இதழ் 40

24 வருடங்கள்

இந்த மனிதர்கள் நான் பார்க்காதவர்கள். அதிசயங்களாய் வளர்ந்து கிடக்கும் இந்த கட்டடங்களும்இ பாதைகளின் இருபக்கங்களும் மூடிக் கொண்டு வரும் பிரம்மாண்டங்கள். பாரி;ஸ் நகரின் வர்ணச் சாயல்களை இங்கேயும் பார்க்க முடிகிறது. அந்தக் கட்டிடங்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு இருபத்து நான்கு வருடங்கள் இருக்கும். மருங்குக் கிடந்த சிங்கத்தின் தலை யுத்ததை கைக்காட்டி கை காட்டியே கடனும் லாபகாரமும் பெற்று விட்டது.

‘எங்கட சொந்த நாடு தானே…”

என்று நினைத்து கண்களை விழித்து பார்துக் கொண்டு வந்தான் செல்லையா.

இந்த பாரிஸ் சிட்டிசன் தான் அவதிப்படும் மனக்குழப்பத்திற்கு முடிவு சொல்லத்தான் மீள வந்து கொண்டிருக்கிறான். இந்தப் புறப்பாடு அவசர அவசரமானது. சத்தியமாக நல்ல காரியம் என்று சொல்ல முடியாது. தலதாமாளிகை இரவு ஊர்வலத்தில் காணாமல் போன குழந்தை போல அவன் கண்கள் கலங்குவதற்கும் கலங்காமல் இருப்ப தற்கும் இடைநடுவில் இருந்தது.

இந்த நகரமெல்லாம் மாறிப் போய்விட்டது. அங்கு போகின்றவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் யாரோ போலத் தான் தெரிகின்றார்கள்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கி தாயக மண்ணில் பாதம் வைத்த செல்லையாவின் உள்ளம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத மனக்குமுறலைத் தந்தது.

அங்கிருந்து வாடகை கார். பயணம் தொடர்கிறது. எங்கே என்று வினாவுகிறீர்களா? பொன்னம்மா வீட்டுக்குத்தான்.

பொன்னம்பல வாணேஸ்வர் கோயில் வீதியை உட்புகுந்த கார் நகர்ந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை விரைகிறது.

செல்லையாவின் கண்கள் அகல விரித்து சாலை ஓரங்களை கண்டு கொள்கிறது. உச்சி மணி ஓசையும் கோவில் முன் பூ மாலைக்கடையும் வந்;து போகும் தமிழர் கூட்டமும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதில் என்ன வியப்பு?

அது ஒன்றுமில்லை.
அன்று கொழும்பில் தமிழர்களே இருக்க முடியாத நேரம் திருநீறு அணிந்தவர்களையும்இ தேங்காய் எண்ணெய் வைத்த தலையோடு யாராவது வந்தாலும் மண்டை உடை தான.; ஆனால் இன்று அவ்வாறு இல்லை. இது தான் இன்று செல்லையாவின் ஆச்சரியத்திற்கு காரணம். வழி வழியே புத்தர் சிலைகள் நிற்கின்றன. இருக்கின்றன. அரசமர நிழல்கள் அவரை வருடிக்கொள்கிறது.

அது ஒருபுறம் இருக்க வீதியெல்லாம் வாகன நெரிசல். இரைந்து கொண்டே இருக்கும். பாதையில் செல்லையா தனது கண்களை மறந்து விட்டான்.
அவன் நினைவுகள் பொன்னம்மாவை நோக்கி இடம் பெயர்கிறது.

பொன்னாமாவின் திடகாத்திரமான தோற்றம்இ நீளமாக வளர்ந்த கருமை சூடிய தலை மயிர் எல்லாமும் செல்லையாவின் நினைவுகளாய் மீளகிறது. கருப்பட்டியும் தேத் தண்ணியும், அப்பமும் சீனியும் அவை சிறு பராயத்தில் உண்டவை, அவை நாக்குகளில் மீண்டும் வருகிறது. மீண்டும் வரும் இவை கண்களின் வழியாகவும் கசிய ஆரம்பிக்கின்றது.
பொன்னம்மா வீட்டில் இருக்க மாட்டாள். அந்தப் பார்வைகள் படலையை வெறித்துப் பார்த்தப்படி தான் இருந்திருக்கும்.
‘செல்லையா வருவான்;… செல்லையா வருவான்… பேரக்குழந்தைகளை கூட்டி வந்து என் மடியில் தவழவிடுவான்…”

இவை கானல் நீராய் போய் விட்டது.

மகாபாவி இவற்றையெல்லாம் எப்படி உணர்ந்து கொள்வான். எரிமலையாய் தன்னை கேடு கெட்ட மகாபாவி என வருந்திக்கொள்வதோடு உணர்ந்துக்; கொள்வான்.

வானத்தில் கருமேகங்கள் சூழ்;ந்த நேரம் அப்போது சூரியனும் இல்லை. அசைந்து போகும் காற்றுகள் இல்லை. அந்த தொலைபேசி அழைப்போடு தான் செல்லையா இரண்டு பிள்ளைகளையும், மனிசியையும் விட்டுட்டு புறப்பட்டவன்

‘பொன்னம்மாக்கா தவறிட்டா…”

இந்த செய்தி வரை அவனுக்கு வரட்டு கௌரவமும் பொன்னம்மா குடுத்த பாலோடு ஏறிய ரோசமும் தான் தடை நடுவாய் இருந்துது.

