சமயம் சார் நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும்
நாகபாம்புகள் இந்து மக்களால் வணக்கத்துக்குரிய விலங்குகளாக (நாகதம்பிரான்) கொள்ளப்படுகின்றன. இவ் ஆய்வுப்பிரதேசத்தில் அதிகளவிலான நாகதம்பிரான் கோயில்கள் அமைந்திருப்பது எடுத்துக்காட்டாகும். நாகதம்பிரான் கோயில்கள் இப்பிரதேசத்தில் பாம்புகள் சரணாலயங்களாக தொழிற்படுகின்றன. ஏனெனில் பிரதேச மக்கள் தமது விளைநிலங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கு வரும் நாக பாம்புகளை பிடித்து நாகதம்பிரான் கோயில்களில் கொண்டு சென்று விடுகின்றனர் அவர்கள் அப்பாம்புகளை கொல்வதில்லை மாறக கொண்றால் நாகதோசம் பீடிப்பதாக கிராமவாசிகள் நம்புகின்றனர்.
கோயில் கிணறுகளில் இருந்து பெரும்பாலான மக்கள் தமது குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் பிரதேச மக்கள் வீடுகளில் வீட்டுக்கிணறுகள் காணப்பட்டாலும். கோயில் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீர் தூய்மையானது என கிராம வாசிகளால் நம்பப்படுகின்றது.
இப் பிரதேச வாசிகள் பெரும்பாலும் இந்து சமயத்தை பின்பற்றுவதுடன் தமது விவசாய நடவடிக்கைகளின் போது சமயம் சார் சில பாரம்பரிய நம்பிக்கைகளை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் இயற்கையில் நிகழும் மழை வீழ்ச்சி முதலிய காலநிலை மாற்றங்கள் இறைவனால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் சிறந்த விளைச்சலைப்பெற இறைவனுடைய ஆசி அவசியமாவதாகவும் நம்புகின்றனர். அதற்காக பலவாறான பூஜை களையும் திருவிழா, பொங்கல், மடை, வேள்வி என்பன வற்றையும் நடாத்துகின்றனர்.
சரஸ்வதி பூஜை என்பது விவசாயிகள் காலநிலையை தீர்மானித்து பயிர்செய்கையில் ஈடுபடுவதில் முக்கியத்துவம் வகிக்கின்றது. அதாவது பொதுவாக விவசாயிகள் சரஸ்வதி பூஜை கும்பச்சரிவுடன் மழை வரும் என எதிர்வு கூறுவார்கள். பத்து நாட்கள் இடம்பெறும் சரஸ்வதி பூஜையின் இறுதிநாள் விஜயதசமி அன்று ஆலய பூசகரினால் பத்து நாட்கள் பூஜையில் வைக்கப்பட்ட கும்பமானது தரையில் ஊற்றப்படும் இதனைத் தொடர்ந்து மாரி மழை ஆரம்பிப்பதாக விவசாயிகள் எதிர்வு கூறுவதுடன் தமது பெரும்போக நெற் செய்கையை திட்டமிடுகின்றனர். சில வேளைகளில் மழை எதிர்வு கூறியபடி பொழியவில்லை எனின் கிராமவாசிகள் பிரத்தியேகமாக பூஜைகள், நேர்த்திக்கடன் என்பவற்றை செய்கின்றனர்.
கிராமவாசிகள் தமது அண்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்கு பஞ்சாங்கம் எனும் ஒருவகை புத்தகத்தை பின்பற்றுகின்றனர். இந் நூலானது கணித, வானியல். சாஸ்த்திர முறையில் கணிக்கப்பட்ட நூலாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பயிர் ஆக்கவியல், காலநிலை மாற்றங்களை தீர்மானித்தல். இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறுதல், வாழ்வியல் சடங்குகளை செய்வதற்கான நாட்குறித்தல் போண்றன கோயில் அந்தணரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. பஞ்சாங்கத்தை கணிப்பதற்கும் அதனை படிப்பதற்கும் பிரத்தியேக அறிவு தேவைப்படுவதுடன் சில கிராமத்தவர்கள் இத்திறமையை கொன்டு காணப்படுகின்றனர் அவர்கள் சாஸ்திரி என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
விவசாயிகளும் விவசாய கூலியாட்களும் விளைநிலங்களில் நுளையும்போது தமது செருப்புகளை அணிவதில்லை. ஏனெனில் அவர்கள் விளைநிலங்களை வணங்குகின்றனர். தானியங்களை விதைப்பதற்கு முன்னர் தேங்காய் உடைத்து ஊதுபத்தி கற்பூரம் ஏற்றி பூக்களால் சூரியனையும் இயற்கையையும் வழிபடுகின்றனர். ஏனெனில் நல்லபடியாக தாம் நடுகை செய்யும் பயிர் வளர்ந்து நல்ல விளைச்சலை தர வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர்; அதன்படி இயற்கை செய்யும் எனவும் நம்புகின்றனர்.
விவசாயிகள் தமது காணிகளில் விளையும் விளைச்சலின் ஒரு பகுதியை தமது பிரதேச கோவில்களுக்கு வழங்குவதுடன். மற்றொரு பகுதியை தமக்காக உழைக்கும் கூலியாளர்களுக்கு வழங்கப்படும் கூலிக்கு புறம்பாக பகிர்ந்தளிக்கின்றனர். விவசாயிகள் கூறும்போது தாம் தமக்காக உழைக்கும் கூலியாளர்களுக்கு அறுவடையின் ஓரு பகுதியை கொடுப்பதில் சந்தோசம் அடைவதாகவும் அவர்களின் வறுமையை போக்க தம்மாலான பங்களிப்பு எனகூறுவதுடன் தமக்கு கூலியாட்களின் உழைப்பு எப்பொழுதும் தமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறுகின்றனர்.
ஆறு ஓடும்…