பாலைவனத்துக்கும், கடும் வெப்பத்துக்கும் பெயர் பெற்ற சவுதி அரேபியாவில் புத்தாண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடல் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் கடல் விவசாயத்தில் விளையும் கடற்பாசிகளை எளிதாக அறுவடை செய்யும் மாபெரும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
பிரிட்டனின் பிளின்ட்ஷயரில் 18 பேரைக் கடித்த, ஸ்ட்ரைப் என்ற பெயரால் அழைக்கப்பட்ட சாம்பல் நிற அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் மிகவும் மதிப்புமிக்க அரசியல், அறிவியல் பல்கலைகழகங்களில் ஒன்றான சயின்சஸ் போ லில்லில் (Sciences Po Lille) சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ விரும்புவர்களுக்குமான ஒரு முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவில் வாழும் தமிழர் அசோக் எல்லுசாமி என்பவர் உலகின் முதல்நிலை கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வடிவமைப்பு குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக, AI நீதிபதி அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருவதாக சீனா கூறியுள்ளது.
பிரபல செல்போன் இயங்குதளமான ப்ளாக்பெர்ரி தனது சேவைகளை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மனித உடலின் புதிய பாகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதி தாடையின் மாஸெட்டர் தசையின் ஆழமான அடுக்கில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். மாஸெட்டர் தசை (Masseter Muscle) தாடையின் கீழ் பகுதியை உயர்த்துவதோடு உணவை மெல்லுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் இத்தகைய மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக ஆப்பிள் தடம் பதித்துள்ளது.