ட #பெர்மிசன் கேட்டேன்
சுத்தி திரிய #வாகனம் கேட்டேன்

இத்தனை கேட்டும் #கிடைக்கவில்லை
இதிலே எதுவும் #நடக்கவில்லை

இந்த #நாடே #நாடே வேண்டாம் என்று வெளியே போக #விசா வை கேட்டேன்

அதுவும் அதுவும் #கிடைக்கவில்லை

வாழ்வே வாழ்வே #வேண்டாம் என்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்……..

Related posts

ஈழச்சூழலியல் – 23

Thumi202122

பபுள்ஸ்

Thumi202122

மலையக மக்களும் குடியுரிமைப்பிரச்சினையும் மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – 02

Thumi202122

Leave a Comment