நீர் மாசடைதல்
அமிலத் தன்மையான நீரில் வாழும் மீன்கள் அதிகளவான செறிவில் பார உலோகங்களைக் கொண்டிருக்கலாம். எனவே இவற்றை நுகரும் போது மனிதர்களின் உடலில் சேரலாம். நீரின் pHபெறுமானம் குறைவாக உள்ள போது பார உலோகங்கள்அதிகளவில் கரையும். இதனால் குடிநீரின்ஊடாகவும் பாரமான உலோகங்கள் உடலில் சேரலாம். அலுமினியத்தை அதிகளவில் உள்ளெடுக்கும்போது எலும்பு கரைதல் நோயும், Alzhemersநோயும் ஏற்படலாம். பாரம்பரியமான நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நீரிலுள்ள பாரமான உலோகங்களை அகற்றும் வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. நீருக்கு சுண்ணாம்பை சேர்ப்பதன்மூலம் அமிலத்தன்மைஉருவாகுவதை மறுபக்கத்திற்கு மாற்றமுடியும். இது நீண்ட காலமாக ஜரோப்பாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுவீடனில்மட்டும் 4000 ஏரிகளில் தூளாக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் (CaCO3), நீர் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பு (Ca(OH)2) மற்றும் உடனடி சுண்ணாம்பு (CaO) என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் நீர் நிலைகளை மாசடையச் செய்வதில் விவசாயக் கழிவுகள் பெரும் பங்கினை வகிக்கின்றன. பல மில்லியன் வருடங்களிற்கு முன்னரே மனிதன் வாழ்ந்தாலும் கூட, விவசாயம் ஒப்பீட்டளவில் மிக அண்மையில் 12,000 வருடங்களிற்கு முன்னர் தோன்றியதாகும். கடந்த சில நூற்றாண்டுகளில் விசேடமாக கைத்தொழிற் புரட்சியின் பின்னர் இரசாயன, சேதனப் பசளைகள், வளர்ச்சி ஊக்கிகள்,பீடைநாசினிகள் என்பனவற்றின் பாவனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்றும் கூட பெரும்பாலான நாடுகளில் விவசாய முயற்சிகள் மிகவும் செறிவாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் 700 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாம்முன்னரேஆராய்ந்ததுபோன்றுஇவர்களிற்குப் போதியளவான உணவை வழங்க அதிகரித்த அளவில் விவசாய இரசாயனங்ளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், மண்ணரிப்பிற்குட்படக் கூடிய வளமற்ற நிலங்களில் எவ்விதமான மண் பாதுகாப்பு (Soil Conservation) நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது செய்கைபண்ணும் விஸ்தீரணம் நாளாந்தம் அதிகரித்தவண்ணமுள்ளது. இதனால் மேல்மண் அதிகளவில் அரித்துச் செல்லப்படுகின்றது. உண்மையில்1960களில் சிம்பாப்வே பத்து மில்லியன் தொன் நைதரசனையும், ஐந்;து மில்லியன் பொசுபரசையும், மண்ணரிப்பின் மூலம் வருடாந்தம் இழந்துள்ளது. இவற்றில்பெரும்பாலானவை நீர்நிலைகளை அடைகின்றன. கமத்தொழில்மாசடைதலை ஏற்படுத்துவதோடு, மாசடைவதினால் பாதிக்கப்படுவதாகவும் விளங்குகின்றது. இது நீர்நிலைகளுக்குகழிவுகளை கொடுப்பதோடு அதேவேளை, மாசடைந்தநீரையும் பெற்றுக் கொள்கின்றது. மாசடைந்த நீரினால் பயிர்கள் தொற்றலிற்குட்படுவதோடு, பண்ணைத் தொழிலாளர்களிற்கும்பாவனையாளர்களிற்கும் நோய்களைப் பரப்புகின்றன.பசளைகளாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் நீரில்கரைவனவாகும். உதாரணமான யூறியா, அமோனியம் சல்பேற்று, செறிந்த சுப்பர் பொசுபேற்று, மியுறியேற்றுப் பொட்டாசு எனபனவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான பசளைகளை மண்ணிற்கு இடும் போது, அவை மழை நீரிலும், நீர்ப்பபாசன நீருடனும் கரைந்து நீர் நிலைகளை அடைவதைத் தவிர்க்க முடியாது.
