இதழ் 22

எனதுகளின் இற(ழ)ப்புகள்

எனது….எனது…
எனதே எனது என
எத்தனை எனதுகள்
இத்தரையில்…..?

எனதென்று
எதைச் சொல்வாய்?
நட்பா?
காதலா?
உடன்பிறப்பா?
உற்றாரா?
கல்வியா?
செல்வமா?
வீரமா?
பட்டமா?
பதவியா?

அத்தனை எனதுகளுக்கும்
மற்றுமோர் எனதுகள்
இருப்பதை அறியாயோ?

இன்றைய எனதுகள்
நாளைய உனதுகள் ஆகலாம்…
ஆகையால்,
எதற்கிந்த எனதுகளுக்கான
எதிர்பார்ப்புக்கள்?
எனதுகளை எரித்து
எமதுகளாய் எழுவோமே…

இல்லை….இல்லை…
எனக்கு, எனக்கே எனக்கான
எனதுதான் வேண்டும்…

ஓ! அப்படியா?
இதோ இருக்கிறதே….
அள்ளி அணைத்துக்கொள்..
உனதே உனதான
ஏகாந்தம்……

Related posts

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

Thumi2021

ஆசிரியர் பதிவு – முட்டாள்களா நீங்கள்?

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 22

Thumi2021

Leave a Comment