இதழ்-38

குழந்தைகளுக்கான உலகை அனுமதிப்போம்!

“நாம் பார்க்காத காலத்திற்கு நாம் அனுப்பும் உயிருள்ள செய்திகள் குழந்தைகள்.”

-ஜான் எப். கென்னடி- (அமெரிக்காவின் 35வது ஜனாதிபதி)

எனினும் சமகால உலகின் நிகழ்வுகள் குழந்தைகளின் எதிர்காலங்களை நிர்மூலமாக்குவதாகவே அமைகிறது. நாம் பார்க்காத காலத்திற்கு யாரையும் செல்ல அனுமதியோம் எனும் அராஜக கூட்டத்தின் மத்தியில் தான் இன்று வாழ்கிறமோ என்ற எண்ணங்களே பல சந்தர்ப்பங்களில் எழுகின்றது.

இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஓர் படம் புகைப்பட கலைஞனையும் மரணத்திற்கு இழுத்து சென்றது. அதாவது சூடான் பஞ்சத்தின் துன்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்பட பத்திரிகையாளர் கெவின் கார்டன், என்பு மட்டும் மிஞ்சிய ஓர் சிறுமியை இரைக்காக கழுகு காத்திருப்பது போன்ற புகைப்படத்தை மார்ச் 26, 1993அன்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். இப்புகைப்படத்தை பார்த்த பலரும் சிறுமியின் உதவிக்கு கேமராவை கீழே இறக்கியிருக்க வேண்டும். கார்டன் மனிதாபிமானவற்றராக விமர்சிக்கப்பட்டார். உலகின் வஞ்சனையால் இறுதியில் 1994இல் கெவின் கார்டன் உயிரை மாய்த்து கொண்டார்.

கெவின் கார்டன் செய்தது சரி / பிழை என்ற வாதங்களுக்கு அப்பால், நிந்தனையால் கார்டனை கொலை செய்த சமூகம் சூடனில் பஞ்சத்தால் இறக்கும் சிறார்களுக்கு என்ன செய்தார்கள்? இவ்வாறே 2015இல் துருக்கி கடற்கரையில் மரணித்த சிரிய அகதி சிறுவனின் புகைப்படங்களுக்கு பல இரங்கள் கவிகள் இணையத்தில் உலாவின. எனினும் இன்றுவரை மேற்காசியாவில் எதிர்காலத்திற்குள் பயணிக்காது பல மழலைகள் மண்ணிற்கே உரமாகி செல்கிறார்கள். மேற்கு ஆசியாவில் போரை தடுக்க முடியவில்லை. இவ்வாறானதொரு தொடர்ச்சியிலேயே ஓரிரு நாட்கள் தலைப்பு செய்திகளுடன் மௌனிக்கப்பட்டு விட்டது கின்னியாவில் பாடசாலை சென்ற மாணவர்கள் படகு விபத்தில் மரணமும்.

வன்புணர்வு, விபத்து, வீண் சாவு என்று சிறார்கள் வாழவே முடியாத நாட்டையும் உலகத்தையும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்காக தவம் கிடப்பதும், குழந்தைகளற்ற தம்பதியரை புறக்கணிப்பதும் முட்டாள்த்தனமானது.

குழந்தைகளுக்கான உலகத்தை உருவாக்கிவிட்டு குழந்தைகளை உருவாக்குவதே உன்னதமான செயல்.

Related posts

சித்திராங்கதா – 37

Thumi202122

ஈழச்சூழலியல் 24

Thumi202122

ஒரு பாதி கதவு நீயடி…!

Thumi202122

Leave a Comment