இதழ் 41

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-02

  1. இலக்கிய மீளாய்வு

பங்கஜம். ஜி, அவர்கள் 2009 இல் வெளியிட்ட பள்ளி முன்பருவக்கல்வி எனும் நூலில் முன்பள்ளிப்பருவத்தில் ஒரு பிள்ளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய மொழி வளர்ச்சி நிலைகள், மொழிப்பயிற்சிகள், சமூக அறிவியல் காரணிகள், குழந்தையின் வளர்ச்சி நிலைகள் ஊடான மொழி வெளிப்பாடுகள், மொழி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் காரணிகள், முன்பள்ளிப்பருவப் பிள்ளைக்கான பாடத்திட்டம் என்பனவற்றை தெளிவாக விளக்கியுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தினால் 2016 இல் வெளியிட்ட பாடத்திட்டமும் ஆசிரியர் வழிகாட்டியும் என்ற கைந்நூலில் மொழித்திறன்களை வளர்த்தலுக்குரிய செயற்பாடுகள், ஆக்கச் செயல்கள், விளையாட்டுக்கள் ஊடாக மொழியைப் பயன்படுத்தும் வழிவகைகள், முன்பள்ளியில் ஆசிரியர்களினால் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சித்திராதேவி. ஞா, 2000 இல் ஆரம்பக்கல்விக்கு முன்பள்ளிகளின் பொருத்தப்பாடு எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வுக்கோவையில் முன்பள்ளிகளில் பெண் ஆசிரியைகளிடம் கற்பவர்கள் அதே எதிர்பார்ப்புடன் தரம் ஒன்றுக்கு வருவதால் தரம் ஒன்றிலே பெண் ஆசிரியையே கற்பித்தல் சிறந்ததாகும் என்பது பற்றிய கருத்துக்களையும், ஆரம்ப வகுப்பில் கடினமான மொழிநடை பயன்படுத்தல், அதிக நேரம் கற்பிக்கப்படுவதால் பிள்ளைகளுக்கு கற்றல் சுமையாகி வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது என்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

நிரூபா. அ, 2014 இல் முன்பள்ளிக்கல்வி அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் எனும் தலைப்பில் வலிகாமம் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுக்கோவையில் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், ஆசிரியரின் கல்வித்தகைமை, ஆசிரியர் பயிற்சி முறை, ஆசிரியரின் கற்பித்தல் முறை, மாணவர்களது அடைவுமட்டம் மற்றும் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் வெளியேறுதல் போன்ற விடயங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹஸன். எம். எச். எஸ், அவர்கள் 2006 இல் வெளியிட்ட முன்பள்ளிக் கலைத்திட்டமும் வழிகாட்டியும் எனும் நூலில் முன்பள்ளி என்ற எண்ணக்கரு பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் முன்பள்ளியில் ஆசிரியரது செயற்பாடுகளில் முக்கியமானது ஒரு மாணவன் தரம் ஒன்றில் கற்கப் போகும் விடயங்கள் பற்றிய விளக்கத்தை பெற்றிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி அது பற்றிய விளக்கங்களையும் மொழியை விருத்தி செய்ய அளிக்கப்படும் செயற்பாடுகள், சூழல் பற்றிய தேடல், சமூக விருத்தியை ஏற்படுத்தல், முன்பள்ளி மாணவர்களை முறைசார் கல்விக்குத் தயார்ப்படுத்தல் போன்ற விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Homel. P, Palij. M, Aaronson. D, ஆகியோர் 1982 இல் வெளியிட்ட Childhood bilingualism என்ற நூலில் குழந்தைப்பருவத்தில் இரு மொழிகளை உள்வாங்கும் திறன் பற்றியும் மேலும் இருமொழிக் கற்பித்தல் திட்டங்கள் ஊடாக இருமொழிக் கையாளுகையினை சமூகங்களுடனும் சூழலுடனும் மொழிவிருத்திக்கட்டங்களுடனும் விளக்கியுள்ளனர்.

