மேற்கு சீனாவின் பெரும் பொருளாதார கண்காட்சியின் ஒரு பகுதியாக, சோங்கிங்கில் உள்ள ஷுவாங்குய் ஏரி தேசிய ஈரநில பூங்காவிற்கு மேலே இரவு வானத்தில் 1,500 ட்ரோன்களின் மயக்கும் காட்சி ஒளிர்ந்துள்ளது. இந்த நிகழ்வு ஜூலை 11 முதல் 13 வரை நடைபெற்றது, இதில் ட்ரோன் ஒளி காட்சிகள், விமான கண்காட்சிகள், விமானப் போக்குவரத்து கருப்பொருள் சொற்பொழிவுகள் மற்றும் அறிவியல் கல்வி அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றமை சிறப்பம்சம்.


