39.மதுரையில் மல்லன்!
மதுரையை நோக்கி மல்லனின் போலித் துறவி அணி புறப்பட்டு பத்து நாட்களாகிவிட்டது. புதியமக்கள் … புதிய பாதைகள் …. புதிய பாசை… இவற்றால் குழப்பமும் சோர்வும் அடைந்திருந்த துறவிஅணி தம்பயணம் சரியான பாதையில் தான் போகின்றதா? என்ற குழப்பத்திலும் இருந்தது. மல்லன்எப்படியாவது முகலனையும் மகாநாமரையும் கொன்று காசியப்பனிடம் நல்ல பெயர் வாங்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்… அது மட்டும் அல்லாமல் தன்னைக் கீழக்கரை அழைத்துவந்த நாகனைப் பார்த்ததில் இருந்து தானும் ஒரு மரக்கலத்தை வாங்க வேண்டும் என்றும், அக்கலம்நிறைய ஆடல் அரசிகளை வைத்துச் சுக போக வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அவன் மனதில்ஒரு எண்ணம் துளிர்விட்டிருந்தது. நாகனைப் போல் வணிக அனுமதியை காசியப்பனிடம் இருந்துபெற்று விட்டால் சுகமாக இருந்து செல்வம் சேர்த்துக் கொண்டே கடலில் உல்லாச வாழ்வு வாழலாம்என்ற எண்ணமும் அவனை மதுரையை நோக்கித் துரத்திக் கொண்டிருந்தது.
வழியில் யாரைப் பார்த்தாலும் மகாநாமரைப் போலவும் முகலனைப் போலவும் அவன்கண்களுக்குப்பட்டது. எப்படியாவது இருவர் உயிர்களையும் வாங்கி விட வேண்டும் என்றும், முகலனின் முத்திரைமோதிரத்தை விரலோடே வெட்டிச் சென்று காசியப்பனின் காலடியில் போட வேண்டும் என்றும்பலவாறு திட்டமிட்டுக் கொண்டே பயணித்தான்!
கீழக்கரையில் இருந்ததைப்போல் மதுரை செல்லும் பாதை இலகுவானதாக இருக்கவில்லை. கரடுமுரடான காட்டுப்பாதை அது! இடையிடையே தான் ஊர்கள் குறுக்கிடும். அங்கும் மக்கள்இவர்களை சற்று வித்தியாசமான பார்வையிலேயே பார்த்தார்கள்! களப்பிரர்களின் ஆட்சி தமிழகம்எங்கும் நிலவியதாலும், அவர்கள் பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததாலும், சில ஊர்களில்இருந்த சைவர்களும் வைணவர்களும் மல்லனின் துறவிக் கூட்டத்தை வெறுப்புடன் நோக்கினார்கள்! நீண்ட தமிழ் வேந்தர்களது ஆட்சியை கைப்பற்றிய களப்பிரர்கள் மக்கள் மீது எந்தச் சுமையையும்ஏற்படுத்தாது விட்டாலும், தம் கொள்கைகளையும் வழிபாட்டு நடைமுறைகளையும் ஓரளவுதிணித்திருக்க வேண்டும்! இதனை மல்லனும் அவனது குழுவும் அறிந்து கொண்டது. ஆனால்மக்களின் ஆதரவை விட ஆட்சியாளர்களின் ஆதரவே தேவை என்பதை உணர்ந்து தம்பயணத்தைதொடர்ந்தார்கள்.
மல்லன் மதுரைக்குப் பயணித்துக் கொண்டிருந்த காலம், ஏறத்தாழ தமிழகத்தின் பெரும் பங்கைகளப்பிரர் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இரு நூற்று ஐம்பது ஆண்டுகளைக்கடந்திருந்தது. சமணமும் பௌத்தமும் பெரும்பாலான சைவக் கோயில்களை ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே சில சைவப் பெரியவர்கள் தம்பாவான பெரும் பணிகளைச் செய்து சைவத்துக்குஉயிர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். மல்லனின் குழு பயணிக்கத் தொடங்கியதற்கு நான்குநாட்களுக்கு முன்னமே மகாநாமரின் பயணம் ஆரம்பமானதால் மல்லன் குழுவினரால் அவர்களைபயணத்தில் சந்திக்க இயலவில்லை. மதுரையை அடையும் பாதையும் தஞ்சையை அடையும்பாதையும் கீழக்கரையில் இருந்து ஒரே பாதையாகவே நீண்டாலும், அது, தாமிர பரணி ஆற்றைக்கடந்த பின் இரு வேறு பாதைகளாக பிரிந்து செல்கின்றது!
