இதழ் 40

மீண்டும் ஒருமுறை சாம்பியனான யாழ்ப்பாணம்

2012 இல் சிறி லங்கா பிரீமியர் லீக் (SLPL) என ஆரம்பிக்கப்பட்ட டி20 தொடரில் ஊவா அணி சாம்பியனானது. அதன் பின் இது தொடர் இடம்பெறவில்லை. பின்னர் 2020 இல் லங்கா பிரீமியர் லீக் (LPL) என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப் பட்ட போது யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்து களமாடிய ஜப்னா ஸ்டாலின்ஸ் (Jaffna Stallions) அணி வெற்றியாளர் ஆனார்கள். எல்பிஎல் இன் இந்த வருடத்திற்க்கான தொடர் கடந்த டிசம்பர் 5ம் திகதி ஆரம்பமானது.

ஐந்து அணிகளும் குழு நிலையில் தமக்கிடையே தலா இரு போட்டிகள் வீதம் எட்டு போட்டிகளில் விளையாடி இருந்தனர். பின் முதல் நான்கு இடங்களை பெற்ற ஜப்னா கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள கின்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதினர். 2020 ஐ போன்று இம்முறையும் காலி மற்றும் ஜப்னா அணிகள் இறுதி போட்டியில் பலப் பரீட்சை நடத்தினர். இவ்வருடம் காலி க்கு எதிராக விளையாடிய மூன்று போட்டியிலும் தோற்ற ஜப்னா, இப்போட்டியில் வென்று 2021 LPL தொடரின் வெற்றியாளர்கள் ஆனார்கள்.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் தம்புள்ள நகரங்களை கடந்த வருடம் பிரதிநிதித்துவம் செய்த கொழும்பு கிங்ஸ், ஜப்னா ஸ்டாலின்ஸ், கண்டி தாஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ள வீக்கிங் அணிகளின் உரிமையாளர் மாற்றத்தோடு அவற்றின் பெயர்களும் கொழும்பு ஸ்டார்ஸ், ஜப்னா கிங்ஸ், கண்டி வாரியர்ஸ் மற்றும் தம்புள்ள கின்ட்ஸ் என்று மாற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாக 397 ரன்கள் எடுக்கப்பட்ட கிங்ஸ் மற்றும் கின்ட்ஸ் மோதிய போட்டி இருந்தது. தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் குஷால் மெண்டிஸ் முன்னிலை பெற அடுத்த இடத்தில் தொடரின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அவிஸ்க்கா பெர்னாண்டோ உள்ளார். அதிக விக்கெட்கள் வீழ்த்தியவராக சமித் படேல் மற்றும் மகேஷ் தீக்ஷண ஆகியோர் தலா ௧௬ விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர். ஒரு இன்னிங்ஸ் இல் அதிக ரன் எடுத்த பெறுதியாக அவிஸ்க்கா இன் 100 ரன்கள் உள்ளது. ஒரு இன்னிங்ஸ் இன் சிறந்த பந்து வீச்சு பெறுதியாக ஜெவரி வண்டெர்சய் இன் 25 ரன்களுக்கு 6 விக்கெட்கள் எடுத்த பெறுதி உள்ளது.

Related posts

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்

Thumi202122

24 வருடங்கள்

Thumi202122

உலகின் தலைசிறந்த சொல் செயல்!

Thumi202122

Leave a Comment