பாதைகள் பலதும் நம்
பார்வையின் முன் நீள
பாவவழி பலர் நாட
பாவியராய் சிலர் இங்கு…
போய்த்தொலையும் நாட்கள்
போகின்ற போக்கினிலே
போதையிலே பலர் வீழ
போதகராய் சிலர் இங்கு…
கலிகாலம் முற்றியதாய்
களவு, பொய், கற்பழிப்பென
கரியவழி பலர் நடக்க
கலைக்காலம் கனிந்ததென
கடமை, கண்ணியம், கட்டுப்பாடாய்
கனவுவழி சிலர் இங்கு….
எப்படியும் வாழ்வோமென
எட்டிப்பலர் நடக்க
இப்படித்தான் இருப்போமென
இயங்குகின்றார் சிலர் இங்கு…
நாம் எங்கே போகின்றோம்?
போவதற்கு முதலில்
நாம் இங்கு எங்கே??
நாற்றிசை தோறும்
நான்.. நான்.. நான் மட்டுமே…
நான் இறந்து
நாம் பிறப்பின்,
அல்லவை அகன்று
நல்லவை அவதரித்து
நம் பயணம் என்றும்
நற்பயணம் ஆகிடுமே…