சித்தர்கள் தமிழோடு ஆன்மீகத்தை மட்டுமல்ல மருத்துவத்தினையும் வளர்த்துள்ளார்கள்.சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும்.பண்டைய சித்தர்கள் தம் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து துல்லியமாகவும் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் தோன்றியகாலவரையறை சார்ந்து இதுவரை கூறமுடியவில்லை. நம் பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது என்றே அறியமுடிகிறது. ஒவ்வொரு மூலிகை குறித்தும் அதற்குண்டான மருத்துவ குணங்களைக் கண்டறிந்து எழுதி வைத்துள்ள சித்தர்கள் நமது நாட்டில் இயற்கையில் விளைகின்ற பல்வேறு மூலிகைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த வகையில் சித்தர்களால் மிகவும் போற்றப்பட்ட ஒரு மூலிகை வகையாக பிரண்டை அமைகிறது. இலக்கியங்களிலும் பிரண்டை குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் அகராதியில் பிரண்டை ‘பிரண்டை பரண்டை’ என அமைந்துள்ளது .
ஆறுசெல் மாக்கள்
அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி
கடுப்ப
நெறி அயல் வறிது திரங்கும் அத்தம்
-அகம் 119/5-7
என அகநானூற்றுப் பாடல் பிரண்டை பற்றி குறிப்பிடுகின்றது
.வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல வகையான இயற்கை மூலிகைகளை இனங்கண்டு கொள்ளாமலே கடந்து செல்கின்றோம். பெரும்பாலான மூலிகைகள் ஒரு சில வியாதிகளுக்கு மாற்றீடாக விளங்குகின்றன. ஆனால் பிரண்டை என்னும் தாவரம் உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சினைகளுக்கு மாற்று வழியாக விளங்குகிறது .
பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்கள் உள்ளதாக பதார்த்த குண சிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல வகையான இயற்கை மூலிகைகளை இனங் கண்டு கொள்ளாமல் அவற்றின் பயனை இழக்கின்றோம் .பொதுவாக மனித நடமாட்டம் குறைவான பற்றைக் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரும்.பிரண்டை சதைப்பற்றான நாற்கோண வடிவமான தண்டுகளையுடைய ஏறு கொடி அமைப்பில் வளரும் தாவரம் ஆகும். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை;விதை வழவழப்பானவை; உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் குணத்தன்மையினால் வஜ்ரவல்லி என்ற பெயரும் இதற்கு உண்டு.பிரண்டைச்சாறு உடம்பில்ப் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும்.வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை.தண்டு கார்ப்புச் சுவையும் வெப்ப தன்மையும் கொண்டது பிரண்டையில் சாதாரண பிரண்டை ,சிவப்புப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைபிரண்டை என பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை நான்கு பட்டைகளைக் கொண்ட அதிகமாக காணப்படும் பிரண்டை வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.பிரண்டையை சாப்பிடுவதனால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.பிரண்டையை நன்கு சாப்பிடும் போது உடலுக்கு சிறந்த பழக்கத்தையும் கொடுக்கிறது.
ஆராய்வோம்….