இதழ்-24

மேயுங்கள்….! மேய விடுங்கள்….!

ஐந்து ரூபாய்க்கு உழைப்பவனையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு உழைப்பவனையும் ஒன்றாகவா பார்க்கிறோம்? உதாரணமாக தெருவை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளர்களை எத்தனை பேர் மதிக்கிறோம்? வருமுன் காப்பதுதான் சிறந்தது என்றால் நோய் வந்த பின்பு காக்கும் மருத்துவர்களை விட எந்த வகையில் நோய் வராமலே காக்கும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் குறைந்து விட்டார்கள். அது போலத்தான் ஆள் பாதி ஆடை பாதி என்றால் எம் பாதியை நிர்ணயிக்கும் நெசவுத் தொழிலாளர்களும், அதன் அழுக்கை போக்கும் சலவைத்தொழிலாளர்களும் சமூக அந்தஸ்தை பெறாமைக்கு காரணம் என்ன?

எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அடுத்தவனை ஏமாற்றாமல், மனதுக்கு பிடித்து, தெய்வமாக மதித்து செய்யும் எந்த தொழிலும் உயர்ந்தது தான்! தேசாந்திரியாக கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்த மனிதன் ஓரிடத்தில் வாழத் தொடங்கிய போதுதான் சொத்துக்களின் ஆசை வந்தது. பலமானவர்கள் பலம் குறைந்தவர்களை மிரட்டி வேலை வாங்கினார்கள். அடிமைகள் உருவானார்கள். அதை குலம் வழியே கடத்தினார்கள். ஒடுக்கப்பட்ட இனங்கள் படும் துன்பத்தை கண்டு கண்ணீர் சிந்திய பலரும் உதிரம் சிந்தியா வது உரிமை மீட்க ஒன்றானார்கள். புரட்சிகள் வெடித்தன. கார்ல் மார்க்ஸ் போன்றவர்களின் அர்ப்பணிப்புக்களால் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால்….. ஆயிரம்தான் சொன்னாலும் பெரும்பாலான தொழில்களை இன்னும் சாதியக் கட்டமைப்புக்குள்த்தான் வைத்திருக்க முனைகிறோம். அதை உடைக்க முற்படுபவர்களோடு முரண்படுகிறோம். ஆளும் வர்க்கம் என்று தம்மை காட்டிக்கொள்ள முனைபவர்கள் இருக்கும் வரை அடிமை வர்க்கம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினம் கொண்டாடுவது முக்கியமல்ல. ஒரு தினமாவது அடுத்தவர் உழைப்பை மதிக்காமல் இருந்துவிடக்கூடாது. ந
படிப்பால், பதவியால், பணத்தால், சாதியால், நிறத்தால், இனத்தால், மதத்தால் என்று மாறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அனைவரும் உழைப்பாளிகள். அவரவர் பணிகளை அவரவர் செய்யாவிட்டால் உலகச் சங்கிலி உருக்குலைந்து விடும்.எனவே எமது மேலதிகாரியிடம் நாம் மரியாதையை எதிர்பார்ப்பது போலவே எமக்கு கீழுள்ள அதிகாரிகளையும் மதிப்பது கடமையாகிறது என்பதை உணரும் தினமாக உழைப்பாளர் தினத்தை வரவேற்போம்.

எல்லோருக்குமானது உலகம்!
நாமும் மேய வேண்டும்!
பிறரையும் மேய விட வேண்டும்!

Related posts

ஏகாதிபத்தியம் – 01

Thumi2021

சித்திராங்கதா – 24

Thumi2021

எனக்கு கொரோனாவா? -02

Thumi2021

Leave a Comment