இதழ்-37

அவள்…

அவளுக்கென்று சில ஆசைகள் இருக்கும்..
அவளுக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கும்..
அவளுக்கென்று சில கனவுகள் இருக்கும்..
அவளுக்கென்று சில ஆற்றல்கள் இருக்கும்..
அவளுக்கென்று சில இலட்சியங்கள் இருக்கும்..
அவளுக்கென்று சில மன உளைச்சல்கள் இருக்கும்..
அவளுக்கென்று சில வலிகள் இருக்கும்..
ஏன்;
அவளுக்கென்று சில தூங்காத இரவுகளும் இருக்கும்..
இவை அனைத்தையும் விட,
அவளுக்கென்றே ஒரு அழகான குட்டி வாழ்க்கையும் இருக்கும்…
ஏன் இவள் சிறகுடைந்த பறவையாக இருக்க வேண்டும்…

அவற்றை நீங்கள்
தெரிந்து,
புரிந்து,
அறிந்து கொள்ளுங்கள்…

உங்களில் எழும் கேள்விகளுக்கு அவளை விடையாக மாற்ற முயற்சிக்காதீர்…

உங்களுக்கு தோன்றிய எல்லாவற்றையும் அவளிடம் திணிக்காதீர்…

உங்கள் விருப்பில்;
அவள் வெறுப்பைச் சம்பாதிக்காதீர்…
அவள் உங்களுக்காக வாழ்ந்தது போதும்,
இனி – அவளுக்காக,
அவள் சந்தோஷத்திற்காக,
அவள் விருப்பிற்காக,
அவள் ஆசாபாசத்திற்காக
அவளை நிம்மதியாக வாழ விடுங்கள்…

அவள் மனதிற்குள் ஆயிரமாயிரம் இருந்தாலும்,
வெளிப்படுத்த முடியாமல் – மனதிற்குள் பூட்டு போட்டு பேணிப் பாதுகாத்து வருகின்றாள்…
ஏனென்றால்,
இளம் மனம் கொண்ட மாது அவள்…

பாவம் அவள்,
தலையாட்டும் பொம்மையாக அவள்…

Related posts

சித்திரக்குள்ளனின் சாபம்

Thumi202122

சித்திராங்கதா – 36

Thumi202122

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…

Thumi202122

Leave a Comment