இதழ் 40

சி.வை. தாமோதரம்பிள்ளை

தமிழ்மொழியின் அரும்பெரும் புதையல்களை அழியாது மீட்டெடுத்து காத்து தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை சிறுப்பிட்டியில் பிறந்தவர். வைரவநாதபிள்ளைக்கும் பெரும்தேவி அம்மையாருக்கும் தலைமகனாக 12.09.1832 அன்று ஜனனமானார். இவரது தந்தையார் பாடசாலைப் பரிசோதகராக பணியாற்றியவர். இவருக்கு ஆறு சகோதரர்கள் இருந்தனர்.

பிள்ளை அவர்கள் தந்தையாரிடமே ஆரம்பக்கல்வியைக் கற்றார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரு கவிராயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்தார். இதன் பின் அமெரிக்க மிஷனரி தெல்லிப்பளையில் நடத்திய ஆங்கிலக் கலாசாலையில் சில ஆண்டுகளும் வட்டுக்கோட்டையில் நடத்திய கலாசாலையில் எட்டு ஆண்டுகளும் கல்வி பயின்றார். கோப்பாய் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்ற ஆரம்பித்தார். அவ்வேளையில் இந்தியாவில் பேர்சிவல் பாதிரியார் தாம் நடத்தி வந்த தினவர்த்தமானி பத்திரிகைக்கு ஆசிரியராக வருமாறு பிள்ளைக்கு வெண்டுகோள் விடுத்தார். தாமோதரம்பிள்ளை அவர்களும் அதனையேற்று பத்திரிகையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஓய்வா யிருந்த நேரங்களில் ஆங்கிலேயர்களுக்கு தமிழை கற்பித்தார். பெரும் பதவிகளில் இருந்தவர்களும் இவ்வாறு தமிழ் கற்று அவரது திறமையை இனங்கண்டதால் சென்னை இராசதானிக் கல்லூரியின் தமிழாசிரியர் பதவி அவரைத் தேடிவந்தது. அப்பதவியை அவர் ஏற்றார்.

ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை | யாழ்ப்பாணம் : Jaffna

அங்கு ஆசிரியப்பணி தொடர்கையில் சென்னை சர்வகலா சாலை நிறுவப்பட்டது. சர்வகலாசாலைக்கல்வியை பிள்ளையின் மனம் நாடியது. புகுமுகத்தேர்வில் சித்தியடைந்து கல்வியைத் தொடர்ந்து பட்டமும் பெற்றார். கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரியில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. அங்கு அவர் காட்டிய திறமையை மேலதிகாரிகள் பாராட்டினர். பிள்ளையிடம் தமிழ் சுற்ற லஸ்சிங்டன் துரை அவரது திறமையை உணர்ந்து சென்னை மாகாணத் தலைமைக்கணக்காளர் பதவியில் அவரை அமர்த்தினார். சட்டத்தை கற்க முற்பட்ட தாமோதரம்பிள்ளை அவர்கள் 1871ல் B.L பட்டத்தைப் பெற்றார். வழக்கறிஞராக தொழில்புரிந்த அவர் 1887ல் புதுக்கோட்டைச் சமஸ்தான நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது அசாதாரண திறமை களை அவதானத்திற் கொண்ட அரசினர் 1875ல் ராவ்பகதூர் பட்டம் வழங்கி அவரைக் கௌரவித்தனர்.

இவ்வாறு பல்வேறு பதவிகளை வகித்துத் திறமையாக அத்துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதும் பிள்ளை யவர்களின் சித்தம் தமிழின் பால் கவனம்கொண்டதாகவே இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் ஆங்கிலம் கற்றோரே முன்னேறினர். மதிக்கப்பட்டனர். தமிழைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் நலிவடைந்தது. தமிழிலக்கிய இலக்கண நூல்கள் ஏடுகளாக இருந்த காலம் அது. வெவ்வேறு தமிழறிஞர் கள் எழுதிய ஏடுகளில் பாடபேதங்கள் காணப்படுவது இயல்பான ஒன்று. எடுகள் காலஞ்செல்வச் செல்லச் சிதைவடைய ஆரம்பிக்க தூலின் பல பாகங்கள் மெல்ல மெல்ல அழிவடையத் தொடங்கின. ஆங்காங்கே அருமையான ஏடுகளைப் பாதுகாத்து வந்தோகும். கொடுத்தால் நூல் மீண்டும் கிடைக்காமற் போய் விடும் என்றஞ்சி அவற்றை எவருக்கும் கொடுக்க மறுத்தளர். இக் காரணங்களால் அரும்பெரும் தமிழ் நூல்கள் காணக்கிடைக் காதவையாகவும் அரியான முழுமையான நூல்களைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இதை பிள்ளை அவர்கள் அவதானித்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.

சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் - சிறுப்பிட்டி - Home |  Facebook

தமிழின் அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க இயன்ற பணியை செய்ய வேண்டுமென உறுதி பூண்டார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் பழைய ஏடுகள் கிடைக்குமா என விசாரித்து அவற்றைச் சேகரித்தார். கிடைத்தவற்றைப் படித்துச் சரியாக உள்ளதா எனப்பார்த்தார். கிடைத்த சுவடிகளை ஒப்பு நோக்கி பாடபேதங்களை ஆராய்ந்து பல அறிஞர்களின் கருத்தறிந்து சீராக்கினார். அப்படிச் சீர்செய்தவற்றை அச்சேற்றினார். அன்று அச்சேற்றுவதும் ஒரு கடினமான பணியாக இருந்தது. பெரும் சிரமங்களைக் கடந்து பிள்ளையவர்கள் இடையறாது முயன்று நூல்களை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார்.

நீதிநெறி விளக்கவுரையை தாமோதரம்பிள்ளை அவர்கள் தனது இருபதாவது வயதில் வெளியிட்டார். பின்னர் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை (1868), வீரசோழியம் (1881), திருத்தணிகைப் புராணம் (1883), இறையனார் அகப்பொருளுரை (1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (1885), கலித்தொகை (1887). இலக்கண விளக்கம் (1889), சூளாமணி (1889), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை (1891). தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை 1892) ஆகிய நூல்களை அச்சேற்றினார்.

கட்டளைக்கலித்துறை, சைவமகத்துவம், வசனகுளாமணி. நட்சத்திர மாலை, ஆறாம் வாசசுப் புத்தகம், ஏழாம் வாசகப் புத்தகம், ஆதியாகம் கீர்த்தனம், விவிலிய விரோதம், காந்த மலர் அல்லது கற்றபின் காமாட்சி என்பன அவரே எழுதிய நூல்களாகும். தாமோதரம்பிள்ளை அவர்கள் வள்ளியம்மை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கு தந்தை யானார், வள்ளியம்மை நோயுற்று காலமானதால் அவரது சகோதரி நாகமுத்தம்மாளை 1860ஆம் ஆண்டு கரம்பற்றினார். இவர்களுக்கு கனகரத்தினம்பிள்ளை, அமிர்தலிங்கம்பிள்ளை. பொன்னம்மாள் சோமசுந்தரம்பிள்ளை. அழகசுந்தரம், சிவ பாக்கியம், ஆகிய அறுவர் மக்கட்செல்வங்கள்.

சின்னத்தம்பிப்பிள்ளை, அப்புக்குட்டிப்பிள்ளை, இளைய தம்பிப்பிள்ளை, சின்னக்குட்டிப்பிள்ளை, சின்னப்பாபிள்ளை, நல்லதம்பிப்பிள்ளை ஆகிய ஆறுபேரும் தாமோதரம் பிள்ளையின் சகோதர் ஆவார்.

பிள்ளையவர்கள் ஏடுகளை ஆய்வுசெய்வதில் முழுமையாக ஈடுபடஇயலாது நோயுற்றார். மற்றையோரின் உதவிபெற்றும் செயற்பட முடியாத நிலையில பணியைத் தொடரமுடியாது போனதால் அகநானூறு போன்ற நூல்களை அவரால் வெளியிட முடியாது போய்விட்டது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பநாளான 01.01.1901 அன்று பிள்ளையவர்கள் மறைந்தார்.

Related posts

சித்திராங்கதா – 39

Thumi202122

புதிர்19 – பரிசும் அவனுக்கே… தண்டனையும் அவனுக்கே…

Thumi202122

உலகின் தலைசிறந்த சொல் செயல்!

Thumi202122

Leave a Comment