03. ஆய்வு முறையியல்
இவ்ஆய்வு வரலாற்று அணுகுமுறை, விபரணப் பகுப்பாய்வு அணுகுமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். சமகாலத்தில் காணப்படுகின்ற சில நிகழ்வுகளை கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் ஆய்வு செய்வது வரலாற்று அணுகுமுறை ஆகும். அவ்வகையில் நேரு பரம்பரையின் வரலாறு சார்ந்த விடயங்கள் சேகரிக்கப்பட்டு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
நேரு பரம்பரையினரின் செல்வாக்குத் தொடர்பாக கருத்துக்களையும் விபரங்களையும் தேடிக் கண்டறிந்தும் அவற்றிற்குரிய விபரங்களைத் திரட்டியும் பண்புசார் ரீதியாகவும் விபரண ரீதியாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வு நூல்கள், கடந்த காலப்பத்திரிகைகள், இணையத்தளக் குறிப்புக்கள், ஆவணக் காணொளிகள் போன்ற பல்வேறு மூலாதாரங்களிலிருந்து ஆய்வுக்கென திரட்டப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்குட்படுத்தி அவற்றை விபரிக்கும் வகையில் விபரண ஆய்வு முறைமை பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்விற்கு தேவையான தரவுகள் அனைத்தும் இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள், இணையத்தள வெளியீடுகள், சஞ்சிகைகள், ஆவணக் காணொளிகள் போன்றவற்றிலிருந்து இவ்ஆய்விற்கான தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளாக பெறப்பட்டுள்ளன.
- முடிவுகளும் கலந்துரையாடல்களும்
இந்திய அரசியலில் நேரு பரம்பரையினர் ஏற்படுத்திய அரசியல்இ பொருளாதாரஇ சமூக ரீதியான தாக்கங்கள் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் நேரு அவரது உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு வடிவத்தையும் வனப்பையும் கொடுத்தார். நேரு அணிசேராமைக் கொள்கை என்ற அடித்தளத்தில் இந்திய வெளியறவுக் கொள்கையை நிர்மாணித்தார். நேரு பரம்பரையினரின் அரசியல் வரலாற்றில் அணிசேரா இயக்கம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.
கூட்டு சேரா இயக்க மாநாடுகள்

ஆதாரம்:
வெங்கடேசன்.க.இ (2016)இ
“உலக அரங்கில் இந்தியா”இ
வர்த்தமானன் பதிப்பகம்இ சென்னைஇ ப -148

ஆதாரம்: www.newsfirst.lk.
பஞ்சசீலக் கொள்கை நேரு உருவாக்கிய வெளிநாட்டுக் கொள்கையின் மற்றொரு பரிணாமம் ஆகும். நேரு அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு கொள்வதற்காக உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்.
நேபாளம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பூட்டான் ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் பின்னர் வந்த பிரதமர்களுக்கு முன்மாதிரிகளாக அமைந்தன. இவை போன்ற நட்புடன்படிக்கைகள் ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈரான், ஈராக், சிரியா, துருக்கிஇ இலங்கை ஆகிய நாடுகளுடனும் செய்து கொள்ளப்பட்டன. இந்திய பாகிஸ்தான் உறவு, இந்திய இலங்கை உறவு, இந்திய வங்கதேச உறவு, இந்திய நேபாள உறவு போன்றன இந்திராகாந்தி ஆட்சிக் காலப்பகுதியில் வலுப்படுத்தப்பட்டது.
தேடுவோம்…