இதழ்-38

வினோத உலகம் – 04

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டாலர்களாக அபார வளர்ச்சியடைந்துள்ளது. அதேவளை, அமெரிக்காவின் பொருளாதார வளம்  90 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடல் வெப்பத்தை எரிசக்தியாக மாற்றும் தொழில்நுட்பம்

நடனமாடுவோரின் உடல் வெப்பத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை Glasgow இல் உள்ள SW63 என்ற இரவு கேளிக்கை விடுதி பரிசோதனை செய்யவுள்ளது. Body heat எனப்படும் இந்த அமைப்பு மூலம் விடுதியை வெப்பமேற்ற மற்றும் குளிராக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாயின் வீடு 32 மில்லியன் டாலருக்கு விற்பனை!

உலகிலேயே பணக்கார நாயான குந்தர் தனது வீட்டை 32 மில்லியன் டாலருக்கு  விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. உலகிலேயே பணக்கார நாய்க்கு குந்தர் (Gunther VI) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாய் தனது தாத்தா நான்காம் குந்தரிடம் இருந்து 500 மில்லியன் டாலர் சொத்துக்களை பெற்றுக்கொண்டது. ஆகவே, தற்போது உலகிலேயே பணக்கார நாயாக குந்தர் அழைக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கர்லோட்லா லெய்பென்ஸ்டன் என்ற நபர் தனது நாய்க்கு அந்தக் காலத்திலேயே 58 மில்லியன் டாலர் சொத்தை பரிசாக அளித்தார். அதன்பின்னர் அந்த நாயின் வாரிசுகள் செல்வந்தராக வாழ்ந்து வருகின்றனர். நாயின் சொத்துகளை நிர்வகிக்க தனிக் குழுவும் இருக்கும் நிலையில், அமெரிக்காவில் மியாமியில் உள்ள பெரிய வீட்டை 32 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்கிறது குந்தர்.

வெள்ளை மாளிகை வந்தது கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 18.5 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக்கொண்டார்,

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக கிறிஸ்துமஸ் மரம் குதிரை வண்டியில் கொண்டுவரப்படுவது வழமையாகும்.

செய்தி துளிகள்

  • உலகின் முதல் பிட்காயின் நகரத்தை உருவாக்க இருப்பதாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அறிவித்துள்ளது.
  • உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பல் நோர்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 34

Thumi202122

கலாபக் காதலர்களை கண்டீரோ…?

Thumi202122

என் பெண்மையின் பரிபூரணமே – 02

Thumi202122

Leave a Comment