செய்தி துளிகள்
- கத்திக்குத்து தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையிலான டீ-ஷேர்ட்டுக்களை இங்கிலாந்தை சேர்ந்த பி.பி,எஸ்.எஸ் ஆயுத உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த சிறப்பு டி-ஷர்ட்டை தயாரிக்க கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- உலகின் முதல் குறுஞ்ச்செய்தியான `Merry Christmas` வோடபோன் நிறுவனத்தினால் 107000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளது.
கெவ்லே ஆடும் கிறிஸ்துமஸ் பண்டிகையும்
கெவ்லே ஆடு ஸ்வீடன் நாட்டின் கிறிஸ்துமஸ் சின்னமாகும். ஸ்வீடனின் கெவ்லே என்ற நகரில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸை முன்னிட்டு வைக்கோலினால் ஆடு ஒன்று வடிவமைக்கப்படும். இதுவே கெவ்லே ஆடு என்று அழைக்கப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு இந்த வைகோல் ஆடு கெவ்லே நகரத்தில் முதன்முதலாக நிறுவப்பட்டது. இந்த ராட்சத கெவ்லே ஆடு 42 அடி உயரமும் 3.6 டன் எடையும் கொண்டது. உலகின் மிகப் பெரிய வைக்கோல் ஆடு என்று கின்னஸ் புத்தகத்திலும் கெவ்லே ஆடு இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கெவ்லே ஆடு அமைக்கப்படும்போது அந்த ஆட்டின் மீது தாக்குதல் நிகழ்வதும் தொடர்கதையாகிறது. 1966-ஆம் ஆண்டு முதலே கெவ்லே ஆட்டின் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று கெவ்லே ஆட்டிற்கு தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது.
எதுவாகினும் பல தாக்குதல்களை கடந்து, ஸ்வீடன் மக்களின் கிறிஸ்துமஸின் சின்னமாகக் கருதப்படும் கெவ்லே ஆடு மிளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த ஆண்டும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
வறட்சியின் கொடுமை; கென்யாவில் பரிதாபம்
கென்யாவில் கடும் வறட்சியால் வனவிலங்குகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் குடிக்க தண்ணீர் இன்றி 6 ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இடத்தில் விழுந்து இறந்துள்ள புகைப்படம் . சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.
இதேவேளை கென்யாவின் கரிசா பிராந்தியத்தில் மேலும் 4000 ஒட்டகச்சிவிங்கிகள் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.