இதழ் 40

புதிர்19 – பரிசும் அவனுக்கே… தண்டனையும் அவனுக்கே…

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன், மரத்தின் மீதேறிக் கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை விக்ரமாதித்தன் கூற வேண்டும் என்று கூறி, வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.

ஒரு முறை சந்திரகாந்தன் என்ற மன்னன் “சிவபுரி” என்னும் நாட்டை ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்தவனான அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் மன்னன் சந்திரகாந்தனின் அரண்மனை வாயில்காப்பாளன் சந்திரகாந்தனிடம் வந்து “நமது நாட்டைஎதிரிநாட்டு படைகள் தாக்கப்போவதாக” கூறினான். இதைக்கேட்டு திகைத்த மன்னன் “அரண்மனை வாயில்காப்பாளனான உனக்கு இது எப்படி தெரியும்?” எனக்கேட்டான். அதற்கு பதிலேதும் அளிக்காமல் அமைதியாக இருந்தான் அந்த வாயில்காப்பாளன்.

சில நாட்கள் கழித்து திடீரென்று எதிரி நாட்டுப்படைகள் சந்திரகாந்தனின் சிவபுரி நாட்டை தாக்கின. ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக இருந்த சந்திரகாந்தனும், அவனது படைகளும் மிகவும் வீரத்துடன் சண்டையிட்டு எதிரி நாடு படைகளை நாட்டை விட்டே துரத்தினர்.

அப்போது சந்திரகாந்தனுக்கு தன் அரண்மனை காவலன் கூறிய விஷயம் நினைவிற்கு வந்தது. மறுநாள் அவனை அழைத்து அவனுக்கு பரிசுதர எண்ணினான் மன்னன். அதன்படியே அடுத்தநாள் அரசவையைக் கூட்டி ஆயிரம் பொற்காசுகளை அக்காவலனுக்கு மன்னன் அளித்தான். சந்திரகாந்தன் அப்போது “நம் நாட்டைஎதிரிகள் தாக்கப்போவது உனக்கு எப்படி முன்பே தெரியும்? என மன்னன் கேட்டான்.

அதற்கு அக்காவலன் தனக்கு சில நிகழ்வுகள் அது நிஜத்தில் நடப்பதற்கு முன்பே, தனது தூக்கத்தில் கனவுகள் மூலம் தெரிய வந்ததாக கூறினான். இதைக்கேட்ட சந்திரகாந்தன் “நீ ஆயிரம் பொற்காசுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீ இப்போது காவலன் பணியிலிருந்து நீக்கப்படுகிறாய்” எனக்கூறினான்.

இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம், விக்ரமாதித்தியனிடம் “விக்ரமாதித்தியா தன் நாட்டு வெற்றிக்கு காரணமாக இருந்த தன் அரண்மனைக்காவலனுக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டு, அவனை பணியிலிருந்து சந்திரகாந்தன் ஏன் நீக்கினான்? எனக்கேட்டது.

சற்று நேரம் சிந்தித்த விக்ரமாதித்தியன், “காவலன் தன் கனவின் மூலம் எச்சரித்து தன் நாட்டைக் காப்பாற்றியதற்கு பரிசாக அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்பட்டது. அதேநேரத்தில் தன் அரண்மனை காவலன் பணியின் போது தூங்கியிருக்கிறான். அப்போதே அவனுக்கு அக்கனவு ஏற்பட்டிருக்கிறது. தன் கடமையில் அலட்சியமாக இருந்த காரணத்தினால் அவனை பணியில் இருந்து மன்னன் சந்திரகாந்தன் நீக்கியது சரியே” என்று பதிலளித்தான்.

அதற்கு வேதாளம் நீரும் மன்னராக இருப்பதால் இவ்வாறான கேள்விகள் உமக்கு இலகுவானவையே இயலுமானால் நான் கேட்கும் புதிருக்கு சரியான பதிலழியும் பார்க்கலாம் என்று சவால் விடுத்தது புதிரென்றை போட்டது.

இங்கு 12ஆணிகளை பயன்படுத்தி 4சதுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு ஆணிகளை அகற்றுவதன் மூலம் இரண்டு சதுரங்கள் மட்டுமே எஞ்சவேண்டும்.  உங்களால் 5 நிமிடங்களுக்குள் பதிலைத்தீர்க்க முடியுமா? என்று முடித்தது வேதாளம்.

மன்னர் யோசிக்க தொடங்கினார்.

துமி அன்பர்களே,

நீங்களும் சிந்தியுங்கள். உமது பதிலை எமது மின்னிதழிற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்!

Thumi202122

சித்திராங்கதா – 39

Thumi202122

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ?

Thumi202122

Leave a Comment