நீண்ட வீர சைவ பெருமக்களாக வாழ்ந்த தமிழ் மக்கள் மீது பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றால் போல் மதமாற்றங்கள் பல்வேறுபட்ட போதனைகளும் இடம் பெற்று வருவது யாவரும் அறிந்த விடயம் ஆனால் எங்கள் சைவசமயத்தை காத்து பேணி வந்த பல்வேறு சித்தர் பெருமக்களும், ஞானிகளும், அறிவியல் சிந்தனையாளர்களும் வாழ்ந்த புண்ணிய பூமி எமது பூமி.
ஆனால் நம் முன்னோர் வகுத்த நெறிகளையும் வரன் முறைகளையும் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளையும் இன்றைய தலைமுறையினர்கள் ஏற்று வாழ மறுக்கின்ற சூழல் காணப்படுவதால் தான் பல்வேறு வணக்க வழிபாடுகள், மத மாற்றங்களும் இடம்பெற வழிகோலுகின்றது. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்களாகவுள்ளோம். ஏன் என்றால் இன்றைய பெற்றோர்கள் தங்கள் பெற்றோர்கள் காத்து வளர்த்த பல்வேறு அறிவியல் விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் வணக்க முறைகளை தம்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் பின் நிற்பது வேதனைக்குரிய விடயம் அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
- சாத்வீகமான உணவுப்பழக்க முறை
- விரத அனுட்டானங்கள்
- கோயில்களிற்கு செல்லல்
இவற்றில் இன்றைய தலைமுறையினரின் உணவுப்பழக்க வழக்கம் முதன்மையானது. ஏன் என்றால் எங்களுடைய அம்மம்மாக்களோ, அப்பப்பாக்களோ னுநைவ என்ற பெயரில் பணத்தை செலவழித்ததாகவோ அல்லது மருத்துவர்களை நாடிச் சென்ற தாகவோ இன்னும் சொல்லப்போனால் பண்ணைக் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டதாகவோ நாங்கள் யாரும் அறியவில்லை. ஏன் என்றால் அவர்கள் அனைவரும் அடிப்படையான நல்ல பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுகின்ற வைத்திய முறையை தெரிந்து வைத்திருந்த அறிஞர்கள்.
அத்துடன் சைவ சமய விழுமியங்களில் முதன்மையான சாத்வீகமான உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இதை அவர்கள் விரத அனுட்டானங்கள் ஊடாக கடைப்பிடித்தார்கள் விரத முறைகளில் பல்வேறு முறைகள் உள்ளது. சாத்வீகமான உணவுப் பழக்கவழக்கமும் ஓர் விரத முறையே ஆகும். நம் முன்னோர்களை முட்டாள்கள் என்று என்னாதீர்கள். அவர்கள் இல்லற் யோகிகளாகவும் இல்லற் சித்தர்களாகவும் அடிப்படை விஞ்ஞானம் (டீயளiஉ ளஉநைnஉந) அறிந்தவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கள் மரபணுக்களில் அவர்களது மரபுகளும் இருக்கிறது. அதனால் தான் எவ்வாறு தான் மதமாற்றங்கள் நடை பெற்றாலும் இருட்டடிப்புக்கள் செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தான் இந்த ஐயப்பன் விரதமும் காணப்படுகிறது. மாதங்களில் சிறந்த மாதங்களாகிய கார்த்திகை, மார்கழி இந்த இரண்டும் சைவ சமயத்தவர்களிற்கு மிக உகந்த மாதங்கள். அந்த இனிய நாளிலே தமிழ் கார்த்திகை மாதத்திலே தொடங்கி தைத்திருநாள் தமிழிற்கு தை முதலாம் திகதி வரைக்கும் இந்த ஐயப்பன் வழிபாடு நடைபெறுகின்றது. இதற்கிடையில் பிள்ளையார் பெருங்கதை, திருவெம்பாவை போன்ற விரதங்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்ற இனிமையான காலம் எனவே எமது சைவ இளைஞர்கள் இந்தக் காலப்பகுதியில் சாத்வீகமான உணவுப் பழக்கவழக்கங்களை சிக்கனப் பிடிக்கின்றார்கள். இவ்விரதம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனுஷ்டிக்கின்றார்கள்.
