நீலக் கடலும் வானும் வண்ண
ரிசியும் வந்து தாலாட்டும்
கானக்கடல்சூழ் நிலத்தை
காதல் கொள்ளும் பேதை சொல்
காதல் கீதமிது
காதல் காதல் காதல்
காதலில்லையேல் சாதல் என்றான்
பாரதி என்றொரு பாவலன்
ஆதலால் காதல் செய்
நாவிலும் பாவிலும் தேனொழுகும்
சொல்லியரைக் கண்டால்
அவர் மெல்லியரைக் கொண்டால்
மேனி அந்தரிக்கும் ஆர்ப்பரிக்கும் என்றான்
இன்றைய மைந்தன்
ஆதலால் காதல் செய்
பூமி என்றும் புன்னகைக்க
சாமி கொஞ்சம் கண்ணசைக்க
தாயகத்தை தாய்மொழியை
விளியிலேற்றி
விளக்காக்க வேண்டும்
ஆதலால் காதல் செய்
நிலவின் வெண் துகிலுரித்து
சூரியப்பழம் தின்று
கவிதைப்பானம் ருசிக்க
ஆயகலைகள் அத்தனையும்
பத்திரமாய் செற்ப
நித்தமொரு அன்புறவில்
இங்கிதமாய்ப் பேசி
இன்னிசைவில் சரசங்கள் செய்ய
வானென உயரும் வாழ்வு
தேனென இனிக்கும் நெஞ்சு
ஆதலால் காதல் செய்
வாழ்வு ஒரு பரிசென……
மொழியைக் காதலிப்பவன்
கிளியாகிப் போகிறான்
இசையைக் காதலிப்பவன்
குயிலாகிப் போகிறான்
துரோகத்தை காதலிப்பவன்
கொடுஞ் சற்பமாகின்றான்
உழைப்பினைக் காதலிப்பவன்
நதியேகிப் புரழ்கிறான்
வானத்தைக் காதலிப்பவன்
வண்ணங்கள் நெய்கிறான்
நேரத்தைக் காதலிப்பவன்
வெற்றியாய் சுற்றுகிறான்