தலைப்பு 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச குருதிக்கொடையாளர் தின பிரதான முழக்கமாகும். ஒரு நன்கொடை மூன்று உயிர்களைக் காப்பாற்றுகின்றது. எனவே உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலமும் மற்றவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் உலகைத் துடிப்புடன் வைத்திருக்க இரத்த தானம் செய்பவர்களின் அத்தியாவசிய பங்களிப்பை சர்வதேச குருதி கொடையாளர் தின முழக்கம் எடுத்துக்காட்டுகிறது.இவ்மின்னிதழின் ஆசிரியர் பதிவு குருதி தானத்தை முதன்மைப்படுத்துவது யாழ்ப்பாண போதன வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை சமூகத்துக்கு சொல்ல வேண்டிய தேவைப்பாட்டிலேயே ஆகும்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குருதி வங்கி குருதி சேமிப்புக்களற்ற கைய்றுநிலையில் இருப்பதாக குருதி கொடையாளர்களுக்கு அழைப்பு விட்டுள்ளது. இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு மட்டுப்பாடாகவே காணப்படுவதாகவும், ஒரு வார காலப்பகுதிக்குள் குருதிக்கொடையாளர்கள் நிறைவான தானம் செய்ய தவறின் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்திற்களுக்கோ, சத்திர சிகிச்சைகளுக்கோ, மகப்பேற்று சத்திர சிகிச்சைகளுக்கோ மற்றும் குருதிச்சோகை நோயாளர்களுக்கோ குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலைக்கு இரத்த வங்கி தள்ளப்பட்டும் என்ற கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
குருதிக்கொடை தொடர்பாக சமூகத்தில் உள்ள தவறான பிரச்சாரத்தை தவிர்த்திடுங்கள். உடல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டே குருதி பெறப்படுகிறது. இரத்த தானம் செய்வது இருதய ஆரோக்கியத்தைக் கண்காணிக்க மற்றொரு வழியாகும். “இரத்தத்தில் இரும்புச்சத்து மிகக்குறைவாக இருந்தால், மருத்துவமனை சொல்லும், மற்றும் இரத்தத்தை எடுக்காது” என்று உணவு நிபுணரும் சான்றளிக்கப்பட்ட லீப் சிகிச்சையாளருமான Jan Patenaude கூறுகிறார். வைத்தித்த்சாலை ஆய்வில் வேறு ஏதேனும் இரத்தப் பிரச்சினைகள் அல்லது ஏதேனும் அசாதாரணமாகத் தோன்றினால் தெரிவிப்பார்கள். இரத்தத்தின் தரத்தை அவ்வப்போது பரிசோதிப்பது ஒரு உடல்நலப் பிரச்சினை உயிருக்கு ஆபத்தானதாக மாறுவதற்கு முன்பு அதைக் கண்டறிய முக்கியமாகும்.
குருதிக்கொடை சமூகத்துக்கு மாத்திரமின்றி குருதிக்கொடையாளருக்கும் ஆரோக்கியமான செயற்பாடாகும்.
இரத்ததானம் செய்வது தொடர்பாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
0212223063
0772105375