இதழ் 42

வினோத உலகம் – 08

  • மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக எலன் மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை விரைவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் சாதனங்களை கையால் தொடாமலே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும் எனவும் மனித மூளை நினைப்பதை சாதனங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் மேலும் மனித மூளையில் ஏற்படும் பாதிப்புக்களை இந்த சிப் உதவியால் சரி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்த்தரா எனப் பெயர் வைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
  •  உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூண்டே கார்சியா தனது 112 வது வயதில் காலமானார். இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த்தது.  தனது 113 வது பிறந்த நாளுக்கு 3 வாரங்களே இருந்த நிலையில் ப்யூண்டே காலமாகியுள்ளார்.

Related posts

அவுஸ்திரேலியன் ஓபன் – 2022

Thumi202122

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு

Thumi202122

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும் – 03

Thumi202122

Leave a Comment