ஆறுகளையும் ஊர்களையும் காடுகளையும் கடந்து பத்தாவது நாளின் இறுதியிலே வைகை ஆற்றின்வனப்பை முகலன் கண்ணுற்றான்!
“ஆஹா… ஆஹா … மதுரை நகரின் வனப்பை தூரத்திலே பாருங்கள்! எம் வாழ்வுக்கும் வனப்புசேர்க்கப் போகும் இரண்டு உயிர்களும் இங்கே தான் இருக்கிறது தோழர்களே!”
என்றவன் உரத்ததொனியில் சிரித்தான். அவன் வீரர்களோ, தாம் துறவு வேடத்தில் இருப்பதைக் கூட மறந்து ஆளைஆள் கட்டிக் கொண்டு ஆரவாரப்பட்டனர்.
மதுரை நகரம் உயர்ந்த மாளிகைகளையும், கோயில்களையும் தெப்பக்குளங்களையும் கொண்டுஅழகு விரியக் காட்சி தந்தது! நகரத்து மாந்தர்கள் எல்லோரும் செழிப்புப் பொருந்தியவர்களாகவேஇருந்தனர். நீதிக்கு உயிர் தந்த மதுரை மன்னர்களின் சிறப்புக்களை கோயில் கல்வெட்டுக்களிலும்ஊர் மத்திகளில் அமைந்திருந்த மண்டபங்களிலும் பொறித்து வைத்திருந்தனர். களப்பிரர்களின்ஆட்சியில் கலைகளும் கட்டுமானங்களும் ஓரளவு செழிப்புற்றே இருந்தது. பின்னாளில் வரும்வரலாற்று ஆசிரியர்கள் இவர்களின் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பெடுத்துக்கொண்டாலும், அந்த இருளை விலக்கிப் பார்த்தால் களப்பிரர் கால கலை, இலக்கிய வளர்ச்சிகளைகண்டு தெளியலாம்! மல்லனின் கனவு இந்த மதுரையில் பலிக்காது என்பதை அவனும் அவன்கூட்டத்தினரும்,அறிந்திராமல் ஆரவாரித்து அடங்கினர். நகரை நோக்கி நடக்க ஆயத்தமாகியமல்லன் குழு பௌத்த துறவிகளைப் போலவே மறுபடியும் பாசாங்கு செய்யத் தொடங்கினர்.
“தலைவரே மகாநாமரைக் கண்டவுடனேஅவருடைய காலில் விழுந்து வணங்க வேண்டுமா? எம்மைப்பற்றி அவருக்கு எப்படி அறிமுகம் செய்வது? இராஜதந்திரியான அவர் எம்மை அடையாளம் கண்டுகொண்டால்…?”
என்று ஆளுக்கு ஆள்மல்லனின் அருகில் வந்து கிசு கிசுத்தனர்.
“வீரர்களே… மகாநாமரின் வதிவிடத்தை நாம் இரவு தான் அடைய வேண்டும்! பின் இரவோடுஇரவாக அவர்களின் கதையை முடித்து விட்டு புறப்பட்டுவிட வேண்டியது தான்… பகலில் அவரைசந்தித்தால் தான் இந்த விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டி ஏற்படும். இரவில் அலால் எம்மைஅடையாளமும் காண முடியாதல்லவா?”
மல்லனின் பதில் மற்றவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தது? மதுரையில் மல்லனின் கால்பதிந்த அந்தக் கணத்தில், மகாநாமரும் முகலனும் தஞ்சை செல்லும் பாதையில் ஒரு ஆடல்குழுவின் கொட்டகையில் சாரல் மழைக்கு ஒதுங்கிக் கொள்கின்றனர்.
மழை சற்றுப் பெரிதாகவே பெய்யத் தொடங்கி இருந்தது ! அந்த மழை இலங்கை வரலாற்றில்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை!
இன்னும் பொழியும்…