இதழ்-38

அழுகை….!!!

வனப்பில்லை.
வார்த்தை வலியானது.
என்னெதிரே
அவலங்கள் வரிசையாயின.

மாத்தளனை
கண்டு மாண்டும்
அதை மீண்டும் வந்தோம்.
ஆனால் நம்மிடம் மீட்சி அற்றன.

கடைசிவரையும்
சுமக்கப்படும்
அழுகைப் பாத்திரங்களிற்கு
ஒட்டகமாகினோம்.

அவர்களை
பெருமைப் படுத்திய
பயனப்பாடுகளை மறந்தனர்.
அவர்களை
அர்த்தப்படுத்திய
எண்ணப்பாடுகளை எறிந்தனர்.

தெளிவினை அணைக்க
முடியாமல்
காலச் சுவரிலே அறையப்பட்டேன்.
அன்பின் ஆலயங்கள் என்னிடம் இல்லை.

இக்கணமும்
எதியோப்பியாவிலே
வாடுகின்றேன்.
வாட்டமும் நாட்டமும் இன்றி
பசியோடு தொட்டு நடக்கின்றேன்.

கணமும் தேடித்தொலையும்
அன்பூற்றின்
ஆத்மார்த்தத்தை யாரோ
களவாடினர்.
பித்துமனம்
கத்தத் தெரியாமல்
ஊமை அழுகையாகிறது.

ஈரமற்று போய்ற்று – என்
வண்ணம் என்னை விட்டுப் போய்ற்று.
மீளும் நினைவின்
உதிரத்தை உறிஞ்சிப் பார்க்கின்றர். சில விஷமிகள்.

வெம்மைத் தீவில்
வெண்மை தேடின் தவறோ?
பித்துமனதில்
பிட்டுக் கேட்ப்பது பிழையோ?
இட்ட வாழ்வில்
எட்டிப்போவது தவறோ?
ஒட்டி உறவில்
மண்டியிடுவது பிழையோ?

நீ சொல்
விட்டுப்போன வார்த்தையை
அள்ளிப்போட்டாலும் அடங்குமோ?
திட்டிப்போன சொற்களை
கட்டிமறைத்தால் தாங்குமோ?

அன்பற்ற
பாலைவனத்தில் தொங்கிக் கொண்ட
பேதையானேன்.

வெளுறிக் கிடக்கும்
துணிக்கு சாயமின்றி
குறுகிப்போனேன்.

முற்றத்து மல்லியெல்லாம்
வெட்டிவிடப்பட்டு
வெறுத்துப் போனேன்.

சொட்டுக்காலம்
நட்டு
பூட்டுகின்றேன்.
பின்னர்
உன்னை மெட்டுப்போடுவேன்
அதுவரை
திட்டிப் போகாதே…!
தட்டிக் கொட்டாதே….!

அழுகை சுகம்……..
அழுகை வதம்…………

அழுகைக் குறிப்புக்கள்!!!

Related posts

என் பெண்மையின் பரிபூரணமே – 02

Thumi202122

பிரண்டையின் மருத்துவம்

Thumi202122

சித்திராங்கதா – 37

Thumi202122

Leave a Comment