இதழ் 44

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 03

இந்திராகாந்தியின் இரண்டாம் ஆட்சிக் காலப்பகுதியில் இந்தியா ரஸ்யா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்திராகாந்திக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஹாரே உச்சி மாநாடு (1986), பெல்கிரேடு மாநாடு (1989) சார்க், இந்தியா-பாகிஸ்தான் உறவு, இந்தியா-வங்கதேச உறவு, இந்தியா-இலங்கை உறவு போன்றனவற்றை முன்னெடுத்தார். இவ்வாறாக நேரு பரம்பரையினரின் பிரதமர்களான நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் சர்வதேச உறவுகள் அமைந்துள்ளது.

ஆதாரம்:
wwww.austinmacauley.com.

சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளை இவ் படம் குறித்துக் காட்டுகிறது. சார்க் அமைப்பு எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்டது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவையாகும். 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பில் இந்தியா அளப்பரிய பங்காற்றி உள்ளது. வங்கதேச அதிபர் சியா உர் ரஹ்மான் முன்மொழிந்த தெற்காசியப் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) இந்திரா காந்தியால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சார்க் அமைப்பு பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஜவகர்லால் நேருவின் தலைமையில் உள்ள அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை சுதந்திரப்போராட்ட காலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் முக்கியமானது மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமாக இருந்தது.

சோவியத் யூனியனிடமிருந்து இந்தியா பொருளாதார திட்டம் என்ற கருத்தை பெற்றுக்கொண்டது. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின்னர் பொருளாதாரத் திட்டமிடல் நிகழ்ச்சிகளின் வலிமை கூடியது. 1950ஆம் ஆண்டு ஜவகர்லால் நேருவின் தலைமையில் திட்டக்குழு ஏராளமான திட்டங்களை முன்வைத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு திட்டக்குழு நடைமுறைப்படுத்திய திட்டங்களே ஐந்தாண்டுத் திட்டங்களாகும்.

ஆதாரம்:

www.ta.wikisource.org

முதல் ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரகத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது. ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.

நேரு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையானது பின்னர் ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கையானது கூட்டு சேராக் கொள்கை, அணு ஆயுதக் கொள்கை, சர்வதேச நாடுகளுடனான உறவு போன்ற வெளியுறவுக் கொள்கையின் சிறப்புக் கூறுகளில் சில மாற்றங்களையும் மாறுதல்களையும் கொண்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேடுவோம்…

Related posts

சித்திராங்கதா – 43

Thumi202122

வினோத உலகம் – 10

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 40

Thumi202122

Leave a Comment