இதழ் 82

நிபுணத்துவதத்தின் பெறுமதி

ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள்.

இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியலீளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது!

ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுதுபார்த்ததற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார்.

“என்ன?!” என்று ஆச்சரியமாக உரிமையாளர் கேட்டார்.

“நீங்கள் ஏறக்குறைய எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு விரிவான பில் கொடுங்கள்.”

பதில் எளிது….
சுத்தியலால் தட்டுவதற்கு: $2

எங்கு தட்ட வேண்டும், எவ்வளவு தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தட்டுவதற்கு : $19,998

ஒருவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பாராட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அவை நீண்ட நெடிய போராட்டங்கள், சோதனைகள் மற்றும் கண்ணீரின் முடிவுகளால் பெறப்பட்டது..

நான் ஒரு வேலையை 30 நிமிடங்களில் செய்கிறேன் என்றால், அதை 30 நிமிடங்களில் எப்படி செய்வது என்று 20 வருடங்களாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் பல ஆண்டுகளுக்கானது. சில நிமிடங்களுக்கு அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

50 ஆண்டுகள் கழித்து மஹா கும்பாபிஷேகம் காணும்மாவை கந்தப் பெருமான்

Thumi202122

நன்மைகள் நிறைந்த நன்னாரி வேர்

Thumi202122

கடலில் சதுர வடிவிலான அலைகள்

Thumi202122

Leave a Comment