இதழ் 22

கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? (கிரேக் சப்பல் சொல்வதென்ன?) – 02

கடந்த இதழில் இந்திய வீரர்களின் உள/உடற் தகுதி, அணியில் இடம் பெற நிலவுகிற போட்டித் தன்மை மற்றும் உள்ளூர் போட்டிகளின் கட்டமைப்பு என்பவற்றை பார்த்து டிராவிட் தலைமையில் பாசறை வேறு என்று முடித்திருந்தேன்.


தற்போது பெங்களூரிலுள்ள இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான இயக்குனராகவும் இந்திய ஏ மற்றும் 19வயது இளையோர் அணியின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பாளராகவும் இருப்பவர், வேறுயாருமல்ல துடுப்பாட்டப் சுவர் ராகுல் டிராவிட் தான். 2016 – 2019 காலப் பகுதியில் டிராவிட் இந்திய ஏ மற்றும் இளையோர் அணியின் பயிற்சியாளராக இருந்த போது செதுக்கப்பட்ட வீரர்கள் தான் ரிஷாப் பான்ட்,  பிரித்வி ஷா, இசான் கிசான், வாசிங்டன் சுந்தர், சுமன் கில் (இளையோர் அணி) சிராஸ் ஐயர், கே எல் ராகுல், மொகமட் சிராஜ் (இந்திய ஏ) மற்றும் பல இன்னாள் கலக்கல் இளம் நட்சத்திரங்கள். 2016 இல் இறுதி போட்டி, 2018 இல் அவுஸ்திரேலியா மண்ணில் இளையோர் உலகக் கிண்ண வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பின்னர் இந்திய தேசிய கிரிக்கெட் அக்கடமியில் தலைமை ஏற்றார் டிராவிட். எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும் அந்த வீரரின் விளையாடும் பாணியை மாற்றியமைத்தால் திணறி காணமால் போவதுண்டு. ஆனால் டிராவிட் ன் சிறப்பு: ஒரு வீரரை அந்த வீரரின் விளையாடும் பாணியில் பட்டை தீட்டுவது. இது தொடர்பில் பிரித்வி ஷா கூட பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்திய கிரிக்கெட்டில் திறமையுடன் உடற் தகுதி மிக முக்கியம் என்று கடந்த இதழில் எழுதிய இருந்தேன். இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, யோ யோ (YO YO Test) வில் உடற் தகுதி நிருபிக்க முடியாமல் அணியில் தேர்வான பின்னர் நீக்கப்பட்டார். முன்னதாக 2018 இல் ராயுடு, சம்சன் என்று பல வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிட கூடிய விடயம். 


உலக கிரிக்கெட் க்கு இந்திய பிரிமியர் லீக், மிகப்பெரிய ஆபத்தாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட் க்கு இது மிகப் பெரும் வரப்பிரசாதமே. மற்றைய நாடுகளில் ஐபிஎல் போன்ற போட்டிகள் இருந்தாலும், ஐபிஎல் போட்டிகள் போல் போட்டித் தன்மை வாய்ந்தவை அல்ல. அதற்கு முக்கிய காரணம் ஐசிசி போட்டி அட்டவணையில் வரும் மார்ச் ஏப்ரல் விடுப்பு, முன்னணி சர்வதேச வீரர்கள் ஐபிஎல் பங்கெடுக்க வழிகோலுகிறது.  அதை விட சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்கள்: பொன்டிங், மஹேல என்று பெரிய பட்டியல். இவர்களின் பயிற்றுவிப்பு அவர்கள் நாட்டின் வீரர்களுக்கே கிடைப்பதில்லை ஆனால் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் மூலம் கிடைக்கிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஒவ்வொரு திறமையான இளம் வீரர்களை கண்டுபிடிக்க Talent Scout என்று ஒரு குழு மூலம் பல வீரர்களை வெளிக்கொண்டு வருகிறார்கள்: பும்ரா, ஹர்திக் பாண்டிய என்று சிலர். இவர்கள் இந்திய தேசிய அணியில் கலக்குது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நடையே.


இவற்றையெல்லாம் விட இந்திய அணியின் ஆய்வாளர்களை (Team Analysts) மறைத்து/மறந்து விட முடியாது.  தற்போதைய தொழில்நுட்ப உதவியுடன் கிரிக்கெட் போட்டிகள் ஆடுகளத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்க படுவதே நிதர்சனம். ஒரு வீரனின் (தங்கள் மற்றும் எதிர் அணி) பலம் பலவீனங்களை கண்டறிதல் முதல் போட்டி முடிவு வரை இவர்கள் துல்லியமாக கணித்து கொடுக்கிறார்கள். உதாரணமாக இத்தனை ஓவர்களில் இந்த ஓட்டங்களை இத்தனை விக்கெட் இழப்பில் பெறவேண்டும் அல்லது இத்தனை விக்கெட் எடுக்க வேண்டும் அதுவும் இந்த வீரர்கள் என்று போட்டியை எண்கணித வழிமுறையில் (arithmetic algorithm) தீர்மானித்து விடுவார்கள். இதன் போது எந்த வீரர் பந்து வீசுவார் யார் அதை எதிர் கொள்வார் என்று ஒட்டுமொத்த செயல்திறன் கருத்தில் கொள்ளப்படுகிறது. வீரரின் பலவீனங்களை கண்டறிந்து தகர்ப்பில் இந்தியாவின் வழிமுறைகள் அவர்களின் வெற்றியில் மிகப் பெரும் பங்காற்றி வருகிறது: அவுஸ்திரேலியாவில் ஸ்மித் மற்றும் லபுஸ்சேன் க்கு இந்திய உபயோகித்த லேக் சைட் (on/leg side) களத்தடுப்பு வியூகங்கள் ஆகட்டும், சங்கக்காரா வின் இறுதி தொடரில் காலி மைதான இந்திய வீரர்கள் அறையில் ஒட்டப்பட்டிருந்த வியூக விபரக்குறிப்பு போன்றவை இதற்கு சான்று.


கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? என்று கிரேக் சப்பல் கூறியதற்கு இவ்வாறான காரணங்கள் மேலும் வலு சேர்க்கும். 1994/95 இல் கிரிக்கெட்டின் முடி சூடா உலகக் சாம்பியனாக வலம் வந்த மேற்கிந்தியத் தீவுகளை அவர்களின் சொந்த கோட்டையில் 2:1 என வீழ்த்திய (மேற்கிந்திய தீவுகளுக்கு சொந்த மண்ணில் 15 வருடங்களில் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி) மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலியா, கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக மாறியதோ அதே போல் அவுஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேனில் முன்னாள் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை 2:1 என்று வெற்றி கொண்டு கிரிக்கெட்டின் புதிய முடி சூடா மன்னனாக வெற்றி நடை போடுகிறது இந்திய கிரிக்கெட் அணி.

Related posts

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 02

Thumi2021

நான் ஒரு முட்டாளுங்க!

Thumi2021

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

Thumi2021

Leave a Comment