ஆனாலும் இன்றைய காலத்தில் இளம் சமூதாயத்தினருடைய பங்களிப்பு அதிகமாகும். இதனால் எமது சைவ சமயத்தில் ‘மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற புராண வரிகளிற்கு இணங்க சமூதாய சீர்திருத்தங்கள் நடைபெறுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக சென்ற ஆண்டு தமிழ் பத்திரிகையில் நான் படித்திருந்தேன் சட்ட வல்லுணர்களால் கூறப்பட்ட விடயம் இந்த காலப்பகுதியில் குற்றவியல் நடவடிக்கை குறைவாக காணப்படுவதாக இதை பலரும் பல்வேறு விதமாக விமர்சித்தாலும் பெதுவான பார்வையில் ஒரு நேரான சிந்தனையாக பார்த்தால் ஒரு சமூக சீர்திருத்தம் நடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சைவப்பெருமக்களான இளைஞர்கள் நல்ல குரு நாதரை நாடி அவர்கள் அவருடைய ஆசீர்வாதத்துடன் தங்களின் பெற்றோரின் பாதங்களின் வீழ்ந்து வணங்கி நல்லதோர் கைங்கரியமான புனித மாலை அணிந்து நாற்பத்து எட்டு நாட்கள் மண்டல விரதம் பூண்டு சிற்றின்பங்களை விடுத்து பேரின்ப பெருமானாகிய இறைவனை வழிபடுகின்றார்கள்.
உண்மையிலேயே இந்த ஐயப்பன் வழிபாட்டில் உள்ள அனைத்து முறைகளும் பெரும் அறிவியல் பூர்வமான விடையங்களாகும். (ஆரடவi னுளைஉipடiநெ) இந்த நாற்பத்தெட்டு நாட்கள் என்பது எண்களின்படி மிகவும் உன்னதமான நாட்கள். இந்த நாட்களில் அவர் எந்த நோக்கத்தை நினைத்து மாலை அணிகின்றாரோ அந்த நோக்கம் நிறைவேறுவது மரபு. எனவே இதற்கு அத்தனை ஐயப்பன் பக்தர்களும் சாட்சிகளாவர்கள். அந்த வகையில் ஒருவர் குடிப்பழக்க வழக்கங்களிற்கு ஆளாகியிருந்தால் அவர் இந்த நாற்பத்தெட்டு நாட்களும் அதைத்தவிர்க்க வேண்டும். அல்லது இந்த பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்குவாராயில் அவருடைய மூளையின் கலங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. அதாவது எண்ணங்கள் மாற்றம் அடைகின்றது. இதனை உளவியலில் எண்ணமாற்று சிகிச்சை (உழபnவைiஎந டிநாயஎழைச வாநசயில ) என்று அழைப்பார்கள் இதை தான் அன்றே எங்கள் ஆன்றோர்கள் மண்டல விரதம் 48 நாட்கள் என்ற எண்ணிக்கையில் வைத்துள்ளார்கள்.
உதாரணமாக ஒரு இறை விக்கிரகம் பிரதி~;டை செய்கின்ற போது அதற்கு எண்ணெய்க்காப்பு வைக்கின்ற மரபு காணப்படுகின்றது. அவ்வாறு எங்களது கரங்களால் எண்ணெயை எடுத்து இறை திருமேனியில் எண்ணெயை ஊற்றுகின்ற கைங்கரியத்தை செய்பவர் 48 நாட்கள் சைவ ஆசாரம் பேணி சாத்வீகமான உணவுப் பழக்கவழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்.
ஆராய்வோம்…