இதழ் 40

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும் – 02

இந்த நாற்பத்து எட்டு நாள் என்பது சைவசமய விரத அனுஸ்டானங்களில் பின்னிப்பிணைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அறிவியல்ரீதியாக நோக்கினால் இன்றும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் சூரணங்கள் கசாய ம், புஸ்பம், மூலிகைகள் சேர்ந்த மருந்துகளில் எல்லாம் அத்துறை சார்ந்த வைத்தியர்கள் மருந்துகளை சிபாரிசு செய்கின்றபோது இம்மருந்தினை 48நாட்கள் எடுக்கவேண்டும் என அறிவுறுத்துவார்கள். உதாரணமாக குடற்புண் (அல்சர்) நோய்க்கு சீரகத்தை எடுத்து அதனை காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் 48நாட்கள் அருந்தி வர அந்தநோய் இல்லாமல் சென்றுவிடும். இந்த சீரகம் என்ற சொல்லை பிரித்தால், சீர்+அகம் = சீரகம் எனப்பொருள் கொள்ளப்படும்.

எனவே சரீரத்தை சீர் செய்ய உதவுகின்றது. இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், நாட்களின் எண்ணிக்கைக்கும் எங்களது விரத அனுஸ்டானங்களிற்கும் தொடர்பை காட்டுவதற்காகும்.

May be an image of 5 people and people standing

பொதுவாக ஐய்யப்பன் விரதம் தொடர்பாக பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவ்விரதத்தை இறைவனுடைய அற்புதமாக பார்த்து மெய்சிலிர்த்து சிலர் புகழ்வதையும், சிலர் இவ்விரத வழிபாடுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பதையும் காணலாம். கள ஆய்வுகள் மூலமாகவும், .பேட்டி காணல் முறை மூலமாகவும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சில மக்கள் ஐயப்பன் வழிபாடு புதிதாக தொடங்கிய விரதம் எனவும் தங்கள் மூதாதையர்களின் வழிபாட்டில் காணப்படவில்லை எனவும் கூறுகின்றனர். சிலர் இல்லை ஐயனாரும் ஐயப்பனும் ஒன்றுதான். இது எங்கள் வழிபாடுகளில் காணப்படுகின்று என்று கூறுகின்றதை காணமுடிகின்றது.

ஆனால் இந்த விரதம் தங்கள் மூதாதையர்களின் வழிபாட்டில் காணப்படவில்லை என்று கூறுவது அவர்களின் அறியாமையே ஆகும். ஏன் என்றால் எமது சைவ வழிபாடுகளில் ஐயனார் வழிபாடு தொன்றுதொட்டே இருப்பது யாவரும் அறிந்த விடயம். இதற்கு உதரணமாக மிகவும் தொன்மையான அனலைதீவு ஐயனார் ஆலயம், வேலணை துறையூர் ஐயனார் ஆலயம், சுன்னாகம் ஐயனார் ஆலயம், வேலணை செட்டி புலம் ஐயனார் ஆலயம் என்பவற்றை கூறலாம். இதுபோல் சிறு சிறு கோயில்களில் காவல் தெய்வமாக வழிபட்ட மரபு காணப்படுகின்றதை அவதானிக்கலாம். இதை வைத்துப்பார்க்கின்ற போது ஐயனார் வழிபாடு ஆதிகாலம் தொட்டே வணக்க வழிபாட்டுடன் காணப்படுவதை அவதானிக்கலாம்.

May be an image of 2 people and text that says "சுவாமியே சரணம் ஐயப்பா"

வாசகர்களிற்கு ஓர் கேள்வி எழலாம். ஐயனாரிற்கும் ஐயப்பனுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை காண நான் விளைந்த போது இறைவனின் பெரும் கருணையால் கிடைக்க பெற்ற எமது குருநாதருடைய வழிகாட்டலினால் சபரிமலை யாத்திரை செல்கின்ற போது கேரள மாநிலம் மற்றும் தமிழக மாநிலங்களில் உள்ள ஐயப்பன் வழிபாடுகளை ஆராய்ந்து பார்த்தபோது தான் தெளிவான ஒரு பதில் கிடைத்தது. அது என்னவென்றால் கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்கா என்னும் தலத்தில் ஐயனராக எழுந்தருளி அங்கு வருகின்ற அடியவர்களுக்கு அருளை வழங்கிய வண்ணம் உள்ள ஐயப்பனை பார்க்கும் போது அங்கே இலங்கையில் உள்ள ஐயனார் கோயில்களில் எவ்வாறு ஐயனார் உடனுறை அம்பிகையுடன் காட்சி தருகின்றாரோ, அதைபோல் காட்சி தருகின்றார். இதே போல் பாரத தேசமெங்கும் இவ்வாறு ஐயனார் ஆலயங்கள் பல உண்டு.

மிகவும் புண்ணிய பூமியான இலங்கையின் வடபால் உள்ள தீவுக்கூட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தீவாகிய நயினாதீவின் தெற்கு பக்கத்தில் கடற்கரையோரத்தில் ஒரு ஐயனார் ஆலயத்தில் தொன்மையான காலத்தில் இருந்தே முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு, ஐயனார் வழிபாடுகளை அவ்வூர் மக்கள் ஆற்றி வருவதை இப்போது கோவில் தர்மகர்த்தாவாக இருக்கின்ற மகாலிங்கம் ஐயாவின் மூலமாக கேட்டறியகூடியதாக உள்ளது. தங்களுடைய மூதாதையர்களும் வழிபட்டதாக கூறினார். எனவே அங்கு சைவ வழிபாடுகள் நடைபெற்றது என்பதும் அங்கு சைவ வழிபாடுகளில் ஐயனார் வழிபாடுகள் நடைபெற்றுள்ளது என்பதும் தெட்டத்தெளிவாக தெரிகின்றதை காணலாம்.

No photo description available.

எனவே சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுகின்ற சைவப்பெருமக்களது வழிபாட்டில் ஐயனார் வழிபாடு நடைபெற்றுள்ளதை காணலாம். எனவே ஐயனார் வேறு ஐய்யப்பன் வேறு என்றகேள்விக்கு விடையாக மேற்படி விளக்கம் அமைந்துள்ளது.

இலங்கை மட்டுமல்ல மலேசியா, சிங்கபூர், கனடா, ஐரோப்பியிய நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனைத் தேடி சபரி மலைக்கு யாத்திரையாக வருவதை காணலாம். இதில் இளையோர்களின் பங்களிப்பு மிகக்காத்திரமானது. இவ்விரத காலத்தில் பல்வேறு அற்புதங்களை அனுபவித்து அவர்கள் மற்றவர்களோடு பகிர்வதன் மூலமும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் மாற்றத்தை அவதானித்து. அவர்கள் இறைவனை நாடுதல் காரணமாகவும் அவர்கள் இறைவனால் ஆட்கொள்ள படுவதை உணரமுடிகின்றது.

தொடரும்……….

Related posts

புதிர்19 – பரிசும் அவனுக்கே… தண்டனையும் அவனுக்கே…

Thumi202122

பட்டாசு சொல்கிறது பாடம்!

Thumi202122

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ?

Thumi202122

Leave a Comment