பொன்னம்மாக்கும் அப்படிதான் இறுமாப்பு. சாதித்திமிறும் இருக்கு. பொன்னம்மா முகத்தை பார்த்தால் அப்பிடி சொல்வே முடியாது.

வெள்ளையோ! வெள்ளை யாழ்ப்பாணத்து பெண்களும் உந்த நிறத்தில் இருக்கினமோ? என்று கேற்கிற அளவு நிறம். கருணையின் வடிவமாய் அவளுடைய தோற்றம். பொன்னம்மாவின் கணவர் கைலாசபிள்ளை. இரண்டு பொடியலும் வளர்ந்து இளந்தாரி மட்டுல வர கைலாசபிள்ளை வருத்தத்தில் இறந்திட்டார். மூத்தவன் கனகய்யா அவன் இயக்கத்துக்கு போய் சேந்திட்டான். கொஞ்ச காலம் தொடர்பு இருந்தது. பிறகு தொடர்பு இல்லாமல் போய்விட்டான்.

இளையவன் ‘செல்லையா” பொன்னம்மாக்கு அவன் மீது தான் பாசம் அதிகம் இருந்தது. செல்லையாவும் அப்பிடிதான்

‘பொன்னாச்சி…. பொன்னாச்சி….”

என்று தாயை கொஞ்சி குலாவுவான்.
மூத்தவன் போல இளையவனும் இயக்கத்திற்கு போயிருவான். என்ற அச்சம் பொன்னமாக்கு இருந்தது.
எப்படியாவது செல்லையாவை வெளிநாடு அனுப்ப வேணும் என்ற ஏற்பாடுகளையும் மேற்கொண்டாள்.
அதுக்குள்ள இன்னொரு விபரீதம் நடக்குது. அது என்ன விபரீதம்?

செல்லையான்ட காதல்; தான்…..
முன்பொருமுறை பொன்னம்மா தன் தம்பி நடேசபிள்ளையின் மகள் தாரணி ஒரு பொடியனை காதலித்த போது கடும் உக்கிரமாக செயற்பட்டிருக்கிறார். அப்போது தாரணிக்கு வெறும் இருபது வயதுதான் வரும். தன் காதலை வீட்டில் ஏற்றுத் கொள்ள மாட்டார்கள் என்று அறிந்தவள் காதலித்த பொடியனோடு ஓடி வேலணை வட்டாரப் இரணியில் போய் ஒழிந்து கொண்டாள்.
‘தன் குடும்ப மானமே போய் விட்டதே….”
‘நாதாரி நாய்….”
‘மானத்தையே வாங்கிட்டாள்…”

என்று நடேசபிள்ளை தமக்கை பொன்னக்காவிடம் வந்து அழுது புலம்பினார்

உயர்வுச் சிக்கல் மேலெழுந்த வாரியாய் ஓடும் இவர்களுக்கு எப்படி சும்மா இருக்க முடியும்.

பொன்னம்மா! திட்டம் தீட்டினான்.
வேடதாரியாய் மாறி தாரணியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

ஒரு மாதம் வரை வீட்டில் இருந்திருப்பாள். பின்பு கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தான் வந்தது.
ஊரில் பலவாறு கதைகள் அடிபட்டன.
கர்ப்பிணித் தாரணிக்கு பப்பாசியும்இ எள்ளும் அன்னாசியும் கொடுத்து குழந்தையை பொன்னம்மா அழித்து விட்டதாகவும் இழப்பைத் தாங்காத தாரணி கிணற்றில் பாய்ந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள். என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்.
இது நடந்து கொஞ்சக் காலம் தான் இருக்கும்.

இப்போது மகன் செல்லையா காதலிக்கிறான்!
செல்லையா அவசர அவசரமாக கிளப்;பப்படுகிறான்.

‘சலூன்காரன்ட பொட்டைய காதலிச்சது தான் பிரச்சனையோ..?”
இல்லாட்டால்,

‘சண்டைக்க செத்துப்போடுவான் என்டதோ..?”

செல்லையா கிளிப்பிள்ளை போன்றவன். அந்த மனிசி கௌரவப் பேய்! இந்த விசயத்தில் நாகத்தைப்போல நிக்குது பொன்னம்மா.

‘நீ வெளிநாடு போகாட்டி என்னை உயிரோட பாக்கேலாது…”

இந்த வார்த்தைகள் எல்லாம் அவனால் பொருட்படுத்தாமல் கடக்க முடியாதவை.

பிரிந்த காதலோடு கண்ணை கசக்கி சென்றவன் மீண்டும் வருகிறான்.

அனுப்பிவைத்த பொன்னம்மா மீண்டும் அழைத்திருக்கின்றாள்.

அழைப்பு பிறிதொருவரால்…

அழைக்க காரணம் தான் பொன்னம்மா!

செல்லையாவின் இருபத்து நான்கு வருட கோபம் இப்போது வருத்துகிறது. வீட்டு கூரைப்பள்ளியொடு பேசி பேசி தனிமையுடன் பொழுதைக் கழித்த பொன்னம்மா இறந்து விட்டார்.

(முற்றும்)

Related posts

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ?

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 36

Thumi202122

பட்டாசு சொல்கிறது பாடம்!

Thumi202122

Leave a Comment