நைதரசன்
ஐக்கிய அமெரிக்காவில் ஆறுகளையும், ஏரிகளையும் மாசடையச் செய்வதில் விவசாயமே முதலிடத்தை வகிப்பதாக 1994இல் பட்டியலிடப்பட்டது. ஐம்பது மாநிலங்களில், நாற்பது மாநிலங்களின் நிலத்தடி நீரை மாசடையச் செய்வதில் நைட்ரேட் முன்னணி வகிப்பதாக இனங் காணப்பட்டது. 2002 இல்சுவீடன் நாட்டில் சுமார் ஒரு இலட்சம் பேர்ஆரோக்கியமான வாழ்விற்கான எல்லையாக குறிப்பிடப்பட்ட 45 mg/l என்ற அளவை விட அதிகளவான நைற்ரேற்றைக் கொண்ட நீரையே தமது குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர் என மதிப்பிடப்பட்டது. சில நாடுகளில் 10 வீதத்திற்கும் அதிகமான மக்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையான 50 mg/l என்ற அளவை விட அதிகளவான நைற்ரேற்டைக் கொண்ட நீரையே குடிநீராகப் பயன்படுத்துகினறனர்.
உலகில் மிகப் பொதுவாக இடப்படும் இரசாயனப் பசளைகள் நைதரசனைக் கொண்டனவாகும். இந்த நைதரசன் பொதுவாக அமோனியா அல்லது நைற்ரேற் என்னும் வடிவிலேயே காணப்படும். யூறியாவைப் (NH2CONH2) பொறுத்த வரை, அதனை மண்ணிற்கு இட்டவுடன் அமோனியாவாக மாற்றமடையும். மண்ணில் வாழும் பக்றீரியாக்கள் காற்றுள்ள போது அமோனியம் அயனை நைற்ரேற் ஆக மாற்றும். நைற்ரேற்மண் கூழ்நிலைப் பொருட்கள் என்பன எதிரேற்றம் கொண்டனவாகும். எனவே நைற்ரேற் அயன்கள் நிலத்தினால் பிடிக்கப்படாது நிலத்தடி நீர், அருவிகள், ஏனைய நீர்நிலைகள் என்பனவற்றை இலகுவாக சென்றடையும். நீர்நிலைகளில் காணப்படும் அதிகளவான நைதரசன், நற்போசணைஎன்னும் நிலைமைக்கு வழிவகுக்கும்.
குடிநீரில் அதிகளவான நைத்திரைற் நைதரசன் காணப்படும் போது மெதமொகுளோபிஅனீமியா அல்லது நீலக் குழந்தை என்னும் நோயிற்கு வழிகோலும். நைற்ரேற் நச்சுத் தன்மையானதல்ல. ஆனால் சிறுகுடலில் உள்ள பக்றீரியாக்களினால் நைத்திரேற் ஆனது நைத்திரைற் ஆக தாழ்த்தப்படும். அது பின்னர் குருதித் தொகுதியினுள் உறிஞ்சப்படும். குழந்தைகளினால் இந்த நைத்திரைற் நஞ்சினை அகற்ற முடியாது. இதனால் இந்நைத்திரைற் செங்குருதிச் சிறுதணிக்கைகளுடன் சேர்ந்து, குருதி, ஒட்சிசனை உறிஞ்சுவதைக் குறைக்கும். குழந்தைகள் அருந்தும் நீரில் 50 mg/l ஐ விட அதிகளவான நைட்ரேட் காணப்படும் போது அக்குழந்தைகள்மோசமாக நோயுறுவதோடு, மருத்துவ பரிகாரங்களை மேற்கொள்ளாத போது அக்குழந்தைகள் இறந்து போகலாம். பாரம்பரியமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குடிநீரிலுள்ள நைத்திரைற்டின் அளவைக் குறைப்பதற்கான வசதிகளைக் கொண்டிருப்பதில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். இதற்காகவே பல நாடுகளில் இவ்வாறான பல சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண குடாநாட்டிலும், வடமேல் மாகாணத்தில் கல்பிட்டிய பிரதேசத்திலும் உள்ள ஆழமற்ற கிணறுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான நீர் மாதிரிகளில் நைத்திரேற் பகுப்பாய்வினை விவசாயத் திணைக்களம் மேற்கொண்டது.
முடிவுகளின்படிஉலகசுகாதாரஸ்தாபனத்தின்நியமங்களிற்கேற்றவாறானகுடிநீராகஎந்நமாதிரியும்காணப்படுவதில்லை.
ஆராய்வோம்……..