இதழ்-39

திரும்ப வந்துட்டேன்னு சொல்கிறதா அமெரிக்கா?

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் அல்கெய்தா தீவிரவாதி களுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதரவளித்ததனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆட்சி செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முழுமையாக அமெரிக்கா இராணுவம் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளியேறியது.

20 ஆண்டுகளாக தேவையற்ற 822 மில்லியன் அமெரிக்க டெலர் பண விரயம் மேலும் பத்தாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் இறந்துள்ளார்கள் என்பதனையே காரணம் காட்டி வெளியேறியது அமெரிக்கா. கத்தார் நாட்டில் டோஹா தலைநகரில் அமெரிக்கா தலைவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த மாதம் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதில் ஆப்கானிய மண்ணை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்ய அமெரிக்கா தலிபான்களுக்கு உதவுவதாகவும் கூறியுள்ளது.

மேலும் ‘நாம் தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றோம் என்பதற்காக அவர்களை அங்கீ கரிப்பதாக ஆகாது.” என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. இதனை நம்ப முடியுமா என்கின்ற கேள்வி உங்களிடமும் பலருக்கு எழலாம். ஆனால் நான் இதனை உலகநாடுகளை ஏமாற்றுகின்ற கண்துடைப்பு வார்த்தையாக கூட இருக்கலாம் என்றே கருதுகிறேன். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கா மீண்டும் ஏன் ஆப்கானிஸ்தானிடம் இவ்வாறு பேச்சுவார்தைகள் நடாத்தி அதன் விவகாரங்களில் தலையிட காரணம் என்ன என்கின்ற கேள்வி எல்லோரிடமும் ஏற்பட்டு வருகின்றது. இது ஏன் என்கின்ற கேள்விக்கு விடை தேடுவதாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

தலிபான்கள் உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆதர வளிப்பதாக கூறியிருக்கின்றார்கள். இதனால் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழ்கின்ற உய்குர் முஸ்லிம்களுக்கு எப்போதும் சீனா அரசாங்கத்தினால் பிரச்சினைகள் எழுந்த வண்ணமே உள்ளது. இதனால் தலிபான்கள் ஆட்சி அமைத்து கொண்டால் சீனாவுடன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் இதனால் சீனாவின் அரசியல் சமநிலை சீர்குலையும் என்கின்ற அமெரிக்காவின் இராஜதந்திர நோக்கம் வீழ்ச்சி அடைந்தமையும் காரணமாக இருக்கலாம்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் மனிதநேய சலுகைகளை வழங்கும் கடமை மற்ற நாடுகளைவிட அமெரிக்காவிற்கும் வீட்டோ நாடுகளுக்குமே உள்ளது என சீனா அமைச்சர் கூறியிருந்தார். இது மறைமுகமாக அமெரிக்காவை பழி சுமத்தும் செயற்பாடாகவே இருந்தது. இவ்வாறான ஒரு கருத்தை வெளியிடும் போது அமெரிக்கா நாட்டின் மீது உலகளாவிய நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளின் நம்பிக்கையின்மை அமெரிக்கா சம்பாதிக்க நேரிடும் என்கின்ற காரணமாக கூட இருக்கலாம்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அல்கைதா தீவிரவாதிகள் அங்கு குழுக்களாக இணைந்து வருகின்ற ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டு வருகின்றதென அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. காலில் உள்ள அமெரிக்க தூதரகம் பூட்டப்பட்டு ஆப்கானிஸ்தானில் செயற்பாட்டிலுள்ள பல சிபிஐ அலுவலகங்களும் மூடப்பட்டதால் அல்-காய்தா செயற்பாடு எந்த அளவிற்கு வீரியம் அடைந்துள்ளது என்பதனை தெரியாமல் இருக்கின்றது என ஊஐயு துணை இயக்குனர் தெரிவித்திருந்தார்;. அல்கைதா ஒரு பலமான இயக்கமாக வர இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். அப்போது அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். இதனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் நுழைந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பென்சில்வேனி யாவில் ஜோ பைடனை தீவிரவாதி போல் சித்தரித்த பெனர்கள் சாலையோரங்களில் வைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவத்தினை மீண்டும் அமெரிக்காவிற்குள் அழைத்த முடிவுதான் தலிபான்களின் கொடூர ஆட்சி ஏற்பட வித்திட்டுள்ளது என்கின்ற குற்றச்சாட்டினை ஜோ பைடன் மீது அமெரிக்க மக்களே கூறிவருவது அமெரிக்காவின் நன் மதிப்பினை குறைத்து வருவதோடு அமெரிக்காவின் தலைமைத்துவத்தையும் அவமதிப் பதாக அமைந்து விடுகிறது. இதனால் ஜோ பைடன் தன் ஆட்சியில் தன் மக்களுக்கே அவநம்பிக்கை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை மேற்கொள்ளக் கூடாது எனவும் அங்குள்ள மக்களினை வெளியேறுவதற்கும் உதவி புரிந்து வருகிறார்.

தலிபான்கள் (அமெரிக்கா – தலிபான்) ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைப் போல தீவிரவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்கின்ற நிபந்தனையை மீறி வருகின்றது. மேலும் பெண்களின் உரிமை மீறல்இ கடுமையான தண்டனைகள் போன்ற கொடுமையான ஆட்சிகளும் நடைபெறுகின்றமை. மேலும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தின் சொர்க்கமாக மாறி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஜனநாயகத்தின் அடிப்படையில் செயற்படுகின்ற வல்லரசு நாடு என்கின்ற அடிப்படையில் அதனை தட்டிக் கேட்கின்ற உரிமையினை விட்டுக் கொடுக்கக் கூடாது என்கின்ற ஒரு உயரிய குணத்தில் கூட ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் நுழைந்து இருக்கலாம்.

அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ் தானில் இருந்து வெளியேறிய போது அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள்இ போர்க்கப்பல்கள் போன்றவற்றை செயலற்றதாக்கிவிட்டு சென்றிருந்தது. ஆனால் தலிபான்கள் ஆட்சியினை கைப்பற்றி இரண் டொரு நாட்களில் அமெரிக்க ஹெலிகாப்டரை தலிபான்கள் இயக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள். இது அமெரிக்காவிற்கு ஆச்சரியமான செயலாகவும் அமெரிக்க ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிடுவதற்கான சூழலும் ஏற்பட்டது. இதோடு தன்னுடைய போர் உபகரணங்களினை பயன்படுத்தியே தனக்கு ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என்ற ஒரு பயம் கூட இருக்கலாம். அத்தோடு இதன் விளைவு ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல உலக சந்தையில் சிறிய ஆயுதங்களும் வரத்தொடங்கும் உலகில் உள்ள மற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இது சாதகமாக அமையலாம்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவுடன் இளவு காத்த கிளி போல சீனா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டது. அதுமாத்திர மல்லாமல் ர~;யாஇ பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவளித்து வருகிறது. சீனா தலிபான்களுக்கு பண உதவி அளித்து ஆப்கானிஸ்தானையும் அதன் பெறுமதியான வளங்களையும் தன்னகத்தே அடிமையாக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. தலிபான்கள் சீனாவிற்கு முழுமையாக ஆதரவு நாடாக விளங்கினால் அமெரிக்காவினை எதிர்ப்பு நாடாக எண்ணி செயற்படும் சூழல் மிக அருகிலேயே என்பதை உணர்ந்து தாமும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வர வேண்டும் என்கின்ற இராஜதந்திர சிந்தனையாக கூட இருக்கலாம்.

காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்த காட்சிகள், தீவிரவாத தாக்குதல்கள், அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்கள் ஆகியவற்றை பார்த்தால் முறையான திட்டமிடலின்றி ஜோ பைடன் நிர்வாகம் செயல்பட்டதா என்கின்ற கேள்வி எழுகிறது. அத்தோடு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இருந்தபோதே தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்னும்போது தங்களின் கோரிக்கைகளையும் ஒப்பந்தத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகனையும் எப்படி பின்பற்றுவார்கள் என்று ஜோ பைடன் யோசிக்கவில்லை என்று உலக நாடுகள் குற்றஞ்சாட்டின. மேலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தப்பான தலைமைத்துவத்தினை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் ஜோ பைடனை விமர்சித்துள்ளார். இது ஜோ பைடனின் சுயமரியாதையை கெடுக்கும் விதமாக அமைகிறது. இதனை சீர்படுத்தும் நோக்கில் ஜோ பைடன் தலிபான்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

அமெரிக்கா திடீரென்று நல்ல வேடம் போட காரணம் தான் வல்லரசினை இழப்பதற்கு ஆப்கானிஸ்தான் ஒரு களமாக மாறிவிடக் கூடும் என்கின்றதால் தானும் அந்த களத்தில் பங்காற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் கூட மீண்டும் நுழைந்திருக்கலாம். மேலும் சீனா ஆப்கானிஸ்தானுக்குள் நிற்பதனால் சீனா பயங்கரவாதத்தின் சக்திகளினை பெற்று விடும் என்ற அச்சம். மேலும் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை களமாக வைத்து சீனா ரஷ்சியா இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பங்காளி நாடுகளின் நம்பிக்கையினை தம் வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய காரணங்களினால் தான் அமெரிக்க இராணுவம் ஆப்கானிதானிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து ஆப்கான் விவகாரங்களில் தலையிடுகின்றது என தெளிவாக ஊகித்துக் கொள்ள முடிகிறது.

19ஆம் நூற்றாண்டில் தங்களின் செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பிரிட்டனும் ரஷ்சியாவும் ஆப்கானிஸ்தானில் மோதிக்கொண்டது. இதனை ‘மகா ஆட்டம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ் ஆட்டம் இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கின்றது. தற்போது அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்சியா, துருக்கி, பாகிஸ்தான் என ஆட்டக்காரர்கள் அதிகரித்துள்ளனர் என்பதே நிதர்சனம். இந்த மகா ஆட்டக்காரர்களுக்கு இடையே சிக்கித் தவித்தது என்னமோ ஆப்கானிஸ்தான் பொதுமக்களே இவர்களின் நிரந்தரமான விடிவு என்பது அவர்களின் எட்டாக் கனியாகவே உள்ளது. அமெரிக்கா 20 வருடங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்ததைப் போன்று இருந்திருந்தால் ஆப்கானிய மக்களுக்கு அவல நிலையும் அமெரிக்க நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை இன்மையும் ஏற்பட்டு ஏற்பட்டிருக்காது. இது அமெரிக்காவின் வரலாற்றில் தோல்வியடைந்த காலப் பகுதியாகவே கருதப்படும். எனினும் இதனை சரிப்படுத்தும் முயற்சியிலும் தனது நிலையை தக்க வைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது என்பதினை கண்கள் ஊடாக பார்த்து வருகின்றோம்.

Related posts

பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்காக்கி விடாதீர்கள்…!

Thumi202122

புதிர்18 – பிள்ளை யார்?

Thumi202122

காதல் கண்ணா!

Thumi202122

Leave a Comment