இளையோர்களின் பங்களிப்பு என்று கூறுகின்ற போது மிகவும் உன்னதமான பங்களிப்போடு தங்களை அர்ப்பணிக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும். ஒருவர் மாலை அணிகின்ற போது எங்களுடைய குருநாதர் பின்வருமாறு கூறுவார்.
‘நீங்கள் மாலை அணிகின்றீர்கள் என்றால் உங்களுடைய முன்னோர்கள் செய்த தவப்பயன். வீட்டில் உள்ளோர்களுடைய தவபயன். அவர்களது ஆசீர்வாதத்துடன் தான் மாலை அணியும் கைங்கரியம் நடக்கிறது. இது ஆணித்தரமான உண்மை. ஏன் என்றால் உங்கள் வீட்டிலே ஒருவர் மாலை அணிந்தால் அந்த வீட்டில் சைவஆசாரம் பேணி மண்டல விதரத்தை செல்வனே கடைப்பிடிப்பார்கள். அந்த வகையில் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தான் விரதம் இருக்கிறார்கள். நான் என்ற ஆணவம் இருக்க கூடாது. நான் மாலை அணிகின்றேன்; நான் சாமி; எல்லோரும் வணங்குங்கள் என்ற எண்ணம் இருக்க கூடாது. இறைவன் தான் சாமி; நாங்கள் அவருடை அடியவர்கள் எனும் எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அப்படி என்றால் மாலை அணிந்தவர்களை சாமி என்று கூற வேண்டும் என்று கூறுகின்றார்களே இது எப்படி என்று?
உண்மைதான். நாங்கள் மானிடர்கள்; இறைவன் பிறக்கவும் இல்லை; இறக்கவும் இல்லை; அவ்வாறு உள்ள பரம்பொருளை நாங்கள் கண்களால் காண முடியாது; காண வேண்டும் என்றால் அவர் மனிதர்களின் ஊடாக வந்து காட்சி கொடுப்பார். அவரை நாங்கள் உணரலாம். அவ்வாறு உங்கள் வாழ்விலும் அதை உணர்ந்து பார்க்கலாம். அவ்வாறு உள்ள பரம் பொருளை மாலை அணிந்தவர்கள் அவருடைய அடியவர்களின் ஊடாக யாரோ ஒருவர் மூலம் வருவார். அதை உணரவோ அல்லது தெரிந்து கொள்கின்ற தன்மையோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆதலால் தான் சாமி, ஐயப்பா என்று அழைப்பார்கள். இதுதான் சாமி என்று அழைப்பதற்குரிய விளக்கம்.
அவ்வாறு ஐயப்பனை நினைத்து மாலை அணிகின்ற சாமிமார்கள் கூட்டத்திலே இளையோர்கள் பங்களிப்புக்களை பல்வேறு வகைப்பாட்டில் நோக்கலாம்.
1.கூட்டுப்பிரார்த்தனைகளில் பங்கேற்பு
2.கூட்டாக இணைந்து கோயில்களை துப்பரவு செய்தல் போன்ற சரியை தொண்டு செய்தல்
3.கூட்டாக சமையல் செய்தல்
4.சமூகங்களோடு நல்ல உறவை பேணல்
5.உயிர்களை துன்புறுத்தாமை
இளையோர்களது சிந்தனைகள் செயற்பாடுகள் மற்றவர்களோடு ஒப்பிடுகின்ற போது மாறுபடும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். வாசகர்களே நான் ஏன் இந்த இளையோரை பற்றி அதிகம் பேசுகின்றேன் என்றால் இந்த இளையோர்கள் தான் நாளைய சந்ததியை உருவாக்க போகிறவர்கள். அத்தோடு மாலை அணிந்த இளையோர்கள் எவ்வாறு கண்ணியத்தோடு இந்த நாற்பத்து எட்டு நாட்களும் தற்காலிக பிரமச்சரியம் என்று தவத்தை கடைப்பிடித்து தங்கள் வாழ்வில் நல்ல ஒழுக்கத்தோடும் மேலான பண்புகளோடும் வாழ்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் அளவிடமுடியாத எங்கும் பார்த்திராத அதிசயங்கள் அவர்களது வாழ்வில் நடைபெறுகின்றது.
பிரம்மச்சரியம் சக்தி வாய்ந்தது. ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் தற்காலிக பிரமச்சரியம் மேற்கொண்டு தங்கள் வாழ்வில் இறை சக்தியை பெற்று பின்னர் தம்வாழ்வை திறம்பட வாழ்கின்றார்கள். இதற்கு சாட்சி அத்தனை ஐயப்பனுடைய மாலையை அணிகின்ற சாமிமார்களும் தான்.
கூட்டுப் பிரார்த்தனைகளில் பங்கேற்றல்
கூட்டுப்பிரார்த்தனைகளில் பங்கேற்பது மிகவும் சக்தி வாய்ந்தது. சிவபெருமானே இலங்கையை ஆண்ட ராவணனுடைய சாமகான இசைக்கு மயங்கினார் என்றால் இசை மற்றும் கூட்டுபிரார்த்தனை எவ்வளவு மகிமை வாய்ந்தது. பக்தியின் உச்ச நிலைக்கு இது இட்டு செல்ல கூடியது. இதில் மாலை அணிந்த சாமிமார்கள் கூட்டாக சேர்ந்து ஐயப்பன் பஜனைகளில் இசையாலே அர்சனை செய்யலாம். தமிழால் இறைவனை பாடி அர்ச்சனை செய்யலாம். இசையோடு பாடினால் இறைவன் மகிழ்வார். அந்த வகையில் பஜனைகள் விநாயகர் வழிபாடுகளோடு ஆரம்பித்து எல்லோரும் ஒரே எண்ணத்துடன் சேர்ந்து பக்தியோடு பாடும் போது அந்த சக்தி பரவல் ஏற்படுகின்றது. இதனை உளவியல் electric perception sensor என்று சொல்லப்படுகின்றது. அந்த எiடிசயவழைn அதிர்வு எண்ணங்களில் பக்திமார்க்கத்திற்க்கு வித்திடுகின்றது. தங்களின் சிற்றின்பங்களை மறந்து பக்தி வெள்ளத்தில் மிதக்க இறை தியானத்தோடு இளையோர்கள் திருநீறணிந்து சைவ ஆசாரம் பேணி இறைவனை வீடுகளிலே இசையால் ஆராதிப்பது குமரிக்கண்டம் காலத்தில் இருந்தே எமது ஆதிமரபாகும்.
தொடரும்…