இதழ்-39

காதல் கண்ணா!

உன் நினைவில் வாடும் பேதை – இவள்
துயர் துடைத்திட வாராயோ!
உன் சிந்தையில் ஆடும் காதை- இவள்
மனம் படித்திட வாராயோ!
உன் நெஞ்சம் தேடும் கோதை- இவள்
தஞ்சம் ஏற்றிட வாராயோ!
உன் மஞ்சம் நாடும் சீதை – இவள்
துஞ்சம் அணைத்திட வாராயோ!
உன் தோள் சேரும் ராதை – இவள்
கேட்கும் வரம் தாராயோ!
என் காதல் மன்னா!!!!

Related posts

பனி போல படர்வாயோ

Thumi202122

ஈழச்சூழலியல் 25

Thumi202122

பழைய பாட்ஷாவாக வருவாரா…?

Thumi202122

Leave a Comment