இதழ்-32

கொரோனா நோயினால் வாயில் ஏற்படும் அறிகுறிகள்

கோவிட் வைரசின் நான்காவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதிப்பின் அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். 2019ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ்   [கோவிட் -19] நோயானது சுவாசத் தொகுதி [Respiratory system] , இரைப்பை குடல் [Gatrointestinal] மற்றும் நரம்புத் தொகுதி [Neurologiacl System]  போன்றவற்றினை பாதிக்கின்றது.

அது  தவிர வாய் [Oral] மற்றும் வாசனை [Olfactory] தொடர்பான தொகுதிகளையும் பாதிக்கின்றது. அதில் முக்கியமானவை சுவை இழத்தல், சளி, வாயில் எரிச்சல் உணர்வு, வாயின் மென்படலத்தில் ஏற்படும் மாற்றங்கள்( சிவப்பு புள்ளிகள்  தோன்றுதல் [படம் 1], வாய்ப்புண் தோன்றுதல், herpes simplex virus மீள தோன்றுதல், நாக்கினில் ஏற்படும் மாற்றங்கள்-geographic tongue [படம் 02] ,

முரசில் ஏற்படும் மாற்றங்கள்-Desqumative gingivitis, வாயில் வறட்சி உணர்வு ஏற்படுதல்-Dry mouth, வாயினுள் ஏற்படும் வீக்கங்கள், உதட்டினில் ஏற்படும் மாற்றங்கள்[Angular chelitis- படம் 3].

எனினும் இந்த மாற்றங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது என்று இன்னும் அறியப்படவில்லை.  SARS-COV-2 வைரஸ் பாதிப்புக்குள்ளான 60 சதவீத நோயாளிகளுக்கு  இந்த அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் குடலில் ஏற்படும் மாற்றங்களும், சுவை அற்றுப்போதலும் கோவிட்-19 இற்குரிய அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 ற்கும் சுவை இழத்தல் தவிர்ந்த வாயில் ஏற்படும் மற்றைய மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றது.

கோவிட் பாதிப்பு உள்ளானவர்களுக்கு இந்த நோயின் தீவிரத்தன்மை வெளிப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இவ்வறிகுறிகள் தென்படுவதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் [National institute of health] இதழில் வெளியாகியுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து நோய் பாதிப்பு உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. இந்த அறிகுறிகளோடு வேறு சில அறிகுறிகளையும் வைத்து கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆகவே வாயினுள் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை புறந்தள்ள வேண்டாம்.

கோவிட் வைரஸ் ஆனது இருமல் மூலமோ தொடுகை மூலமோ சுவாசம் மூலமாகவோ பேசும் பொழுதோ பரவக்கூடும். இருமும் பொழுது பேசும் பொழுது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவி வாயில் உள்ள பற்குழிகளிலும், உமிழ் நீரிலும் தங்கிக்கொள்ளும். வைரசின் பாதிப்பு அதிகரிக்கும் பொழுது வாயில் அதன் பாதிப்பு தெரியத் தொடங்கும். இந்த நோயின் மற்றைய அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் வாயில் அறிகுறிகள் காணப்படும். சுவை இழத்தலைத் தவிர வேறு அறிகுறிகள் சிலவற்றை பற்றி கீழே பார்ப்போம்,

1. உலர்ந்த வாய் [Dry mouth]– வைரசு பாதிப்பினால் உமிழ்நீர் சுரப்பிகள் வாயினுள்ளே காணப்படும் மென்படலங்களின் ஈரப்பதனை பேணுவதற்கு தேவையான உமிழ்நீரினை சுரக்காததினால் வாயில் வறட்சி உணர்வு ஏற்பட்டு துர்நாற்றமும் எரிச்சல் உணர்வும் ஏற்படும்.
வறட்சி உணர்வு போதிய அளவு நீர் அருந்தாமை, வாய் வழி சுவாசம், காலநிலை மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவாக கூட ஏற்படலாம்.

2. வாய் புண்கள் [Oral Ulcers] [படம் 4] -வாயில் நாக்கு, முரசு மற்றும் உதடுகளில் வாய் புண்கள் ஏற்படக்கூடும். வேறு காரணங்களினாலும் வாயில் புண்கள் வரக்கூடும்.

3.நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் [COVID tongue] – நாக்கின் நிறம் மற்றும் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். எனினும் நாக்கில் ஏற்படும் இந்த மாற்றங்கள் வேறு சில நோய்களினாலும் ஏற்படக்கூடும் [Geographic Toungue]. தசைகளில் ஏற்படும் மாற்றங்களினால் உண்ணும் பொழுது வலி ஏற்படக்கூடும் [Dysgeusia]. நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் கோவிட் வைரஸின் நேரடி தாக்கத்தினால் அல்லது நிர்பீடனக்குறைபாடினால் [Immune deficency] ஏற்பட்டு இருக்க கூடும் அல்லது வாயினுள் உள்ள பங்கசு[Fungus] போன்ற நுண்ணங்கிளால் ஏற்பட கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளது. [படம் 5]

கோவிட் வைரசு பாதிப்புக்கு இதுவரை தெளிவான அறிகுறிகள் என திட்டவட்டமாக கூற முடியவில்லை. உங்கள் உடம்பில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தேவைப்பட்டால், உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களை கோவிட் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.

Related posts

சிங்ககிரித்தலைவன் – 30

Thumi2021

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 06

Thumi2021

அழகான ராட்சசியே!

Thumi2021

Leave a Comment