இதழ் 40

சிங்ககிரித்தலைவன்

இதுவரை சிங்ககிரித்தலைவன் கதைக்களம் கடந்துவந்த வரலாற்றுப்பார்வை!

வரலாற்றின் ஏடுகள் விரிகின்றன. பதினைந்து நூற் றாண்டுகள் பின் நோக்கிச் செல்கிறோம். அப்பொழுது ஈழத்தின் அரசனாய் விளங்கியவன் காசியப்பன். (477-524)
இவன் தன் மைத்துனனான மீகாரனின் தூண்டுதலாலும், மண்ணாசையாலும் தன் தந்தையை கொலை செய்தான் என்று வரலாறு இதனை வரலாறு காணாத மாபெருங் குரூரச் செயலாகப்பதிவு செய்கிறது!


சூளவம்சம் முதலான பண்டை நூல்கள், இவனை ஓர் அரக்கனாகச் சித்திரிக் கின்றன.
எனினும், காசியப்பனின் ஒரு செயல், அவனு டைய கொடுமைகளையெல்லாம் மறக்குமாறு செய்கிறது. சிகிரியாவை இராசதானியாக்கி, அதனைக் கலைக் கோயில் ஆக்கிய தலைவன் அவன்!


தனது அறியாமையால் செய்த செயல்களை நினைந்து, நினைந்து வருந்தி வருந்திச் சாகாது செத்துக்கொண்டிருந்த அவன், எ ம து இரக்கத்திற்கு உரியவனே!
“அவன் பல தெய்வப் படிமங்களையும், அன்னசத்திரங்களையும், இவை போன்ற பலவற்றையும் அமைத்தான், ஆனால் இனிவரும் ஓர் உலகிற்காய் அஞ்சியே வாழ்ந் தான்.” (He made many images, alms houses and the ike, but he lived in fear of the world to come’ Culavansa) என்கிறது சூளவம்சம்!


காசியப்பன் தாது சேனனின் மகனாயினும் பட்ட மகிஷியின் வயிற்றிலே பிறந்தவன் அல்லன். மூத்த வன் எனினும் கீழ்மகள் ஒருத்திக்கு மகனாய்ப்பிறந் தான்.
He (Dhatusena) had two sons, Kassapa the elder, by a consort of lesser degree and Mogallana by the consecreted mahesi a n d a daughter’. – A concise history of Ceylon.


பட்டமகிஷியின் வயிற்றிலே பிறந்த முகலானன் என்னும் ஒரு தம்பியும், தங்கை ஒருத்தியும் இவனுக்கு உளர். எனவே, மூத்தவனாய்ப் பிறந்தும் அரசியல் உரிமை கிடைக்காமையாலும், காமக்கிழத்தி மகன் என்ற தாழ்வு மனப்பான்மையாலும், இவன், தந்தையாகிய தாதுசேனனுக்கு மரண தூதாய் ஆனது!


இந்த முயற்சியிலே சேனாபதியும், காசியப்பனுக்கு மைத்துனன் முறையானவனுமாகிய மீகாரன், அவனைத் தூண்டிக் கொண்டே இருந்தான்.
இவ்வாறு தூண்டு வதற்கு மீகாரனுக்கு ஒரு காரணமும் இருந்தது. அதாவது,
தாதுசேனன், தன் மகளை மீகாரனுக்கு மணம் செய்வித்திருந்தான்.
ஒரு நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சிறு சச்சரவு நிகழ்ந்தது. அச்சச்சரவால் கோபமுற்ற மீகாரன், தன் மனைவியைச் சவுக்கால் அடித்தான். மனைவியோ தான் அரசன் மகள் என்ற கர்வத்தாற்போலும் தந்தையிடம், இரத்தம் தோய்ந்த தன் ஆடையோடு சென்று முறையிட்டாள்.

  • தாதுசேனனின் வெகுளி எல்லை கடக்கவே, அவன் கொடிய விலங்கு போலானான்; தன் சொந்தச் சகோ தரி என்றும் நோக்காது, மீகாரனின் தாயை, நிருவாண மாக உயிரோடு தீயில் இட்டு எரித்தான்! மருமகன் மீது எத்தகைய பழிவாங்கல்!
    இதை மீகாரன் மன்னிக்கவேயில்லை! அவன் தாது சேனனின் ‘கேள்போற் பகையானான்; முன்னரே மண்ணாசை கொண்டு திரிந்த காசியப்பனின் ஆசைத் தீக்கு நெய் வார்ப்பதே மீகாரன் தொழிலாயிற்று.

  • அவன் தன் முயற்சியில் வெற்றிபெற்றான். காசி யப்பனும் ஈழத்தின் அரசனானான்! அவனுடைய அரியணை, தாதுசேனனின் சமாதியின் மீது எழுந்தது!
    தன் கனவுக்கோட்டையாகிய் சிங்ககிரியை வசிப்பிடமாக்க, ஏற்பாடுகளோடு அங்கு சென்ற காசியப்பனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன!
    தம்பி முகலனோ மகா நாமரோடு தமிழகம் தப்பிச்செல்கிறான்!

இனி கதை தொடரும்…!

Related posts

பட்டாசு சொல்கிறது பாடம்!

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 36

Thumi202122

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்

Thumi202122

Leave a Comment