இதழ் 42

சுயத்தை இழக்காதீர்கள்!

நாம் இவ்வாரம் வாசகர்களோடு சமூகம் சார்ந்த காதலைப்பற்றியே உரையாட உள்ளோம். உங்கள் செயல்கள் உங்கள் சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் எண்ணியுள்ளீர்களா? அதுசார்ந்த சிந்தனைக்கான களத்தையே இவ்வாரம் துமி ஆசிரியர் பதிவு திறக்க விரும்புகிறது.

மனிதன் ஒரு சமூக உயிரினம் . ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சார்ந்து சேர்ந்து வாழ்வது மனித இயற்கை. அதுவே இயல்பும் ஆகும் . மனிதன் தனித்து இயங்க இயலாது . குகை வாழ்வு தொடங்கி இன்றைய கூடகோபுர மாட மாளிகை வாழ்வு வரை கூடி வாழ்வதே மனித குணம் . இம்முறையில் கூடி வாழ்வதே சமூக , சமுதாய வாழ்வு . இந்த சமூக வாழ்வில் சமூக பொறுப்பு என்பது மனிதனுக்குப் பொதுவாக இருக்க வேண்டிய அற பண்பு ஆகும். சமூக பொறுப்பு சமுதாய வளர்ச்சியின் வித்து ஆகும் . இவ்வித்தைச் சரியான நிலத்தில் சரியாக நட்டு முறையாக நீர்விட்டு வளர்த்தால் நிறையவே பயன் பெறலாம் . அதுபோல சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பை ஒவ்வொருவரும் ஒழுங்காக கடைபிடித்தால் முறையாக நிறைவேற்றினால் சமுதாயம் சகல நிலைகளிலும் உயரும் .

எனினும் இன்று நல்விதைசார்ந்த சிந்தனையற்றே பெரும்பாலானோர் நகருகிறார்கள். குறிப்பாக ஊடகத்துறை சார்ந்த சமூக பொறுப்பின் இன்றைய நிலை பெருந்துயராக உள்ளது. இணைய உலகில் சிமார்ட் தொலைபேசி உள்ள அனைவருமே ஊடகவியலாளராகவே செயற்படுகிறார்கள். எனினும் ஊடகவியலாளராய் சமூகப்பொறுப்பை உணர்ந்து செயலாற்ற தவறுகிறார்கள். ஒரு சமூகத்தின் மொழி, பண்பாட்டு இருப்பில் ஊடகத்திற்கே பெரும் பொறுப்பு உள்ளது. எனினும் ஊடக சேவை இன்று வியாபாரமாகி சமூக பொறுப்பற்ற வகையில் சமூக சீரழிவின் தோற்றுவாயாக மாறியுள்ளது. பண்பாட்டை துறந்து கவர்ச்சியாகவும்; தமிழை மறந்து தங்கிலிசாகவுமே இன்று சமூகத்திற்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் வழங்குகிறார்கள். அதனை பொழுதுபோக்காக தங்கள் தவறை மறக்கவும் முற்படுகிறார்கள். இச்சமூக பொறுப்பற்ற செயல் சமூகத்தை அழிக்கின்றது என்பது கந்தபுராண கலாச்சாரம் வாள்வெட்டு கலாச்சாரமாகவும், கற்பழிப்பு கலாசாரமாகவும் மாறியுள்ளமையில் தெளிவாகிறது.

உங்கள் தலைமுறையின் இருப்பை விரும்புகிறீர்களாயின்; சமூகத்தை காதலியுங்கள்; சமூக பொறுப்புடன் செயற்படுங்கள்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 38

Thumi202122

ஒளித்து வைத்த இரகசியம்…!!!

Thumi202122

புன்னகையின் இரகசியம்

Thumi202122

Leave a Comment