இதழ் 45

கிரிக்கெட்டில் புதிய விதிகள்

கிரிக்கெட் க்கான விதிகளை வகுப்பது எம்சிசி (MCC) எனும் Marylebone Cricket Club ஆகும். இங்கிலாந்தில் 1787ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கழகம், கிரிக்கெட் க்கான விதிகளை வகுத்தது. இன்றுவரை நீடித்தது வருகிறது. இதை ஆரம்பித்தவர் தோமஸ் லோட்ஸ், அதனாலேயே இந்த கழகத்தில் சொந்த மைதானம் ஆன லோட்ஸ் மைதானம் என அழைக்கப்படுகிறது. இந்த எம்சிசி யின் (2020ம் ஆண்டுக்கான) தலைவராக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரா கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த 2017 இல் முக்கிய மாற்றங்களை செய்திருந்த நிலையில் தற்போதும் கிரிக்கெட் விதிகளில் புதிதாக மாற்றங்களை செய்துள்ளனர். முக்கியமான ஒன்பது மாற்றங்களும் வருமாறு.

விதி 1 – மாற்று வீரர்கள்
முன்னதாக ஒரு புதிய வீரர் எந்த வீரருக்கு மாற்றீடாக வருகிறாரோ அவர் புதியவராக கருதப்பட்டார். தற்போது புதிதாக இணைக்கப்பட்ட விதி 1.3 இன் படி புதிய வீரருக்கும், பழைய வீரருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கைகள்/தடைகள் எல்லாம் கருத்தில் கொள்ளப்படும்.

விதி 18 – துடுப்பாட்டப் வீரர்கள் ஓடும் போது பிடியெடுத்தல்.
புதிதாக மாற்றப்பட விதி 18.11 இன் படி துடுப்பாட்டப் வீரர் பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழந்தால் புதிதாக வருபவரே அடுத்த பந்தினை எதிர்கொள்ளுவார். பழைய விதியின் படி பந்து அடிக்கப்பட்டு மேலே செல்கின்ற போது ஓடுவதன் மூலம் பிடியெடுக்க முதல் முனைகள் மாற்றியிருந்தால் புதிய வீரர் அடுத்த பந்தினை எதிர்கொள்ள வேண்டியிருந்தில்லை.

விதி 20.4.2.12 – Dead ball
ஆடுகளத்தில் எந்த பக்கத்திலும் (முனையிலும்) மனிதரால், விலங்குகளால், பறவையால் அல்லது வேறு எதனாலும் இடையூறு நடந்தாலும் அந்த பந்து செல்லுபடியற்றதாக நடுவர் அறிவிக்க முடியும்.

விதி 21.4 – பந்து வீச்சாளர் பந்து வீச வரும் போது பந்தை எதிர் கொள்ளும் வீரரை நோக்கி ரன் அவுட் செய்ய பந்தை எறிந்தால் இதுவரை No ball ஆக கருத்தப்பட்டது இனி Dead ball ஆக கருத்தப்படும். இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விதி 22.1 – Wide ball இனை தீர்மானித்தல்.
இதுவரை இறுதியாக மட்டையாளர் எங்குள்ளாரோ அதுவே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இனி அவ்வீரர் பந்து வீச ஆரம்பிக்கும் போது எங்கு நின்றார் என்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விரைவாக ரன் குவிக்க தங்கள் நிலைகளை வீரர்கள் மாற்றுகிறார்கள். உதாரணமாக விக்கெட் க்கு குறுக்காக வருவது பந்து வீசும் போது அல்லது விலத்தி செல்வது.

விதி 25.8 – பந்து வீசும் போது பந்து ஆடுதளத்திற்கு (pitch) வெளியே வீழ்ந்தால் துடுப்பாட்டப் வீரர் அடிக்கும் போது அவர் அல்லது துடுப்பு ஆடுதளத்தினுள் இருக்க வேண்டும்.

விதி 27.4 மற்றும் 28.6 – ஏற்றுக்கொள்ள முடியாத களத்தடுப்பு வீரரின் அசைவு.
பழைய விதியின் படி களத்தடுப்பாளர் ஏற்க முடியாத வகையில் அசைந்தால் dead ball வழங்கப்பட்ட நிலையில் புதிதாக ஐந்து ரன்கள் துடுப்பாடும் அணிக்கு (batting team) வழங்கப்படவுள்ளது.

விதி 38.3 – மன்கட்டிங் எனும் பந்தை எதிர் கொள்ளாத வீரரை பந்து வீச முன் ஆட்டமிழக்க செய்யும் முறை இனி ரன் அவுட் (விதி 38) ஆக கருத்தப்படும். இது, முன்னர் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளுக்கான விதி 41 இன் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விதி 41.3 – உமிழ் நீருக்கு தடை.
பந்தை சுவிங் செய்வதற்காக துடைப்பதற்கு வியர்வை மட்டுமே பயன்படுத்த முடியும். கொவிட் -19 காரணமாக உமிழ் நீரினை பயன்படுத்தாத சந்தர்ப்பத்தில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் இது தேவையில்லை என முடிவு செய்துள்ளனர்.

இவை வருகிற ஒக்டோபர் மாதம் 1ம் திகதியிலிருந்து கிரிக்கெட் உலகில் பின்பற்றப்படும்.

Related posts

சிவராத்திரி விரத மகிமை – 02

Thumi202122

ஈழச்சூழலியல் 31

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 41

Thumi202122

Leave a Comment