இதழ்-39

வினோத உலகம் – 05

மின்னல் மூலம் மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியாகும் மீத்தேனை குறைக்க புதிய தொழில்நுட்பம்

நோர்வேயை சேர்ந்த நிறுவனம் ஒன்று கால்நடைகளின் சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவை செயற்கை மின்னல் மூலம் குறைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 99% மீத்தேன் மற்றும் 95% அமோனியா குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தள்ளிய பயணிகள், வலைத்தளங்களில் வைரலான கானொலி

நேபாளத்தின் கோல்டி விமான நிலையத்தில் டாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் திடீரென அதன் பின்புற டயர் வெடித்து நின்று விட்டது.

இதற்கிடையே மற்றொரு விமானம் அங்கு வந்து தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் சூழல் உருவானது.

இதனை அவதானித்த அங்கிருந்த பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஓடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

இந்த வினோத காட்சியை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

செய்தி துளிகள்

  • லண்டனில் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிக அதிக செலவு கொண்ட நகரங்கள் பட்டியலில் இஸ்ரேல் நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. பாரீஸ், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அக்ரவால் நியமனம்.
  • உலகின் முதல் உயிருள்ள, குழந்தைகளை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

.

Related posts

பிரண்டையின் மருத்துவம்-02

Thumi202122

பழைய பாட்ஷாவாக வருவாரா…?

Thumi202122

பனி போல படர்வாயோ

Thumi202122

Leave a Comment