Brown. R, 1963 இல் வெளியிட்ட குசைளவ டயபெரயபந என்ற நூலில் குழந்தை ஒவ்வொரு கட்டத்திலும் செயல்திறன் ஊடாக அறிவைப் பெறும் விதங்களையும்இ ஒவ்வொரு நிலையினையும் கடந்து செல்லும் போது மொழியியற் சூழலுடன் செயற்படும் முறைகளையும், மொழியைக் கையகப்படுத்தல், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைத் தேடிக் கொள்வது பற்றிய விடயங்களையும் கூறியுள்ளார்.

  1. ஆய்வு முறையியல்

இவ் ஆய்வானது பிரயோக மொழியியல் அணுகுமுறையில் அமைந்துள்ளது. இவ் ஆய்விற்கான தரவு சேகரிப்பானது தெரிவு செய்யப்பட்ட சில முன்பள்ளிகளின் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே இவை புள்ளிவிபர ரீதியாக அமைவதால் அளவுசார் ஆய்வாகவும் மற்றும் இவ் ஆய்வில் கருத்துக்கள் விபரிக்கப்படுதல் எனும் நிலையில் பண்புசார் ஆய்வாகவும் அமைந்து இரண்டும் கலந்த ஒரு ஆய்வு முறையாகக் காணப்படுகின்றது.

  1. முடிவுகளும் கலந்துரையாடலும்

வலிகாமப் பிரதேசத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு மொழிவிருத்தி முக்கியமானது என்பதை உணர்ந்து முன்பள்ளிகளில் மொழிவிருத்திபற்றிக் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். மொழிவிருத்தியை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழிகாட்டல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொழிவிருத்தியானது கதைகூறல், பாடல், பொருட்களைப் பயன்படுத்தல் என்ற முறைகளூடாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். மிக அருமையாக சில முன்பள்ளிகளில் மொழிவிருத்தி சிறப்பாக நடைபெற்றாலும் ஆசிரியர்களது தகுதி என்று பார்க்கையில் தமிழ் மொழியில் ”C” தரம் இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் வலிகாம நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ”C” தரம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் தற்போது டிப்ளோமா பயிற்சியைப் பெறக்கூடியதகாக உள்ளனர்.

முன்பள்ளிகள் ஆரம்பித்த கால வரலாற்றைப்பார்க்கின்ற போது முன்பள்ளிகள் ஆரம்பிக்க முன்னரே கூட்டுக்குடும்பங்களில் மொழிவிருத்தி வந்துள்ளது. பின்னர் அந்தந்தச் சமூகம் தங்களது பிள்ளை படிக்க வேண்டும் என்பதற்காக கற்றலுக்கு முன்னரான முன்னாயத்தமாக முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. முன்பள்ளியை விட சூழலிலிருந்து கற்பது அதிகமாக உள்ளது. ஏனெனில் உறவினர்கள் ஒன்றாக இருப்பது மற்றும் கலந்துரையாடல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதால் மொழிவிருத்தி ஏற்படுகின்றது. நவீனமயமாக்கம் காலமாற்றத்தோடு தனித்தனி மனிதனாக வந்த பிறகு மிக அண்மைக்காலங்களில் மக்களோடு சேர்ந்து செயல்ப்படுவது இல்லாமல் போய்விட்டது. இப்போது நிகழ்வுகள் கூட வீட்டில் இடம்பெறுவது பெரும்பாலும் இல்லாமல் மண்டபங்களில் நிகழ்வதால் உறவினர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்வது மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான காரணங்களால் முன்பள்ளிகளில் மொழிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு முன்பள்ளி சார்ந்த விழாக்கள், கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் என்பனவற்றைச் செய்வித்தல் அவசியமாகிறது. இவற்றை வீடுகளிலும் முன்பள்ளிகளிலும் முழுமையாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆராய்வோம்…

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 37

Thumi202122

சிங்ககிரித்தலைவன்-37

Thumi202122

வானவில்லே வானவில்லே…!

Thumi202122

Leave a Comment